சனி, 9 ஜூலை, 2016

கர்நாடகா.. மூட நம்பிக்கை தடை சட்டம்: பீதியால் நிறுத்திய முதல்வர்

பெங்களூரு:'கர்நாடகா பலி மற்றும் இதர அவல நடைமுறைகள், அகோரி நடைமுறைகள் மற்றும் மாயமந்திரத்தை நிர்மூலமாக்கும் சட்டம் - 2016' மசோதாவுக்கு அமைச்சர் களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. இதில், 'கர்நாடக பலி மற்றும் இதர அவல நடைமுறை கள், அகோரி நடைமுறைகள் மற்றும் மாய மந்திரத்தை நிர்மூலமாக்கும் சட்டம் - 2016' தொடர்பாக, விரிவாக விவாதித்து அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்விஷயம், நேற்றைய அமைச்சரவை கூட்டத் தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களின் பட்டியலிலும்இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த சட்டத்துக்கு பொது மக்கள், மடாதிபதிகள் உட்பட, மற்ற துறைகளின் முக்கியஸ்தர்களிடமிருந்து பரவலாக எதிர்ப்பு கிளம்பியதால், இச்சட்டம் பற்றி விவாதிக்க அமைச்சரவை முன்வரவில்லை.  பகுத்தறிவு கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு இருந்தே தீரும் ஆனாலும் அவற்றை அமுல் படுத்த வேண்டும். மதவெறியர்களுக்கு அடிபணியக்கூடாது 


அவதிப்பட வேண்டாம்:

தேவையின்றி, விவாதங்களை இழுத்து விட்டு கொண்டு அவதிப்பட வேண்டாம். அதுமட்டுமின்றி, அமைச்சரவை கூட்டத்தில் சில அமைச்சர்கள், மூட நம்பிக்கை தடை மசோதா பற்றி அதிருப்தி தெரிவித்ததால், இந்த விஷயத்தை தள்ளி வைப்பது நல்லது என்றும் அரசு முடிவு செய்துள்ளது.

தள்ளி வைப்பு:

மங்களூரு டெபுடி எஸ்.பி., கணபதி, சிக்மகளூரு டெபுடி எஸ்.பி., கல்லப்பா ஹன்டிபாக் ஆகி யோரின் தற்கொலை, டெபுடி எஸ்.பி., அனுபமா ஷெனாய் ராஜினாமா உட்பட பல விஷயங்களால், அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் மூட நம்பிக்கை தடை சட்டத்தை கொண்டு வந்து, மற்றொரு சர்ச்சைக்கு வாய்ப்பளிப்பது நல்லதல்ல என, சித்தராமையாவின் ஆலோசனையின்படி, இம்மசோதா விஷயமே தள்ளி வைக்கப்பட்டது.இதுதவிர, இதர ஒன்பது விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது   தினமலர்.com

கருத்துகள் இல்லை: