சனி, 28 நவம்பர், 2015

தோழர் கோவன் கலைஞரை சந்தித்ததை ஏன் விமர்சிகிறார்கள்? ஜாதி ஜாதி ....

12279121_1094048800607324_2725703425716751393_n
தோழர் கோவன், கலைஞரை சந்தித்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள், திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாகக் கொண்ட பலரும்.
கோவன் கைது செய்யப்பட்டபோது, அன்றே – முதலில் அதைக் கண்டித்துக் கைதை பிரச்சினையாக்கி மய்ய அரசியலுக்குத் தள்ளியவர் கலைஞர் தான். அவர் கண்டிக்காமல் இருந்திருந்தால், அது ஒரு துண்டு செய்தியாககூட ஊடகங்களில் வந்திருக்காது.
அதன் பிறகே பலரும் அதைக் கண்டித்தார்கள். அது இந்தியா வரை கவனத்திற்குப் போனதற்குத் திமுக வின் கண்டனமே காரணம்.
தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தும்போது அதை ஊடங்கள் பத்து பைசாவிற்குக்கூட மதிப்பதில்லை.
அந்த அடிப்படையில் பார்த்தால் மக்கள் அதிகாரம் குழுவினரும் தோழர் கோவனும் கலைஞரை தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்திருக்க வேண்டும். அதனால் கலைஞரை கோவன் சந்தித்தது சரியான அரசியல் கண்ணோட்டம் தான்.

மதுஒழிப்பில் கூட ஜாதி பார்ப்பவர்கள், அதாகப்பட்டது தன் ஜாதித் தலைமை பேசுகிற மது ஒழிப்பை மட்டும் ஆதரிப்பவர்களும் கூடக் கோவன் – கலைஞர் சந்திப்பைக் கண்டிப்பது வேடிக்கை. இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை.
இப்போதும் டாஸ்மாக் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து தீவிரமாகச் செய்கிறவர்கள் கோவன் பங்கெடுத்திருக்கிற மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான்.
கட்சி சாராமல், உதிரிகளாக டாஸ்மாக் ஒழிப்புப் பேசுகிறவர்கள், இயங்குகிறவர்கள் ஏன் இவர்களோடு சேர்ந்து இயங்குவதில்லை?
உண்மையில் டாஸ்மாக் ஒழிப்பு தான் நோக்கமா அல்லது அதைத் தன் ஜாதித் தலைமை அல்லது ‘அவரு’ ஜாதியை சேர்ந்தவர்கள் நன்கொடை தருகிறார்கள் அதனால் அவரை மட்டும் தான் ஆதரிப்போம் என்ற மனோபாவமா? மதிமாறன்.wordpress.com

கருத்துகள் இல்லை: