புதன், 25 நவம்பர், 2015

ஆமிர் கான் கூறியதை கேஜ்ரிவால் ஆமோதிக்கிறார் ...நாட்டில் அசாதாரண நிலைமை...பாதுகாப்பில்லை ..

கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சகிப்பின்மை காரணமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மாட்டுக்கறி வைத்திருந்ததன் பேரில் முஸ்லீம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.மும்பையில், பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசைக்கச்சேரி நடத்த இருந்ததற்கு சிவ சேனா எதிர்ப்பு தெரிவித்தது. எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டனர். க்ரிஷ் கர்நாட்டிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறியது.;இந்நிலையில், சில தினங்கள் முன்பு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் பேசும்போது, "இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாதுகாப்பு இல்லாத அசாதாரண நிலை நிலவுகிறது. பாதுகாப்பில்லாத சூழலை மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர்.சில நாள்கள் முன்பு என் மனைவி கிரண் என்னிடம், நாம் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். கிரண் பயப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை" என்று கூறியிருந்தார்webdunia.com

கருத்துகள் இல்லை: