வியாழன், 31 ஜூலை, 2014

கும்பகோணம் :11 பேர் விடுதலை: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் கொந்தளிப்பு

தஞ்சாவூர்: 'கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், ஆசிரியர்கள் உட்பட, 11 பேரை விடுதலை செய்து, தஞ்சை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் மனம் திருப்தியளிக்கவில்லை' என, விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர் கொந்தளித்தனர்.தீ விபத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று காலை, 7:00 மணி முதலே நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். அசம்பாவித சம்பவம் நடப்பதை தடுக்கும் விதமாக, நீதிமன்ற வளாகம் முன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  குழந்தைகளை வெளியே விடாமல் தடுத்த மிக முக்கிய குற்றவாளிகளை விடுவித்தது மிக பெரிய தவறு. நாட்டாம தீர்ப்ப மாத்து அரசு தரப்பில் போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், குற்றஞ்சாட்டப்பட்ட, 21 பேரில் 11 பேரை விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நீதிபதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்ற அரசின் சூழ்ச்சி தான் இதன் பின்னணியில் தெரிகிறது. சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரிகளை அப்போதே பதவி நீக்கம் செய்திருந்தால் அவர்களின் அதிகாரம் தண்டனையியிலிருந்து தப்ப விட்டிருக்காது
துப்பாக்கி ஏந்திய போலீசார், நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீதிமன்ற பணி துவங்கியதும், காலை, 11:20 மணிக்கு நீதிபதி முகம்மது அலி தீர்ப்பளித்தார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து குறித்து, அரசு தரப்பில் போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், குற்றஞ்சாட்டப்பட்ட, 21 பேரில், 10 பேர் குற்றவாளிகள் என்றும், 11 பேரை விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். 'பள்ளிக் குழந்தைகள், 94 பேர் தீயில் கருகி பலியாக காரணமாக இருந்த வகுப்பாசிரியர்கள் தேவி, தனபால் உள்ளிட்ட, 11 பேர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு, மனநிறைவளிக்கவில்லை இந்த தீர்ப்பு, வேதனையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது' என, விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொந்தளித்தனர். விடுதலையானவர்களுக்கு தாங்களே தண்டனை கொடுக்கப் போவதாக, சில பெற்றோர் ஆவேசத்துடன் கூறினர். சிலர், இந்த தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக, தெரிவித்தனர்.

சோனியா, பிரியங்கா என்ற, இரு பேரக்குழந்தைகளை பறிகொடுத்த சரோஜா: கும்பகோணம் நகராட்சி பள்ளியில், ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். காங்கிரஸ் கட்சியில், ஆறாவது வார்டு தலைவராக பதவி வகித்துள்ளேன். என் மகளுக்கு திருமணமாகி, புதுக்கோட்டை மாவட்டம், வல்லந்திராக்கோட்டை அருகே வசித்து வருகின்றனர். பேத்திகள் இருவருக்கும் சோனியா, பிரியங்கா என, நானே பெயர் சூட்டினேன்.இருவரையும் என் வீட்டில் தங்கவைத்து, கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் படிக்க வைத்தேன். பள்ளி தீ விபத்தில், இரு குழந்தைகளும் பலியாகினர். 10 ஆண்டு கடந்தும், அந்த அதிர்ச்சியிலிருந்து, நான் இதுவரை மீளவில்லை. குற்றவாளிகள் அனைவருக்கும், தூக்கு அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் என, எதிர்பார்த்தேன். ஆனால், 11 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. எனக்கு அநீதி கிடைத்துள்ளது. தண்டனையிலிருந்து தப்பியுள்ள ஆசிரியர்களுக்கு, நானே தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

குழந்தையை பறிகொடுத்த சூரியகுமாரி:பள்ளியில், 4ம் வகுப்பில் படித்த, என் மகள் கார்த்திகா, 9, தீ விபத்தில் பலியானார். மகளை இழந்த துயரத்தில் இருந்து, இதுவரை நானும், என் குடும்பத்தினரும் மீளவில்லை. ஆசிரியர்கள் நினைத்திருந்தால் ஆளுக்கு, 10 குழந்தைகளையாவது காப்பாற்றியிருக்கலாம். சம்பவம் நடந்த அன்று, ஆடி வெள்ளி என்பதால், வகுப்புகளை பூட்டி விட்டு, ஆசிரியர்கள் பலர் கோவிலுக்கு சென்றுவிட்டனர். அதனால் தான், தீ விபத்து ஏற்பட்டதும், வகுப்புகளை விட்டு வெளியேற முடியாமல், குழந்தைகள் அனைவரும் தீயில் கருகியுள்ளனர். வழக்கிலிருந்து ஆசிரியர்கள் உட்பட, 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை, எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.பள்ளி தாளாளர் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட, 10 பேருக்கும் குறைந்தபட்ச தண்டனை தான் வழங்கப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் என, எதிர்பார்த்த எங்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். dinamalar.com

கருத்துகள் இல்லை: