வெள்ளி, 26 டிசம்பர், 2014

கலைஞர் அதிரடி: அவசர இன்சுரன்ஸ் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி அளிக்க கூடாது!

DMK chief M Karunanidhi The former Tamil Nadu chief minister appealed President Pranab Mukherjee not to grant approval to the ordinance. Karunanidhi recalled that BJP as an opposition party had strongly opposed the insurance reforms and argued that there won't be any assurance that the investing firms will (dnaindia.com -சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள இன்சூரன்ஸ் அவசர சட்டத்துக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அதற்கு குடியரசு  தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்க கூடாது என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:மத்திய பாஜக ஆட்சியில்  அன்னிய முதலீட்டுக்கு அதிக வரவேற்பு அளிக்கப்படுகிறதே என்ற ஒரு கேள்விக்கு நான் பதிலளிக்கும்போது, அந்நிய முதலீட்டுக்கு வரவேற்பு, அரசு நிறுவனங்களின்  பங்குகள் தனியாருக்கு விற்பனை, பாதுகாப்புத் துறைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதற்குக் கூட தனியார் மயம் போன்ற நடவடிக்கைகள்  பிற்போக்குத்தனமானவை. நமது பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்திடக் கூடியது என்று கருத்து தெரிவித்திருந்தேன்.இந்தக் கருத்துக்கு மாறாக, இன்சூரன்ஸ்  துறையில் அன்னிய மூலதனத்தை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் இந்த அவசர  சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்


நாடாளுமன்றத்தில், மாநிலங்களவையில் இதற்குரிய மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற முடியாத நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன், அவசரச்  சட்டம் என்ற பெயரால் இதை பாஜ அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது நாடாளுமன்றத்தின் புனிதத்துவத்தையே மீறுகின்ற செயலாக ஆகிவிடும்.
2008ம் ஆண்டு இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, 2011ல் நிலைக்குழு தனது அறிக்கையை அளித்த போது, அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்த  வேண்டாம் என்பது நிலைக் குழுவின் தலைவராக பாஜ வின் யஷ்வந்த் சின்கா உட்பட ஒட்டுமொத்த அனைவரின் கருத்தாக முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு  யஷ்வந்த் சின்கா காரணம் கூறும்போது, ‘‘காப்பீட்டுத் துறையில் நான் தான் முதன்முதலாக தனியாரை அனுமதித்ததன் மூலமாக இந்தியாவுக்கு நிறைய அன்னிய  நேரடி முதலீடு வரும் என்று நினைத்தேன்.

தனியார் வந்தால் கிராமப்புற மக்களுக்கு இன்சூரன்ஸ் வசதிகள் கிடைக்கும். சலுகை விலையில் காப்பீடு வரும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் கடந்த 15  ஆண்டுகளில், தனியார் கம்பெனிகளால் நான் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை என அப்போது அவர் சொன்னார். ஆனால் அதே கட்சியின் ஆட்சியிலே எதிர்முறை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியா தான், அதிகமான தனிநபர் சேமிப்புகளை கொண்ட நாடு. நம் மக்களின் சேமிப்பு, பன்னாட்டு  முதலாளிகளுக்கு மூலதனமாக மாறிவிடும். அவர்களுக்கு நெருக்கடி வந்தால், இந்தப் பணத்தை எடுத்து செல்ல மாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும்  கிடையாது. குறிப்பாக இன்சூரன்ஸ் துறைக்கு அன்னிய முதலீடு தேவையே இல்லை. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 450 கோடி ரூபாயை மின்சாரத் துறைக்கு முதலீட்டுத்  தொகையாக எல்.ஐ.சி. தான் அளித்துள்ளது.

தங்களது ரூ.10 ஆயிரம் கோடி தேவைக்கு எல்.ஐ.சி.யையே நம்புவதாக இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவரே கூறியிருக்கிறார். இந்திய ரயில்வே நிதிக்  கழகத்தின் சொத்துகளில் எல்.ஐ.சி. பெரும் பங்குகளை முதலீடு செய்துள்ளது. இப்படி ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு ஜீவ ஊற்றாக பொதுத் துறை இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் இருக்கும் போது அந்நிய முதலீட்டுக்காக மத்திய அரசு ஏன் அலைய வேண்டும்? இந்த மசோதாவினை மாநிலங்களவையில் நிறைவேற்றிய மத்திய  அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மத்திய அரசு கொல்லைப்புற வழியாக அவசரச் சட்டம் கொண்டு வர முயலுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தைக்  கேலிக் கூத்தாக்கி விடும். எனவே இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் இதற்கான அவசரச் சட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது  என்று திமுகவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: