புதுவை அரவிந்தர்
ஆசிரம பெண் லதா (வயது 39) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது சகோதரிகள்
மற்றும் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காலாப்பட்டு
கடற்கரைக்கு சென்றபோது தன்னை 2 பேர் கற்பழித்ததாக காலாப்பட்டு போலீசில்
புகார் செய்திருந்தார். மேலும் தனது கையில் அணிந்திருந்த பஞ்சலோக மோதிரம்
மற்றும் வெள்ளி மோதிரம் உள்பட 5 மோதிரங்களை காணவில்லை என்றும் புகாரில்
கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் யார்? யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான பிள்ளைச்சாவடியை சேர்ந்த ராஜி (35), விஜயகுமார் (33) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் ஆசிரம பெண் லதாவை கற்பழித்ததை ஒத்துக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 மோதிரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
ஆசிரம பெண்ணை கற்பழித்தது குறித்து கைதான இருவரும் போலீசாரிடத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் இருவரும் தினமும் அதிகாலை வேளையில் காலாப்பட்டு கடற்கரைக்கு சென்று நண்டு பிடித்து விற்பனை செய்து அந்த பணத்தில் மதுகுடிப்போம். அதிகாலை வேளையில் கடும் குளிர் என்பதால் நாங்கள் சாராயம் குடித்துவிட்டு மேலும் சாராயத்தை வாங்கி செல்வோம். அதுபோல் கடந்த 18–ந் தேதி அதிகாலை சாராயம் வாங்கி கொண்டு காலாப்பட்டு கடற்கரைக்கு நண்டு பிடிக்க சென்றோம்.
அப்போது வெளிநாட்டு பெண் போல் ஒரு பெண் ஈரத்துணியுடன் கடற்கரையோரம் மயங்கி கிடந்தார். நாங்கள் அந்த பெண்ணை உற்று பார்த்தபோது அவர் தண்ணீர் தண்ணீர் என்று முனங்கினார். உடனே நாங்கள் வைத்திருந்த சாராயத்தை அவர் வாயில் ஊற்றினோம். இதனால் அந்த பெண் போதையில் மீண்டும் மயங்கி போனார்.
அப்போது அந்த பெண் அணிந்திருந்த உடைகள் அளங்கோலமாக இருந்ததால் எங்களுக்கு அந்த பெண்ணை அனுபவிக்க ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை ஒரு மறைவான இடத்துக்கு தூக்கி சென்றோம். அப்போது எங்களுக்கு போதை இறங்கிவிட்டதால் மீண்டும் சின்னகாலாப்பட்டில் உள்ள சாராய கடைக்கு சென்று சாராயம் குடித்துவிட்டு வந்தோம். பின்னர் அந்த பெண்ணை நாங்கள் இருவரும் மாறி மாறி கற்பழித்தோம். அந்த பெண் அணிந்திருந்த மோதிரங்கள் விலை உயர்ந்த மோதிரங்களாக இருக்கலாம் என கருதி அதனை எடுத்துக் கொண்டோம்.
அதன்பிறகு நாங்கள் போலீசுக்கு பயந்து 2 நாட்களாக கடற்கரைக்கு நண்டு பிடிக்க செல்லவில்லை. மேலும் தலைமறைவாக இருந்து வந்தோம். எப்படியோ போலீசார் துப்பு துலக்கி எங்களை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக