புதன், 24 டிசம்பர், 2014

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 32 முஸ்லிம்களை நிறுத்திய பாஜக! ஒருவர் மட்டுமே வெற்றி!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 32 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியிருந்தது. இதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும் பாஜக 25 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.  இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40% முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது. அதாவது 32 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியது. இதில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 25 பேர் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களில் அபுல் கனி கோஹ்லி என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து 2 மாதங்களுக்கு முன்னர் வெளியேறி பாரதிய ஜனதாவில் இணைந்திருந்தார் அப்துல்கனி கோஹ்லி. இவர் ரஜோரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கலகோட் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த ராஸ்பால்சிங்கை 6,178 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார்
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: