சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட
அவர், சிகிச்சை பலனின்றி 23.12.2014 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு
வயது 84.மேடை
நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த கே.பாலச்சந்தர் 1965-ல்
வெளியான நீர்க்குமிழி மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்தவர்.மனித
உறவுச் சிக்கல்களுடன் சமூகப் பார்வை கொண்ட எதிர் நீச்சல், சிந்து பைரவி,
அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம்
சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை உள்ளிட்ட படைப்புகளைத்
தந்தவர்.திரைப்படத்
துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, கே.பாலச்சந்தருக்கு 1987-ல் மத்திய
அரசின் பத்மஸ்ரீ விருதும், 2010-ல் தாதா சாகேப் பால்கே விருதும்
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக