ஆதீனம் - நித்யானந்தா மோதல் தங்க கீரீடம், செங்கோல் யாருக்கு?
162 தங்க காசுகள் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை மடத்திலிருந்து செல்லும்
போது நித்யானந்தா எடுத்துச் சென்றுவிட்டார். பென்ஸ் காரும் அவர் வசம்
உள்ளது. அதை கோவையில் உள்ள சர்வீஸ் சென்டரில் நிறுத்தி வைத்துள்ளார். அது
தொடர்பான ஆவணங்களை என்னிடம் ஒப்படைக்கவில்லை.
மதுரை ஆதீனம், நித்யானந்தா இடையே தங்க கிரீடம், செங்கோல் யாருக்கு
என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலியல்
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவை கடந்த 19ம தேதி இளைய மடாதிபதி
பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்து மதுரை ஆதீனம் அதிரடி நடவடிக்கை
எடுத்தார். இதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து உருவாக்கிய அறக்கட்டளை
கலைக்கப்பட்டு, ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டது. dinakaran.comஇளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட போது பெங்களூரில் இருந்து நித்யானந்தா கொண்டு வந்திருந்த அனைத்து ஆடம்பர பொருட்களும் மூலையில் தூக்கி போடப்பட்டது. அதை நித்யானந்தா ஒரு வாரத்தில் எடுத்து செல்லும்படி ஆதீனம் கெடு விதித்து இருந்தார். அதன்படி ஆதீன மடத்தில் மதுரை விளக்கு தூண் போலீசார் முன்னிலையில் நித்யானந்தாவின் பொருட்கள் அனைத்தும் மூட்டை கட்டி 3 லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன.இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர் ரிஷி உட்பட சிலர் ஆதீன மடத்திற்கு வந்து நித்யானந்தாவின் தங்க கிரீடம், வெள்ளி செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் மடத்தில் உள்ளது. அதை ஒப்படைக்க வேண்டும் என அருணகிரிநாதரிடம் கேட்டனர். அதற்கு அவர், எனக்கு கனகாபிஷேகம் நடந்த போது, 162 தங்க காசுகள் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை மடத்திலிருந்து செல்லும் போது நித்யானந்தா எடுத்துச் சென்றுவிட்டார். பென்ஸ் காரும் அவர் வசம் உள்ளது. அதை கோவையில் உள்ள சர்வீஸ் சென்டரில் நிறுத்தி வைத்துள்ளார். அது தொடர்பான ஆவணங்களை என்னிடம் ஒப்படைக்கவில்லை. இது தவிர அவரை ஆதீன வாரிசாக நியமித்த சில ஆவணங்களும் அவரிடம் உள்ளன. அதையும் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு தங்க கிரீடமும், செங்கோலும் திரும்ப வழங்கப்படும் என ஆதீனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நித்யானந்தா சீடர்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக விளக்குத்தூண் காவல் நிலையத்தில் நித்யானந்தா சீடர்கள் புகார் செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக