ஞாயிறு, 28 அக்டோபர், 2012

சின்மயி புகார், அவருக்கே பூமராங் ஆகலாம்! பழைய பதிவுகள் கிளம்புகின்றன!


Viruvirupu
பாடகி சின்மயி விவகாரத்தில், கதை பூமராங் ஆகி, அவர்மீதும் சில சிக்கல்கள் வந்து சேரலாம் என்று தெரிகிறது. ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் சின்மயி போட்ட பழைய பதிவுகளையும் கிளறத் தொடங்குகிறது போலீஸ்.
சின்மயி 6 பேரை குற்றம் சாட்டி போலீஸூக்கு போனபோது, தம்மை பற்றி அவர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் போட்ட பதிவுகளை ஆதாரமாக கொண்டுபோய் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில்தான், தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரி உதவிப் பேராசிரியர் சரவணக்குமாரை கைது செய்தது போலீஸ்.
சின்மயி பற்றி தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட பதிவுகள் அவை. அவரையும் அவரது தாயாரையும் ஆபாசமாக வர்ணிக்கும் சில பதிவுகளே, போலீஸை உடனடி ஆக்ஷன் எடுக்க வைத்தது.
அதன்பின், அவிநாசியைச் சேர்ந்த ராஜமணாளன் என்ற ராஜன் கைதானது வேறு ட்ராக்கில் ஓடும் கதை. அதில் லேசாக அரசியல் இருக்கிறது.
தற்போது, சின்மயிக்கு எதிராக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

சின்மயி புகார் கொடுத்தபோது, ஆதாரமாக மற்றையவர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் போட்ட பழைய பதிவுகளை எப்படி ஆதாரம் காட்டினாரோ, இப்போது, சின்மயிக்கு எதிராக வரும் புகார்கள், சின்மயி ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் போட்ட பழைய பதிவுகளை ஆதாரமாக கொண்டு வருகின்றன.
சின்மயி எழுதியதாக குறிப்பிடப்படும் சில பதிவுகளை, நாமும் பார்க்க நேர்ந்தது. சில விஷயங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளும் அவற்றில் உள்ளன. இந்த விவகாரம் வெளியே முடிக்கப்படா விட்டால், இரு தரப்புக்கும் டேமேஜ் ஏற்படும் என்றே தெரிகிறது.
சின்மயி எழுதியதாக குறிப்பிடப்படும் சில பதிவுகள் பற்றி போலீஸூம் தெரிந்து வைத்துள்ளது. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ் இது தொடர்பாக, “புகார் கொடுப்பவர்கள் தாங்கள் வெளியிட்ட பதிவுகளை மறைத்து விட்டு, தங்களுக்கு எதிரான பதிவுகளை மட்டும் ஆதாரமாகக் காட்டி புகார் அளித்தால், எங்களால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்துவிட கூடாது.

கருத்துகள் இல்லை: