சன் டிவி சீரியலில் நடிப்பவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிதான் சூப்பர் குடும்பம். சனிக்கிழமைதோறும் இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மருதாணி, முத்தாரம், அழகி வரை 18 சீரியலைச் சேர்ந்த நடிகர், நடிகையர்கள் உள்ளிட்ட அத்திப்பூக்கள் குடும்பத்தில் இருந்து வந்த கற்பகம் பாட்டு என்ற பெயரில் பாடினார். இதனால் டென்சனான நடுவர் கங்கை அமரன், கற்பகம் பாடியதை பாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கமெண்ட் செய்தார்.
தனது பங்காக 5 மதிப்பெண் மட்டுமே வழங்கினார். மற்ற நடுவர்கள் மீனா, சுகன்யா ஆகியோர் 6 மதிப்பெண் வழங்கினார்.
தனக்கு மதிப்பெண் குறைவாக வழங்கப்படுவதாக கற்பகம் குற்றம் சாட்டினார். இதைக்கேட்ட கங்கை அமரன் என்ன மதிப்பெண் கொடுக்க வேண்டுமே அதைத்தான் கொடுத்திருக்கிறோம் என்றார்.
அப்பொழுதும் கற்பகம் சமாதானம் அடையவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷர்மிளா, கற்பகத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நமக்கு என்ன வருமோ அதை சரியாக செய்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றும் தன்னுடைய ஆட்சேபத்தை தெரிவித்தார்.
திருமதி செல்வம் காவ்யா
இந்த கலாட்டா முடிந்த உடன் திருமதி செல்வம் காவ்யா நடனமாடினார். இந்த நடனத்திற்கு செல்லமே குழுவில் இருந்த சிநேகா ஓடிவந்து கட்டியணைந்து பாராட்டினார்.
நடுவர்கள் மீனாவும், சுகன்யாவும் பாராட்டி ஆளுக்கு 8 மதிப்பெண்களை வழங்கினர். ஆனால் கங்கை அமரன் 7 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கினார். இதற்கு காவ்யா அதிருப்தி தெரிவித்தார். காவ்யா நன்றாகத்தான் நடனமாடினார் என்று காவ்யாவிற்கு ஆதரவாக செல்லமே குடும்பத்தைச் சேர்ந்த வாசு பேசினார். உடனே நடுவர் கங்கை அமரனுக்கு கோபம் வந்துவிட்டது. நல்ல நடுவராக போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அரங்கத்தை விட்டு வெளியேறினார்.
உடனே அனைவருமே செய்வதறியாது திகைத்தனர். வாசுவின் கருத்துக்கு சுகன்யா எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் நடுவர்கள் மீனாவும், சுகன்யாவும் கங்கை அமரனை சமாதானம் செய்தனர். காவ்யாவும் தன்னுடைய பேச்சிற்கு வருத்தம் தெரிவிக்கவே கங்கை அமரன் மீண்டும் அரங்கிற்கு வந்தார். எல்லோரும் அவரை பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
ரியாலிட்டி ஷோக்களில் இதுபோன்ற கலாட்டாக்கள் நடைபெறுவது வாடிக்கைதான். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் நடுவராக பங்கேற்ற சிம்பு அழுதுகொண்டே வெளியேறினார். நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரிக்க இதுபோன்ற பல நாடகங்கள் அரங்கேறுவது வழக்கம். கங்கை அமரன் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும் என்கின்றனர் ரசிகர்கள் http://tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக