ஐதராபாத்: மொழி பிரச்னையால் சவுத் படங்களை ஏற்க பயம் என்றார் நேகா
சர்மா. ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ், மலையாளத்தில்
மொழிமாற்றம் செய்து ரிலீஸ் ஆகிறது. அவர் நடித்த பழைய படங்களுக்கும் மவுசு
ஏற்பட்டுள்ளது. புரி ஜெகநாத் இயக்கிய ‘சிறுத்தா’ என்ற படம் தமிழில்
‘சிறுத்தை புலி’ என்ற பெயரில் ரிலீஸ் ஆக உள்ளது. பாலிவுட் நடிகை நேகா சர்மா
ஹீரோயின். அவர் கூறியதாவது: தென்னிந்திய படங்களில் நடிப்பேன் என்று
நினைத்துப் பார்க்கவில்லை. புரி ஜெகநாத் இயக்கிய சிறுத்தா படத்தில் நடிக்க
கேட்டபோது பயந்தேன். காரணம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி
எதுவும் எனக்கு தெரியாது.
இப்படம் ஆக்ஷன் பின்னணியில் அமைந்ததால் அதிக வசனங்கள் பேச வேண்டிய தேவை இல்லை.
தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடந்ததால் அதிக பயணம் மேற்கொண்டேன். நடனம், சண்டை காட்சிகளில் நடித்தேன். ஹீரோ ராம் சரண் தேஜா இப்படத்தில் பங்குபெற்ற குங்பூ சண்டை காட்சியை மறக்க முடியாது. சுமார் 7 நிமிடம் படத்தில் இடம்பெறுகிறது. பாங்காக்கில் இதன் ஷூட்டிங் நடந்தது. படத்தில் இடம்பெறும் த்ரில்லான சண்டை காட்சிகளில் இதுவும் ஒன்று. கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி 30 நிமிடங்கள் இடம்பெறுகிறது. இயக்குனர் புரி ஜெகநாத்தின் அனுபவத்தை ஒவ்வொரு காட்சி படமாக்கும்போதும் உணரமுடிந்தது. மணி ஷர்மா இசை. ஷாம் கே.நாயுடு ஒளிப்பதிவு. இவ்வாறு நேகா சர்மா கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக