வாஷிங்டன்: அமெரிக்கா வரும் விஐபிக்களிடம் குடியுரிமை சோதனை நடத்தியே
தீருவோம் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலக
நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். அமெரிக்கா செல்லும் விஐபிக்களை விமான
நிலையத்தில் தீவிர சோதனை நடத்துகின்றனர். இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம் உள்பட பல விவிஐபிக்களை சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்தி நடிகர் ஷாருக்கான்
நியூயார்க் சென்ற போது, அவரையும் பல மணி நேரம் அதிகாரிகள் பிடித்து
வைத்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர். இதுகுறித்து
அமெரிக்க அரசின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா வரும் விஐபிக்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் சோதனை நடத்துவோம். இதில் யாருக்கும் விதிவிலக்கல்ல. தூதரக அளவில் விலக்கு அளிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே விமான நிலையங்களில் சோதனை நடத்த மாட்டோம் என்று குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு துறை நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சோதனை நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பாதுகாப்பு உள்ளது என்பதை இங்கு வரும் மக்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த சோதனை. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக