செவ்வாய், 22 மே, 2012

வெளிநாட்டு விலைமாதுக்களின் கூடாரம் இந்தியா

ஒரு அதிர்ச்சி சுற்றுலா ரிப்போர்ட்

 இந்தியர்கள் கலாச்சாரம், பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற உயர்வான எண்ணம் உலக நாடுகள் மத்தியில் உள்ளது. அதேபோல் கோயில், புராதான சின்னங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், நம்மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப வாழ்வு, ஆன்மீகத்தை பற்றி வெளிநாடுகளில் இந்திய அரசு செய்யும் சுற்றுலா தொடர்பான விளம்பரங்கள் நம்நாட்டை நோக்கி அதிகளவிளவில் மக்களை வர வைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவுக்கு அந்நிய செலவாணியை வாரி வழங்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. ஆண்டு தோறும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
2000- ல் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சம். அதுவே கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாகி 2009ல் 51,67,699 லட்சமாகவும், 2010ல் 55,83,746 லட்சம் வந்ததாக இந்திய சுற்றுலா துறை தகவல் தெரிவிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 1 கோடி பேர் வருகை தருவார்கள் என இந்திய அரசின் புள்ளிவிவரம் மகிழ்ச்சி தெரிவிக்கிறது.
அதேபோல், இப்பயணிகளால் ஆண்டு தோறும் அந்நிய செலவாணியும் உயர்ந்து வருவதாக இந்திய பொருளாதார அறிக்கைகள் சொல்கின்றன. 2009ல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நமது அரசுக்கு கிடைத்த வருமானம் 54,960 ஆயிரம் கோடி. 2010ல் 64,889 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இப்படி இந்தியாவுக்கு கோடி கோடியாய் கொட்டும் வருமானம் ஒரு புறத்தில் வந்தால் சுற்றுலா பயணிகள் ரூபத்தில் இந்தியாவுக்குள் வரும் கால் கேள்ஸ் எனப்படும் விலைமாதுக்கள் தினமும் இந்தியாவில் லட்சங்களில் சம்பாதித்து அதை கறுப்பு பணமாக ஹவாலா முறையில் தங்களது நாடுகளுக்கு கொண்டும் போகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிறது.
நமது நாட்டில் விபச்சாரம் என்பது சட்டப்படி தவறு. அதனால், சில ஆண்டுகள்க்கு முன்பு வரை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், பணக்கார குடும்ப இளைஞர்கள், மிகப்பெரிய நிறுவன அதிகாரிகள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், உயர் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ஜாலியாக இருக்க பாங்காங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, நெதர்லாந்து, பிரேசில், காங்கோ, சுஸர்லாந்து, க்யூபா மங்கோலியா, சாலமன் ஐஸ்லாந்து போன்ற செக்ஸ் டூரிஸ நாடுகளுக்கு போவார்கள். காரணம் இங்கு விரும்பியவர்களுடன் விரும்பும் வண்ணம் அனுபவித்துவிட்டு வரலாம், எந்த சட்ட தொந்தரவும் இல்லாத செக்ஸ் டூரிஸ்ட்டுக்கு சட்ட பாதுகாப்பு உள்ள நாடுகள். அதோடு வெளிநாட்டு பெண்கள் மீதான மோகம். அதனால் ஜாலியாக இருக்க நினைத்தவர்கள் இங்கு படையெடுத்தார்கள். அனுபவித்தார்கள்.
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் ‘விளையாட்டு’ பிள்ளைகளான இவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. இவர்களுக்கு பணம் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து அங்கு போய் வர நேரம் விரயமாகிறதே என கவலைப்பட்டனர். இவர்களின் கவலையை போக்க உள்ளுர் புரோக்கர்கள், இன்டர்நேஷனல் புரோக்கர்களாக உருமாறினார்கள். இன்டர்நேஷனல் தொடர்புகள் மூலம் பெண்களை டான்ஸ் ஷோ, மாடலிங் என்ற பெயரில் இந்தியாவுக்கு வர வைத்து தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் சப்ளை செய்தனர்.
கடந்த 2008 செப்டம்பர் மாதம் லண்டனில் இருந்து வெளிவரும் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் இதழ்க்கு அமெரிக்காவை சேர்ந்த ஸபா என்ற 25 வயது விலைமாது அளித்தபேட்டியில், எனக்கு ஒரு மணி நேரத்திற்கு இந்திய தொழிலதிபர்கள் தரும் விலை 5 லட்சம், வந்து போக டிக்கட் செலவு, விலை உயர்ந்த கார் பயணம், உயர்தரமான ஹோட்டலில் தங்கும் வசதி என செய்து தருகிறார்கள் என்றார்.
அந்த பேட்டி இந்தியாவுக்கு வெளிநாட்டு விலை மாதுக்காளை படையெடுக்க வைத்துவிட்டது. வெளிநாட்டு மாதுக்களுக்கு இந்தியாவில் பலரும் போட்டி போடுவதால் டிமாண்ட் அதிகமானது. இதனால் நிறைய வெளிநாட்டு மாதுக்கள் சுற்றுலா விசாவில் இங்கு வர வைக்கப்படுகின்றனர். அப்படி வர வைக்கப்பட்டவர்கள் இன்று இந்தியாவை செக்ஸ் நாடாக அறிவிக்கும் அளவுக்கு பெருகியுள்ளார்கள் என்கிறார்கள் இத்தொழிலை நன்கறிந்தவர்கள்.
இந்த பேட்டி மற்றும் இங்கு வந்து போகும் பெண்களால் பரவிய தகவல், ஐ.பி.எல் விளையாட்டு காண என்ற போர்வையில் இளம் விலைமாதுக்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வர தொடங்கியுள்ளார்கள்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வகை பெண்கள் இந்தியாவுக்குள் அதிகம் வருகின்றனறாம். கடந்த 2010 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளாக 56 லட்சம் பேர் வந்துள்ளனர். இதில் 20 – 35 வயதுக்குள்ளான பெண்கள் அதிகம். கிரிக்கெட் ரசிகைகள் என்ற போர்வையிலும், ஐ.பி.எல் போட்டிகளின் போது மைதானங்களில் ரசிகர்களை, வீரர்களை உற்சாகபடுத்த சியர்ஸ் கேர்ள்ஸ் எனப்படும் நடன பெண்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர்.



மும்பையில் உள்ள பத்திரிக்கை நண்பர் போலந்து நாட்டை சேர்ந்த சியர்ஸ் கேர்ள் ஒருவரிடம் பேசியபோது, 2008 ஜனவரி மாதம் ஐ.பி.எல் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பற ஒப்பந்தத்தில் ஸ்காட்லாந்து சியர்ஸ் கேர்ள்ஸ் டீமில் உள்ள 150 பேர் கையெழுத்திட்டோம்.
ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் விமானம் ஏற சென்றபோது, என்னுடன் எனக்கு பணிப் பெண்ணாக, மேக்கப் வுமனாக, பிசியோதெரப்பிஸ்ட் என 5 பெண்கள் வந்தனர். இப்படி எனது குரூப்பில் 150 பேருடன் தலா 5 பேர் வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்கள் எல்லாம் அங்கிருந்தே எங்களை விட்டு பிரிந்து போய்விட்டனர். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை.

ஏன் எனில் எங்கள் குழு தலைமை எங்களுக்கு தரும் கமிஷன். அதோடு ஒரு நாள் இங்கு நாங்கள் நடனமாட எங்களுக்கு கிடைக்கும் தொகை 10 லட்சம். அதை இழக்க நான் விரும்பவில்லை. என்னை போல் தான் மற்றவர்களும். அதனால் நாங்கள் கண்டுகொள்வதில்லை. இது ஆண்டுதோறும் நடக்கிறது என பட்டவர்தமான தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியா வெளிநாட்டு செக்ஸ் பெண்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்கிறார்கள் மும்பையில் இத்தொழிலை ஆய்வு செய்யும் நபர்கள். இதை நடத்துபவர்கள் எல்லாம் பெரும் பண முதலாளிகள், வெளிநாட்டு விலைமாதுக்களை வைத்து சம்பாதிக்கும் பணத்தில் 40 சதவிதம் புரோக்கர்களுக்கு, மீதி அப்பெண்ணுக்கு என்ற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் உள்ளதாம்.

இந்த பணமெல்லாம் ஹவாலா முறையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நாடுகளில் கொண்டும் போய் தரப்படுகிறது. இந்த பெண்கள் எல்லாம் 3 மாதம், 6 மாதம் சுற்றுலா விசாவில் வருபவர்கள். தேதி முடிந்தும் பல நூற்றுக்கணக்கான பெண்கள் மும்பை, டெல்லி மாநகரங்களில் உலா வருகிறார்கள். இந்தியாவில் தற்போது, தொழிலுக்காக 2 ஆயிரம் வெளிநாட்டு பெண்கள் உள்ளார்கள் என அதிர்ச்சி தருகிறார்கள்.
இவர்களை பற்றி பன்னாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்திய புலனாய்வு அமைப்புகள்க்கு தகவல் தெரிவித்தும் இதில் வரும் அந்நிய செலவாணியை கருத்தில் கொண்டு அரசும், புலனாய்வு அமைப்புகளும் இதை கண்டு கொள்வதில்லை.

தற்போது இந்த வெளிநாட்டு மாதுக்களின் புகலிடமாக கோவா, ராஜஸ்தான், புதுவை இருக்கின்றனவாம். அதோடு, தற்போது கார்ப்பரேட் அலுவலங்கள் போல் வெளிநாட்டு விலைமாதுக் களை வரவைக்க சென்னை, மும்பை, பெங்களுர், டெல்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில் புரோக்கர்கள் அலுவலகமே வைத்துள்ளதாக தெரிவிக்கறார் மும்பை சமுக சேவகர் ஒருவர்.



இதுப்பற்றி பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ள மதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்கிருஸ்டியிடம் பேசியபோது, சமீபத்தில் வெளிநாட்டு விலைமாதுக்கள் 5பேரை டெல்லி போலிஸ் கைது செய்தது. அவுங்கள தீவிரமா விசாரிச்சாலே நம் நாட்லயிருந்து ஹவாலா முறையில வெளிநாடுகளுக்கு பணம் போற வழிய இன்னும் நெருக்கமா அறியலாம். அதோட இவுங்க மூலமா தீவிரவாதிகளுக்கான தகவல் சப்ளையாகவும் வழியிருக்கு. ஆனா இவுங்களை விசாரிக்க முடியாதபடிக்கு அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் முட்டுக்கட்டை போட்டு வர்றதா தகவல் தெரியுது.
இந்த தொழில்ல இருக்கற அரசியல்தான் லலித்மோடி-சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டு மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து சசிதரூரை இறக்கனார் லலித். அவர் தன்பங்குக்கு விளையாட ஐ.பி.எல் தலைவர் லலித்மோடியை நாட்டை விட்டே துரத்திட்டார் இது கடந்த ஆண்டு விவகாரம்.
இந்த ஆண்டு ஆஸ்த்திரியா கிரிக்கெட் வீரர் லூக் மீது அமெரிக்கவில் இருந்து வந்த ஒரு மாடலிங் பெண் தந்த பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையெல்லாம் தீவிரமா விசாரிக்கறதேயில்ல. இதை விசாரித்தால் இதுக்கு பின்னாடி இருக்கற பல உண்மைகள் வெளி வரும் என்றார்.
உண்மைகள் எப்போதும் வெளியே வரப்போவதில்லை. அதுதான் இந்தியா.

- து. ராஜா

கருத்துகள் இல்லை: