ஞாயிறு, 20 மே, 2012

எம்.நட ராஜன்: கலைஞ ருக்கும் ஜாபர் சேட்டுக்கும் தெரியும்


86 நாள் சிறை வாசம் முடித்து, மே 11-ஆம் தேதி மாலையில் திருச்சி சென்ட்ரல் ஜெயிலிலிருந்து வெளியே வந்த எம்.நட ராஜனை மீடியாக்கள் சூழ்ந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. மர்ம மனிதர், அ.தி.மு.க.வின் சாணக்கியர், நிழல் தலைவர் என்றெல்லாம் தமிழக அரசியலில் வர்ணிக்கப்படும் அவர், தனது திருச்சி நண்பரும் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியுமான பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு சென்றபோது, மீடியாக்களும் பின்தொடர்ந்தன. அங்கே ரொம்பவும் ஃப்ரீயாகவே பேசினார் நடராஜன்.



பேட்டி போல தொடங்கி, உரையாற்றலாக மாறிய அந்த நிகழ்விலிருந்து...

""என் மேலே போடப்பட்டது பொய் வழக்குகள்னு உலகமே சொல்லிக்கிட்டிருக்கு. போலீஸார் இதுவரைக்கும் 6 கேஸ் போட்டிருக்காங்க. அதில் 2 புகார்தாரர்கள் கேஸையே வாபஸ் வாங்கிட்டாங்க. இந்த 6 பேரையும் நான் என் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. போலீசாரே இதைச் செய்தார்களா,
அரசாங்கத்தின் தூண்டுதலால் இதைச் செய்தார்களா என்பதைக் கண்டுபிடித்து, தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டேன்.

என்னுடைய 45-ஆவது வயதில் அரசாங்க வேலையை ராஜினாமா பண்ணிட்டு, இவங் களுக்காக (ஜெ) உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் கொடுத்து உழைச்சேன். எம்.ஜி.ஆர். இறந்த செய்தியைக்கூட இவங் களுக்கு சொல்றதுக்கு ஆள் கிடையாது. என் மனைவியை அனுப்பி வச்சித்தான் சொன் னேன். எம்.ஜி.ஆர். உடலுக்குப் பக்கத்தில் இவங்க இருக்கக்கூடாதுன்னு அ.தி.மு.க. காரங்க தாக்க வந்தப்ப, அந்த அடிகளை தன்மேலே தாங்கிக்கொண்டவர்தான் என் மைத்துனர் திவாகரன். இவங்களை எதிர்த்த பி.ஹெச்.பாண்டியன் குடும்பத் திற்கு இன்று எத்தனை பதவிகள்! உங்களுக்காக வேலையை இழந்த எனக்கும் என் சொந்தங் களுக்கும் ஜெயில் தண்டனை.

ஜெயலலிதா பொதுவாழ்க்கையிலிருந்து விலகுவதா எழுதிய கடிதத்தை தி.மு.க. ஆட்சி வெளியிட்டதற்காக கலைஞருக்கு எதிரா நான் எத்தனை மாசம் டெல்லியில் ராஜீவ், சந்திரசேகரோடு உட்கார்ந்து பேசினேன். கலைஞரை ஆட்சியைவிட்டே தூக்குனோமா இல்லையா? 1990-இல் நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். இன்றுவரை அ.தி. மு.க.வுக்காகத்தான் பாடுபடுறேன். "நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகையில் நமதுங்கிற வார்த்தை எப்படி வந்தது, யார் காரணம்னு இன்னைக்கு அங்கே இருக்கிற யாருக்காவது தெரியுமா? நான்தான் அதை ரெஜிஸ்டர் செய்தேன். 2011 தேர்தல் அறிக்கையை தயாரித்து கொடுத்ததே நான், பொன்ராஜ், பன்னீர்செல்வம் ஐ.ஏ.எஸ். ஆகியோர்தான். லேப்டாப் உள்ளிட்ட இல வசங்களை சேர்த்தோம். இதெல்லாம் கலைஞ ருக்கும் ஜாபர் சேட்டுக்கும் தெரியும். அந்த அறிக்கையோட முதல் பிரதி என்கிட்டேதான் இருக்கு.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைகோ, நெடுமாறன், நல்லகண்ணு இவங்களெல்லாம் கவனிச்சிக்கிட்டிருந்தப்ப, நான் அதில் இணைந்தவுடன்தான் அது அ.தி.மு.க.வுக்கு ஆதரவான இயக்கமாக மாறியது. இதையெல்லாம் யாரும் மறந்திட முடியாது'' என்று அ.தி.மு.க. தலைமை மீதான தன்னுடைய மாறாத விசுவாசத்தை வெளிப்படுத்தியவர், கார்டனுக்கு சசிகலா மீண்டும் திரும்பிய விவகாரம் பற்றிய பேச்சுக்கு வந்தார்.



""சசிகலா மீண்டும் சேர்வதற்கு முன்னாடி அவர் பெயரில் வந்த அறிக்கை, அவர் கொடுத்த அறிக்கை அல்ல. என் மனைவிக்கு அறிக்கை தயாரிக்கத் தெரியாது. 3 முறை முதல்வராக இருப்பவராலேயே ஒரு அறிக்கை தயாரிக்க முடியாது. என்னை மாதிரி ஒரு இளிச்சவாயன் தான் ரெடிபண்ணித் தரணும். அப்படி செய் தாலும், ஒரு குறிப்புகூட இல்லாமல் பேசத் தெரியாது. எங்க குடும்பத்தினர் மேலே பழி போட்டாங்க.

சேட்டிலைட் மேலே போகணும்னா, லோயர் லேயரில் உள்ள பகுதிகள் எரிஞ்சி விழுந்து, கருகி சாம்பலாகணும். அப் படித்தான் எங்க குடும்பம் கருகியது. அவங்க சேட்டி லைட்டா மேலே பறக்கு றாங்க. கலியபெரு மாள், ராவணன், வெங்கடேஷ் இவங் களை யெல்லாம் மண்டலத் தலை வர்களா போட்டப் பவே, அவங்களெல்லாம் கட்சி உறுப்பினர்களே கிடையாது. அவங்களை இப்படி பயன்படுத்தக் கூடாதுன்னு நான்தான் பேட்டியே கொடுத்தேன். என் தம்பி பழனிவேல் கிட்டேகூட கட்சிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லி யிருந்தேன். நான் பேட்டி கொடுத்தப்பவே நட வடிக்கை எடுத்திருக்க லாமே... இப்ப போடுற தெல்லாம் பொய் வழக்கு.

என்னை நில அப கரிப்பில் கைது செஞ்சீங் களே... எத்தனை ஏக்கரை மீட்டீங்க? சார்ஜ் ஷீட்டா வது போட முடியுமா? சென்னையிலிருந்து தஞ்சா வூருக்கு 5 மணி நேரத்தில் காரில் போயிடலாம். என்னை கைது செய்து 12 மணிநேரம் அலைக் கழிச்சாங்க. டி.ஐ.ஜி. அமல் ராஜ் தஞ்சாவூர் பக்கத்தில் செங்கிப்பட்டியில் ஒரு நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டார். எதற்கு? என்கவுன்டரில் என்னை சாகடிக்கவா? திருச்சி ஐ.ஜி. அலெக் சாண்டர் மோகன் தஞ்சாவூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கிட்டு, எல்லா இன்ஸ்பெக்டர்களையும் கூப்பிட்டு, என் மேலே ஏதாவது ஒரு கேஸ் போட்டுட்டு வாங்கன்னு உத்தரவு போடுறாராம்.

டி.ஜி.பி. ராமானுஜத்தை நம்பிக்கொண்டு அவர் எல்லாத்தையும் செய்கிறார். அவரா பாராளு மன்றத் தேர்தலுக்கு உங்களோடு ஃபீல்டில் வந்து நிற்கப்போகிறார்? அதிகாரிகளை நம்பி ஆட்சி செய்தவர் கள் யாரும் நிலைத்தது கிடையாது. கரண்ட் கட்டால் மக்கள் என்ன நிலை மையில் இருக்காங்கன்னு பாருங்க. நானும் ஜெயிலில் விசிறி விசிறி என் கையே காய்ச்சுப் போயிடிச்சி. இந்த ஆட்சிக்கு நான் மார்க் போடுறதை விட, மக்கள் மார்க் போடுறது தான் சரியா இருக்கும்.

என் மேலே வழக் குப் போட காரணமா இருந்த ஒவ்வொரு அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, 3 ரிட் பெட்டிஷன் போட்டிருக்கேன். இந்த மாசத்திலேயே அது விசாரணைக்கு வரும். எங்க குடும்பத்து மேலே போட்ட வழக்குகளும் கைது நடவடிக் கையும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும்.

என்னை ஜெயிலி லிருந்து விடுவிக்கவில்லை. தன்னோட நடவடிக்கை யால, என்னை அரசிய லுக்கு வா என்பது போல அழைச்சிருக் காங்க. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இனி மறைமுகமா செயல்படமாட்டேன். வெளிப்படையாக வரு வேன்'' -நடராஜனின் குரலில் அழுத்தமும் வேகமும் சேர்ந்து ஒலித்தது.

-ஜெ.டி.ஆர்.
thanks nakkeeran +  manikandan thiruvannamalai

கருத்துகள் இல்லை: