இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய சிபிஐ கோர்ட் உத்தரவிட்டது.
கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் பல் மருத்துவர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாரின் மகள் ஆருஷியும், அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பையன் ஹேமராஜும் கொல்லப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கில் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இத்தணை ஆண்டுகள் ஆகிய பிறகு அண்மையில் தான் நுபுர் தல்வார் கைது செய்யப்பட்டு தாஸ்னா சிறையில் அடைக்கப்ப்டடுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நடந்து வரும் காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கே. சைனி கூறுகையில்,
சம்பவம் நடந்த அன்று மாலை வீட்டுக்கு லேட்டாக வந்த ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஹாலில் ஆருஷியும், ஹேமராஜும் இல்லாததையடுத்து ஆருஷியின் அறைக்கு சென்றனர். அவரது அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் தாங்கள் வைத்திருந்த சாவியை வைத்து ஆருஷியின் அறையைத் திறந்தனர். அப்போது ஆருஷியும், ஹேமராஜும் ஒன்றாக இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.
உடனே ராஜேஷ் கோல்ப் ஸ்டிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் அடித்தார். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் பிளேடை வைத்து ஆருஷி மற்றும் ஹேமராஜின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். தல்வார்கள் தான் ஹேமராஜின் உடலை மொட்டை மாடியில் கொண்டு போய் போட்டுள்ளனர் என்றார்.
ஆனால் இந்த வாதத்தை மறுத்துப் பேசிய நூபுர் தல்வாரின் வக்கீல் கூறுகையில், மேல்தட்டு மக்களிடையே செக்ஸ் என்பது ஒரு பெரிய தவறான செயல் அல்ல. ஒருவர் இன்னொருவருடன் செக்ஸ் வைத்துக் கொண்டார் என்பதற்காக கொலை செய்யும் அளவுக்குத் துணிய மாட்டார்கள். மேலும் ஆருஷி அதுபோல நடந்து கொண்டிருந்தாலும் கூட அதை பேசி சரி செய்திருப்பார்களே தவிர கொலை செய்யும் அளவுக்குப் போயிருக்க மாட்டார்கள்.
ஆருஷியை அவரது பெற்றோர் மிகவும் நேசித்தனர். விலை உயர்ந்த கேமராவை அவருக்குப் பிறந்த நாள் பரிசாக கொடுத்ததே அதற்கு ஒரு நல்ல சான்று.
உண்மையில், ஹேமராஜ் தல்வாரின் வீட்டில் இருந்த பொருளைத் திருடினான். அதை ஆருஷி கண்டுபிடித்துவிட்டதால் அவரை அவன் கொன்றுவிட்டான். ஆனால் ஹேம்ராஜைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க சிபிஐயால் முடியவில்லை. இதனால்தான் தல்வார்கள் மீது அது குற்றம் சாட்டுகிறது என்றார்.
இந்நிலையில் இந்த வழ்ககு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீ்ல்களின் வாதத்திற்குப் பின்னர் தல்வார் தம்பதி மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்திற்குத் தவறான தகவலைக் கொடுத்து திசை திருப்பியதாகவும், ஆதாரங்களை அழித்தது தொடர்பாகவும் தல்வார் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக