திங்கள், 26 டிசம்பர், 2011

பிரதமருக்கு கறுப்புக்கொடி: விஜயகாந்த் கைது தேமுதிகவினர் சாலை மறியல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.

கருத்துகள் இல்லை: