திங்கள், 26 டிசம்பர், 2011

ஒஸ்தியா ? ராஜபாட்டையா ? சனி பெயர்ச்சி மொக்கை படத்துக்கு டிக்கெட்


ராஜபாட்டை சில குறிப்புகள்
1. இந்த படத்தின் மூலம் ஒஸ்தி சிம்புவிற்கு தான் சளைத்தவர் இல்லை என்று நிருபித்துள்ளார் விகரம். தமிழ் சினிமா உலகத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
2. 'வாப்பா' என்ற முஸ்லீம் கேரக்டர் 2G பாட்ஷாவை குறிப்பது போல உள்ளது. அப்ப அந்த 'அக்கா' காதாபாத்திரம் யார் ?
3. விக்ரம் படத்தில் ஏன் பெண் வில்லியே வருகிறார்கள் ? விக்ரமுக்கு வயதாகிவிட்டதால் இந்த ஏற்பாடா ? மார்கழி மாதம் வீட்டு வாசலில் கலர் கோலம் போடுவார்கள், இயக்குனர் அதை விக்ரம் தலையில் போட்டுள்ளார்
4. வழக்கமாக தீவிரவாதிகளாக முஸ்லீகளை காட்டி வந்த தமிழ் சினிமா, இதில் மாஃபியா கும்பலாக காட்டியுள்ளது. படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் இதில் வரும் அருவாள் தான்.
5. தசாவதாரம் கமல் போல விகரம் இந்த படத்தில் ஒரு காட்சியிலும், பாடல்களிலும் பல வேஷங்களை போட்டு தன் ஆசயை நிறைவேற்றிக்கொண்டுள்ளார். படம் பார்க்கும் நமக்கே இவர் விக்ரம் என்று தெரியும் போது வில்லனுக்கு தெரியாதது காமெடி !

6. ஸ்ரேயா, ரீமாவுடன் பாடல் எடுத்துவிட்டதால் எங்கே போடுவது என்று குழம்பிய இயக்குனர் கிளைமாக்ஸ் முடிந்த பின் நமக்கு போட்டு காண்பித்துவிட்டார், அதை வீணாக்காமல்.

7. கமலுக்கு நான் தான் நடிப்பு சொல்லித்தந்தேன் என்ற வசனம் பேசிக்கொண்டு கே.விஸ்வநாத் படம் முழுக்க பரிதாமகாக வருகிறார். சினிமாவில் நல்லவர்கள் அனாதை இல்லம் நடத்துவார்கள், இவரும் நடத்துகிறார். வில்லன் இவர் நடத்தும் அனாதை இல்லத்தை அடித்து நொறுக்கும் போது இவரை போலவே நமக்கும் நெஞ்சு வலி வருகிறது, மொக்கை படத்துக்கு டிக்கெட் எடுத்து பார்த்தன் விளைவு.

8. வடிவேலு, சந்தானம் காமெடி டிராக் இல்லை, பாவம் விக்ரம் ஓவர் டைம் செய்ய வேண்டியுள்ளது. ஹீரோயின் கடத்தப்படும் காட்சி காமெடி டிராக் இல்லாத இந்த ஒரே காட்சி தீர்க்கிறது.

9. ராஜபாட்டை நம் முகத்தில் போடும் பட்டை !

10. உங்களுடைய சனி சனி பெயர்ச்சி பலன்கள் பொறுத்து ஒஸ்தியா ? ராஜபாட்டையா ? என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் !

கருத்துகள் இல்லை: