ஞாயிறு, 25 டிசம்பர், 2011

போயஸ் தரப்பும், மன்னார்குடி தரப்பும் என்ன சொல்கிறது

வெளியேற்றும் படலம் ஓயவில்லை. சசிகலா உறவினரும் திருச்சி மண்டல அ.தி.மு.க.வில் ஆட்டிப்படைக் கும் இடத்தில் இருந்தவருமான கலிய பெருமாளை வியாழனன்று கட்டம் கட்டினார் ஜெ.
அதுபோலவே, நடராஜனின் தம்பி பழனிவேலுவும் கட்டம் கட்டப்பட்டிருக்கிறார். தொடரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் பற்றி போயஸ் தரப்பும், மன்னார்குடி தரப்பும் என்ன சொல்கிறது என்பது பற்றிய விவரங்களை சேகரிக்க களமிறங்கினோம்.
ஜெ.வின் காட்டம்
சசிகலா குடும்பத்தினர் வெளியேற் றப்பட்ட பிறகு, தன்னுடைய சமுதாய லாபியிடம் பேசிய ஜெ.வின் வார்த்தைகளில் அனல் தெறித்ததாம். ""நான் அரசியலை விட்டுட்டு வெளியேறிடணும்னு நினைச்ச போதெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தி, அரசியலில் இருக்கச் சொன்னது சசிகலா தான். எனக்கு அரசியல்ங்கிறது தலையில வைக்கிற பூ மாதிரி தான். எப்ப வேணும் னாலும் தூக்கி எறிஞ்சிடுவேன். இவங்கதான் என்னைப் பிடிச்சி இழுத்து அர சியலில் இருக்கச் சொன்னாங்க. நானும் நம்பினேன். ஆனா, சசிகலா குடும்பத்துக்கு பண ஆசை அதிகமாயிடிச்சின்னு புகார் வந்துக்கிட்டே இருந்தது. நீங்களும் கூட நிறைய கம்ப்ளைண்ட் சொன்னீங்க. அதனாலதான் தூக்கி எறிஞ்சிட்டேன்.
அந்த நடராஜன், தி.மு.கங்கிற டை-யில் தயா ரிக்கப்பட்ட ஆளு. அவருக்கு கருணாநிதி மாதிரிதான் மூளை வேலை செய்யும். அண்ணா இறந்ததும் எப்படி பொதுக்குழுவையும் எம்.எல்.ஏக்களையும் கருணாநிதி வளைச்சிக்கிட்டு ஆட்சியைப் பிடிச் சாரோ, அது மாதிரி அ.தி.மு.கவைப் பிடிக்க அந்த நடராஜன் பல வருசமா திட்டம் தீட்டி, கட்சிக்குள்ளே விஷத் தைக் கலந்துக்கிட்டிருந்தாரு. நடராஜனைபத்தி சசியே என்கிட்டே கன்னா பின்னான்னு திட்டியிருக்கு. இப்ப சொத்துக்குவிப்பு கேஸை வச்சி, என் னை ஓரங்கட்டிட்டு, கட்சியையும் ஆட்சியையும் பிடிச்சிடலாம்னு எல்லாரும் சேர்ந்து ப்ளான் போட்டதாலதான் ஒட்டுமொத்தமா வெளியே போகச் சொல்லிட்டேன்''னு கோபம் குறையாமல் சொல்லியிருக்கிறார் ஜெ.
வெளியேற்றமும் குடியேற்றமும்

கார்டனிலிருந்து திங்களன்று (டிசம்பர் 19) காலை 10.30 மணிக்கு வெளியேற்றப்பட்ட சசிகலா, தற்போது குடியேறியிருப்பது தியாகராய நகரில். முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் தங்கியிருந்த வீடு அது. சுதாகரன் தொடர்பான சர்ச்சைப்புயல் போயஸ்கார்டனில் வீசியபோது அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அந்த வீட்டில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் ப்ரியாவும்-மருமகன் கார்த்திகேயனும் தங்கி யிருந்தனர். அவரது வீட்டில்தான் தற்போது சசிகலா உள்ளார். அங்குதான் அவருடன் அவரது சொந்தபந்தங்கள் விவாதம் நடத்தி வருகிறார்கள்.

வி.கே. சசிகலா, எம்.நடராஜன் உட்பட 14 பேர் நீக்கப்பட்டதை எல்லா பத்திரிகைகளும் தலைப்புச் செய்தியாக வெளியிட, அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வமான நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கடைசிப் பக்கத்தில் கட்டம் கட்டப்பட்டிருந்தது. அதே பக்கத்தின் கீழேயே டழ்ண்ய்ற்ங்க் ஹய்க் டன்க்ஷப்ண்ள்ட்ங்க் க்ஷஹ் ய.ஃ. நஹள்ண்ந்ஹப்ஹ என்றிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி "நமக்கு இப்படியொரு நிலைமை' என்றிருக்கிறார்கள் உறவினர்கள்.
நடந்ததை விவரித்த சசிகலா
""பெரியம்மா ஏன் உங்களையும் வெளியே அனுப்பிட்டாங்க''ன்னு சொந்தபந்தங்கள் கேட்டபோது, கண்கள் கலங்க விளக்கியிருக்கிறார் சசிகலா. ""திங்கட்கிழமை காலையில 7 மணிக்கு என்னை அக்கா(ஜெ) எழுப்பு னாங்க. அந்த நேரத்தில், சோவும் கார்டனுக்கு வந்திருந்தார். முதல்நாள் நைட்டுதான் என்கிட்டே அக்கா கோவமா பேசிட்டுப்போய் படுத்தாங்க. காலையிலும் அவங்க கோபம் குறையல. என்னைப் பார்த்து, "நீ இந்த வீட்டைவிட்டுட்டுப் போயிடு'ன்னு சொன்னாங்க. நான் பேசாம நின்னுக்கிட்டிருந்தேன். அப்ப அவங்க, "உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துட்டுப்போயிடு'ன்னு கடுகடுன்னு சொன்னாங்க. அப்ப சோ என்னைப் பார்த்து ஒரு மாதிரி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாரு. எல்லாரும் சேர்ந்து அக்காவை ஒரு முடிவெடுக்க வச்சிட்டாங்கன்னு எனக்குப் புரிஞ்சிடிச்சி. நான் கிளம்புறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.


அப்ப மறுபடியும் அக்கா என்கிட்டே, "உனக்கு என்ன வேணுமோ எடுத்துட்டுப் போ'ன்னு சொன்னாங்க. அதுக்கு நான், இந்த வீட்டுக்கு வரும்போது எந்த சொத்துபத்தையும் கொண்டுகிட்டு வரலை. அதனால எதையும் எடுத்துட்டுப்போகவும் விரும்பலை. எனக்கு எந்த ஆஸ்தியும் தேவையில்லைன்னு சொன்னேன். அந்த சமயத்தில், ஆடிட்டர்கள் சில பேப்பர்களைக் கொண்டு வந்து அக்காகிட்டே கொடுக்க, அதில் என்னை கையெழுத்துப் போடச் சொன்னாங்க. என்ன ஏதுன்னுகூட படிச்சுப் பார்க்காம மளமளன்னு கையெழுத்துப்போட்டுட்டு கிளம்புனேன். அக்கா திரும்பவும் என்ன வேணும்னு கேட்டாங்க. என்னோட துணிமணியை மட்டும் எடுத்துக்கிறேன். வேற எதுவும் வேணாம்னு சொன்னேன். அக்கா என்னை அப்படியே உத்துப் பார்த்தாங்க. அவங்க கண்ணு கலங்கிடிச்சி. என்னால அதுக்கு மேலே அங்க இருக்க முடியல. கிளம்பிட்டேன்.

நான் வெளியே வர்றப்ப, பிரியா வீட்டுல மட்டும் போய் தங்கு. வேற எங்கேயும் தங்கக்கூடாதுன்னு அக்கா சொன் னாங்க. நேரா இங்கே வந்துட்டேன். சோவும் அவரோட ஆளுங்களும்தான் முழுக்க முழுக்க பொய்யான சேதியா சொல்லி, அக்காவை நம்ப வச்சி நம்மையெல்லாம் வெளியே அனுப்பியிருக்காங்க. அக்காவுக்கு என்ன தேவையோ அவங்க எடுத்துக்கட்டும். அவங்க யாரையாவது அனுப்பினா கூட கையெழுத்து போட்டு கொடுத்தனுப்பிடுறேன். பிரச்சினையில்லாம விலகிக்க லாம். என் கணவரோடு மிச்ச காலத்தை ஓட்டிட்டுப் போறேன்'' என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.
அவமானத்திற்கு என்ன பரிகாரம்?
"ஜெ.வின் சம்மதத்தோடு, அவரது கவனத்தை மீறாமல் வாங்கிய சொத்துகள்தான் அதிகம்' என்கிற மன்னார்குடி வட்டாரம் அதையெல்லாம் ஜெ.விடமே திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறது. ஆனால், தங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்தை எந்த வகையில் திருப்ப முடியும் என்ற வருத்தம் அவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. சசிகலாவின் ஒன்றுவிட்ட அக்கா கணவரான ராவணனை போயஸ் கார்டனுக்கு ஜெ. அழைத்து விசாரித்தபிறகு, அங்கிருந்த போலீஸ்காரர்கள் அவரை கவனித்து அனுப்பியிருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போதே காட்சிகள் இப்படி மாறும் என்று நடராஜனும் மற்றவர்களும் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லையாம்.

இந்த வருத்தமும் வேதனையும் மன்னார்குடி குடும்பத்தினர் நடத்தி வரும் ஆலோசனையில் வெடித்திருக்கிறது. ஏதோ கோடி கோடியா கொள்ளையடிச்சி அதை நாம மட்டுமே தூக்கிக்கிட்டு ஓடிப்போனது போலவும் இதில் எதுவுமே ஜெ.வுக்கு தெரியாதது போலவும் பல பத்திரிகைகளில் செய்தி வெளியிட வைக்கிறாங்க. கொள்ளைக்கூட்டம்னே சித்தரிக்கிறாங்க. எல்லாமே ஜெ.வுக்குத் தெரிஞ்சிதான் நடந்தது என்பதையும் எந்தெந்த விவகாரங்களில் அவர் என் னென்ன அக்கறை காட்டினார்ங் கிறதையும், பெங்களூரு கேஸ் தொடர்பா ஜெ. சொல்லி என் னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டோம்ங்கிறதையும் நடராஜன் மூலமாகவே அறிக் கையா வெளியிட்டு, எதற்காக எங்கள் மேலே நடவடிக்கை எடுத்தீங்கன்னு அதில் கேட்கச் சொல்லலாம்னு குடும்பத்தின ருக்குள் ஆலோசனை நடந்தாலும், இப்படியொரு அறிக்கை வெளியிட்டால் என் னென்னவிதமான நெருக்கடிகள் வரும் என்பது பற்றி யும் யோசித்திருக் கிறார்கள்.

சிறப்புத் திட் டங்கள் செயலாக்க அதிகாரியாக இருந்து பதவி பறிக்கப்பட்ட பன்னீர்செல்வம் அப்போது, "இந்த நேரத்தில் நாம அமைதியா இருப்பதுதான் சரி. ஜெ.வை சுற்றி இப் போது புது லாபி உரு வாகியிருக்கு. அதிலே இருக்கிறவங்க யாருன்னு உங்களுக்கே தெரியும். அந்த லாபியோட ஆபத்தை கூடிய சீக்கிரம் அவரே புரிஞ்சுக்குவார். இப்ப இருக்கிற கோபத்திலே அறிக்கையெல்லாம் வேணாம்' என்று சொன்னதால் வியாழன் இரவு வரை எந்த ரியாக்ஷனும் இல்லை.
உறவு பற்றி உளவு
சசிகலாவிடமும் அவருடைய குடும்பத் தாரிடமும் யார் யார் தொடர்பு வைத்திருக் கிறார்கள் என்ற விவரப் பட்டியல் தோட்டத்தில் ரெடியாகிவருகிறது. அமைச்சர்கள் மட்டுமின்றி மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என கட்சி ரீதியாக களையெடுக்கும் திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக, வெளியேற்றப்பட்ட சசிகலா குடும்பத்தாருடன் யார் யார் பேசு கிறார்கள், என்னென்ன தொடர்பில் இருக்கிறார்கள் என்ற விவரத்தையெல்லாம் உளவுத்துறையிடம் ஜெ. கேட்டிருக்கிறார். முழுமையான ரிப்போர்ட் கைக்கு வந்தவுடன் நடவடிக்கைகள் வேகமாக இருக்கும் என்கிறது கார்டன் தரப்பு.
நடுக்கத்தில் அமைச்சர்கள்
தற்போதுவரை கிடைத்துள்ள ஒரு சில தகவல்கள் பற்றியும் கார்டன் தரப்பினர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். சமீபத்தில் அமைச்சரான திருப்பூர் ஆனந்தன், இந்தப் பதவிக்காக பெரியதாக சசிகலா உறவினரான ராவணனிடம் கொடுத்து, உரியவர்களிடம் சேர்க்கச் சொல்லியிருந்தாராம். இப்போது எல்லோருமே கட்டம் கட்டப்பட்டுவிட்டதால், தன்னுடைய பதவிக்கும் ஆப்பு அடிக்கப்படுமோ என்ற பயத்தில் இருக்கிறார் ஆனந்தன். திருப்பூரைச் சேர்ந்த 10 கம்பெனி முதலாளிகளிடம் கடன் வாங்கித்தான் இந்தத் தொகையைக் கொடுத்திருக்கிறார் மாண்புமிகு. அமைச்சர்பதவி பறிக்கப்பட்டால், அந்த முதலாளிகள் தன்னுடைய வீட்டு வாசலுக்கு வந்துவிடுவார்களே என்பதுதான் அவரது நடுக்கத்திற்கு காரணமாம். இதுபோலவே மாதவரம் மூர்த்தி, ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் தங்களின் மந்திரிப்பதவிக்கு வேட்டு வைக்கப்படுமோ என்ற பீதியிலேயே இருக்கிறார்கள்.

புது அமைச்சர்களிடம் இந்த பயம் இருந் தாலும், சில சீனியர்களிடம் நாம் பேசியபோது, எங்களைப் போன்ற சீனியர்களைக்கூட பார்க்க நேரம் ஒதுக்காமல் மேடம் ஒரு இரும்பு வளையத்தைப் போட்டுக்கிட்டதுதான் இதற்கெல்லாம் காரணம். எல்லாத்தையும் சசி பார்த்துக்குவார். நீங்க அவரைப் பார்த்துப்பேசிக்குங்கன்னு மேடம்தான் எங்களுக்கு உத்தரவிட்டாங்க. நாங்களும் எல்லாவிதமான ஆலோசனைகளுக்கும் டீலிங்குக்கும் சசிகலாவைத் தான் நாடினோம். அவர் என்ன சொல்றாரோ அதன்படிதான் நடக்கவேண்டியிருந்தது.'' என்கிறார்கள்.
தீவிர ஆலோசனையில் சமுதாய லாபி
போயஸ் கார்டனின் நிர்வாகத்தில் உதவுவதற்காக சோவின் உறவினர்களான கார்த்தி, சதீஸ் இருவரும் அங்கே சில வேலைகளை கவனித்து வருகிறார்கள். சசிகலாவும் குடும்பத்தினரும் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டபிறகு, அங்கே கூடுதல் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஜெ.வின் சமுதாய லாபி தீவிரமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த லாபிதான் இனி எல்லாமுமாக இருக்கும் என நம்பும் தொழிலதிபர்கள், காண்ட்ராக்டர்கள் உள்ளிட்டோர் இவர்களை சந்தித்து வருகிறார்கள். ஜெ.வின் ஆலோசகரான சோவிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்போரின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. தி.நகர் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட பேரங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூலம் வசூலிக்கப்பட்டது பற்றிய விவரங்கள், இதற்கு மீடியேட்டர்களாக செயல்பட்ட வியாபாரப்புள்ளிகள் போன்ற தகவல்கள் சோவின் பார்வைக்குப் போயுள்ளதாம். எனினும், அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் உடனடியாக இருக்குமா என்ற சந்தேகம் கார்டன் தரப்பினரிடமே இருக்கிறது.
இந்த சந்தேகத்திற்கு அடிப்படையில்லாமல் இல்லை என்கிறார்கள் உண்மை நிலவரம் அறிந்தவர்கள். மன்னார்குடி குடும்பத்தினரின் ஆலோசனைகளில் ஒத்துக்கொள்ளப்படும் ஒரு விஷயம், நாம் ரொம்பவும்தான் ஆடிவிட்டோம் என்பதுதான். அதிலும் ராவணனும், நடராஜன் தம்பி ராமச்சந்திரனும் அதிகமாகவே ஆட்டம் போட்டு பெயரைக் கெடுத்துவிட்டார்கள் என்பதை மன்னார்குடி தரப்பு ஒப்புக்கொள்கிறதாம். முன்பெல்லாம் மாமா (நடராஜன்) சொன்னால் கேட்டுக்கொள்வார்கள். இப்போது அவரையும் மீறி செயல்பட ஆரம்பிச்சதாலதான் இந்த வினை. பெரியம்மாவின் கோபம் தணி கிறவரை நாம பேசாமதான் இருக்கணும் என்கிறதாம் மன்னார்குடி தரப்பு.

அதேநேரத்தில், போயஸ்கார்டன் வட்டாரத்திலிருந்து வரும் தகவல்களும் இதற்கு இணையான நிலையில் இருக்கிறது. இளவரசியும் சசிகலா உறவுப்பெண்கள் ஒரு சிலரும் இன்னும் கார்டனுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் ஜெ. பேசும்போது, ""ஆட்சியிலும் நிர்வாகத்திலும் அதிகமா தலையிடுறாங்கன்னு தொடர்ந்து குற்றச்சாட்டு வந்ததாலதான் இந்தக் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கேன். அவங்க இங்கே இருந்துக்கிட்டு இதையெல்லாம் செஞ்சாதான், நிர்வாகத்தில் தலை யிடுறாங்கங்கிற புகார் வரும். அவங்க வெளியிலேயே இருக்கட்டும். பிசினஸை பார்த்துக்கட்டும்'' என்று சொல்லியிருக்கிறாராம்.
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு முக்கியமான கட்டத்தில் உள்ள நிலையில், இருதரப்புமே ஒரு லெவலைத் தாண்டக்கூடாது என்பதை உணர்ந்தே இருக்கிறது என்கிறார்கள் இருவரையும் அறிந்தவர்கள்.
-உமர்முக்தார்
படங்கள் : சுந்தர் & ஸ்டாலின்
முடிவு!
முதலமைச்சருக்கென தனி அதிகாரிகள் குழுவைக் கொண்ட செகரட்டரியேட் (சி.எம் செகரட்டரியேட்) ஒன்றை உருவாக்க ஜெ. முடிவெடுத்துள்ளார். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுக்கு, ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கும் இறை யன்புவைக் கொண்டு வரலாம் என முதலில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய ஒத்துழைப் புத்தன்மை பற்றி விவாதிக்கப்பட்ட பிறகு, இறை யன்புவை பன்னீர்செல்வம் வகித்து வந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அதிகாரியாக நியமிக்கலாம் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

thanks nakkeeran +nathan salem

கருத்துகள் இல்லை: