செவ்வாய், 27 ஜூலை, 2010

அடிப்படை கல்வி உரிமை சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதா?

புதுடில்லி :"அடிப்படை  கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ.,) முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானது என்ற சில முஸ்லிம் அமைப்புகளின் பயம் அவற்றின் அறியாமையால் ஏற்பட்டுள்ளது' என்று, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அனைவருக்கும் அடிப்படை கல்வி உரிமைச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானது என்று ஜாமியத் உலேமா -இ- இந்த் மற்றும் அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லிஸ் -இ- முஷாவராவாத் உள்ளிட்ட சில  அமைப்புகள் அச்சம் தெரிவித்திருந்தன. இந்திய அரசியல் சாசனத்தின் 29, 30ம் பிரிவுகள், மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்களின் கல்வி நிறுவனங்கள் அவர்களின் விருப்பப்படி இயங்கவும் அனுமதி அளிக்கின்றன.ஆனால், மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டம், இப்பிரிவுகளுக்கு எதிரானது என்று அந்த அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.

இதுகுறித்து  மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று நான் நினைக்கவில்லை. மத்திய அரசின் நோக்கமும் அதுவல்ல. இந்த பயம் அறியாமையால் ஏற்பட்டுள்ளது. இச்சட்டம் மூலம், மதரசாக்களின் கல்விக்கோ அல்லது 29, 30வது பிரிவுகளுக்கோ குந்தகம் வராது. இருப்பினும் இச்சட்டம் பற்றிய கவலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும்.இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிப,ல் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
Sangkar - Chennai,இந்தியா
2010-07-27 07:47:34 IST
ஒரு காலத்தில் இந்துக்களை மூட நம்பிக்கை உள்ளவர்கள் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்ற முடியாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் கூறி வந்தனர். அனால் இன்றைய நிலையோ வேறு இந்துக்களின் முன்னேற்றத்திற்கு மதம் எந்த விதத்திலுமே தடையாக இருந்தது இல்லை. மேலும் இந்து/ புத்த தர்ம கோட்பாடுகள் அடக்குமுறை, யுத்தம் இல்லாமலே உலகம் முழுவதும் பரவி உள்ளன. மதத்தை காரணம் கூறி கல்வியை தடுக்கும் நிலை மிகவும் பரிதாபமானது....
Kassim - Kovai,இந்தியா
2010-07-27 07:40:03 IST
மதத்தை காரணம் காட்டியே, பழமைவாதிகள் தானும் முன்னேற மாட்டார்கள் மற்றவர்களையும் முன்னேற விட மாட்டார்கள். கல்வியை கூட மதத்தை காரணம் கூறி சமுதாயத்தை அப்படியே அமுக்கி வைத்திருக்கிறார்கள். ரொம்ப விளங்கும்....
திரு ஜெய் - Canada,கனடா
2010-07-27 07:36:41 IST
ஒருவர் விருப்பத்தின் பேரில் மதசார்பான கல்வியை, அது மதராசவிலோ, குருகுலதிலோ அல்லது கிறிஸ்துவ சபையிலோ கற்பதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் அனைவருக்கும் கல்வியை உரிமையை மட்டும் கொடுத்துவிட்டு, கல்வியை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், இடஒதுக்கீட்டின் மூலமாக மறுக்கப்படும் பொழுது அரசை சட்டத்தின் முன் கொண்டு சென்று நிறுத்த முடியுமா? இது தான் முரண்பாடு. அரசு மக்களுக்கு உரிமை மட்டும் கொடுத்தால் போதாது, அரசுக்கு கடமையும் வேண்டும். உண்மையான இந்தியன், அபுதாபி, சொல்வது போல சட்டத்தின் முன் அனைத்திலும் அனைவரும் சமமாக காணப்பட வேண்டும். அனைவரும் கல்வி பெற்றால் ஒழிய இந்த அரசியல் வாதிகளை எதிர்கொள்ள முடியாது....
True Indian Abu Dhabi - abudhabi,இந்தியா
2010-07-27 05:28:11 IST
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் எத்தனையோ பிராமணர்கள் சிறுபான்மையினர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழ் நாட்டிலோ கேரளத்திலோ கடந்த 30 வருடங்களில் ஒரு பிராமண மந்திரியை காட்டமுடியுமா? (ஜெயலளிதாவைதவிர) . அரசாங்க வேலைகளிலும் பிராமணர்களுக்கு வேலை கிடையாது. இவர்கள்தான் உண்மையான தாழ்த்தப்பட்டவர்கள் (minorities). இனியாவது மத்திய அரசோ மாநில அரசோ கண்டுகொள்ளுமா? அரசியல் சாசனத்தை மாற்றவாவது வேண்டும். பிறந்த மண்ணில் பிராமணர்களுக்கு இப்படியொரு நிலைமை. பிராமணர்கள் அமைதி விரும்பிகள், அஹிம்சாவாதிகள், போராட்டத்தை விரும்பாதவர்கள், என்ற காரணங்களால் இவர்களை புறக்கணிப்பது ரொம்ப கொடுமை. தீண்டாமை பல இடங்களில் நடப்பதாக சொல்கிறார்கள். அதில் ஏதேனும் பிராமணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றுதான் காட்டமுடியுமா?. அவர்கள் தங்களின் வீடுகளையும், கோவிலாக நினைப்பதால், வீட்டுக்கும்,கோவிலுக்கும் அதன் புனிதத்தன்மை காக்கப்பட சில ஆசார அனுஷ்டான நியதியை கடைபிடிக்கிறார்கள். அதனை தீண்டாமை என்று சொல்பவர்கள் வடி கட்டின முட்டாள்கள்.In order to have an unity, Either all sort of reservations based on caste

கருத்துகள் இல்லை: