
நான் கடவுள் படத்திற்காக தேசிய விருது
படத்தில் ஆர்யாவும், விஷாலும் நாயகர்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் கெஸ்ட் ரோல் செய்கிறார் சூர்யா
இப்படத்தில் விஷால் அரவாணி வேடத்தில் நடிக்கிறாராம். வேடப் பொருத்தமும், நடிப்பும் கன கச்சிதமாக வந்துள்ளதாம். நடிப்பில் தத்ரூபம் இருக்க வேண்டும் என்பதற்காக விஷாலுக்கு நிறைய பயிற்சிகளைக் கொடுத்து வருகிறாராம் பாலா. விஷாலும் கூட தனியாக பயிற்சி எடுத்துமெருகூட்டிக் கொள்கிறாராம்.
படத்தின் ஹீரோயின் ஜனனி அய்யரையும் நடிப்பில் வெளுத்துக் கட்ட வைத்து வருகிறாராம் பாலா.
சேது என்ற மெகா ஹிட்டைக் கொடுத்த பின்னர் நந்தா படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையைப் பயன்படுத்தினார் பாலா. அதேபோல, நான் கடவுள் படத்திற்காக பிரமாதமாக இசையமைத்த இளையராஜாவுக்குப் பதில் இப்படத்தில் யுவன் இசையை பயன்படுத்துகிறார் பாலா.
வழக்கம் போல நிதானமாக படத்தை எடுத்து வந்தாலும் கூட தரத்தில் சற்றும் குறைவிருக்காது என நம்பலாம்.
பதிவு செய்தது: 23 Jul 2010 9:26 am
இவருக்கு இத்தான் பெர்பெக்ட் மேட்ச் மச்சி. ஹீரோ ரோலுக்கு லக்கி இல்லைங்கோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக