செவ்வாய், 27 ஜூலை, 2010

இலங்கையில் பூராகவும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டு

இலங்கையில் பூராகவும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. 7 வயது சிறுமி ஒருத்தி 60 வயது நபர் ஒருவனால் வாழைச்சேனை பிரதேசத்திலும் 14 வயது சிறுமி ஒருத்தி 22 வயது இளைஞன் ஒருவனால் றுவன்வெல பிரதேசத்திலும் கற்பழிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருத்தி பாடசாலையிலிருந்து வீடு திரும்புகையில் வழிமறித்த விற்பனை முகவர் ஒருவர் தவறாக அணுகியதை அடுத்து மாணவி கூக்குரல் எழுப்பியபோது விற்பனை முகவரை சுற்றி வழைத்த பொது மக்கள் பொலிஸாரிடம் பாரமளித்துள்ளனர். கற்பழிப்பு முயற்சிக்கான குற்றஞ் சுமத்தப்பட்டு இளைஞன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் மினுவன்கொட பிரதேசத்திலுள்ள குடும்பமொன்றிடம் 500 000 ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. அப்பணத்தை கொடுக்கத்தவறின் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என மிரட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் 100000 பணம் கப்பக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுச் செல்கையில் நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்படுகின்றனர்.

அத்துடன் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றுக்கு வைப்பிலிடச் எடுத்துச் செல்லப்பட்ட பணம் வங்கி அருகே வைத்து ஆயுத முனையில் பறித்துச் செல்லப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் பைசிக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு நிறுவனத்திற்கு சொந்தமான 14 லட்சம் ரூபா பணத்தை பணத்தை வைப்பிலிடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வங்கி அருகே காத்திருந்த இவருர் கைத்துப்பாக்கியை காட்டி பணப்பையை பறித்துச் சென்றதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை: