திங்கள், 26 ஜூலை, 2010

ராகுல் எதிர்ப்பு, காடுகளை வேதாந்தம் கம்பனிக்கு தாரை வார்க்கும்

ஒரிசாவில் நியமகரி மலைத் தொடர் உள்ளது. அந்த மலையில் காடுகள் உள்ளன. அங்கு புலி, யானை உட்பட பல வன விலங்குகளோடு, பெரிய பல்லிகளும் உள்ளன. இங்கு பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இதே காட்டில், அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் தாதுப் பொருளான, "பாக்சைட்' கிடைக்கிறது. அலுமினியம் தயாரிக்கும் கம்பெனியான வேதாந்தாவுக்கு, இந்த காட்டில் கிடைக்கும் தாதுவை வெட்டியெடுக்க அனுமதி கொடுத்துள்ளது சுப்ரீம் கோர்ட். ஆனால், இதற்கு பலவித நிபந்தனைகள் உண்டு.இதற்கு ஒரிசா பழங்குடியினர், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த இடத்திற்கு ராகுல் சென்றிருந்தார். பழங்குடியினரைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்னையை அறிந்து கொண்டார். டில்லிக்கு வந்ததுமே, "வேதாந்தா கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வழி தேடுங்கள்' என்றார். அதற்கேற்றார் போல, இந்திய அட்டர்னி ஜெனரலும், "சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்தாலும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது' என்று கருத்து சொன்னார்.இதனால், தாது வெட்டியெடுக்க அனுமதி கிடைக்காது என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

 
பழங்குடி மக்கள் வாழும் காடுகளை வேதாந்தம் கம்பனிக்குதாரை வார்க்கும் விஷயம் அவ்வளவு லேசானதல்ல என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக தெரியவருகிறது. பன்னாட்டு வணிக காப்பிரட்டுக்களுக்கு தேனைக்கொடுக்க பொய் நக்சலைட் தேள் கொட்டும் அபாயம் தற்போதாவது உணரமுடிந்தது பெரிய காரியம். இழப்பதற்கு எதுவும் இல்லாத பழங்குடி மக்களின் வாழ்க்கையை சிதைத்தால் விழைவுகள் பாரதூரமாக இருக்கும் ஞானோதயம் வரவேற்கதக்கதே.
இதன் வழிப்பாடு தான் தற்போது மதிய அரசு இந்த நல்ல முடிவு எடுத்துள்ளது.

இந்த விவகாரம், ராகுலுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: