திங்கள், 26 ஜூலை, 2010

கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்கள்

இலங்கையின் வடக்கே போர் நடைபெற்ற வன்னிப்பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் பல பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர். யுத்தச் சூழலில் கணவரை இழந்த பெண்கள், தடுப்புக்காவலில் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு எவ்எஸ்டி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கண்ணிவெடிகள் மிகவும் நெருக்கமாகக் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் கூறுகின்றார்கள். கண்ணிவெடி அகற்றும் பணியில் நவீன உபகரணங்கள் ரிமோட் கண்ரோலில் இயக்கத்தக்க இயந்திரங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கண்ணிவெடி அகற்றும் பணி வேகப்படுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.


கருத்துகள் இல்லை: