வியாழன், 8 ஏப்ரல், 2010

புலிக்கு காசைக் கொட்டி இப்படியாய் போச்சு சரத்தை நம்பி கவிழ்ந்து போச்சு இப்போது ஒரே குழப்பம் இன்னமும் யாரை

புலிகளால் ஒரு அரசியல் அமைப்பாக நிலைத்து நிற்க முடியாது (sustainability). . அவர்களின் அழிவு நிச்சயமானது என்ற நம்பிக்கை எப்போதுமே கியூறியஸ்க்கு இருந்து வந்தது கருணாவின் பிளவு தான் புலிகளின் அழிவின் உத்தியோகபூர்வமான கோலாகல ஆரம்பம் தனக்கெதிராகப் பிரிந்த தன் தளபதியினால் ஏற்படப் போகும் பாதிப்பைப் பற்றித் தெரியாத முக்காலம் உணர்ந்த தீர்க்கதரிசி வெருகல் ஆறு கடந்து அடக்கியாள நினைத்து. கடைசியில் மாவில் ஆறில்ழ தொடங்கி முள்ளி வாய்க்காலில்ழ முடிந்த கதை. தனக்கெதிராகப் பிரியும்   ராஜயம் என்ன. காட்டுத் தர்பார் கூட நிலைத்து நிற்காது என்பதை உறுதிபட சான்று பகர்கிறது
   ஆயுதத்திற்குப் பயந்து மௌனப் பெரும்பான்மை விக்கித்துப் போய் செய்வதறியாது. பேய்க்கு வாழ்க்கைப் பட்டுப் வன்னிப் புளியமரத்தில் ஏற. புலன் பெயர்ந்த யாழ்ப்பாணிகளின் புளிச்சல் ஏவறை விடுதலை உணர்வினால் வெல்பெயர். கிறடிட் காட் டொலர்களும் யூரோக்களும் புலிகளைப் பப்பா மரத்தில் ஏற்றி விட்டதால். தங்கள் மீதான பயத்தை ஆதரவு என்று புலிகள் பிரகடனப்படுத்தி. தங்களை தமிழ் இனத்தின் ஏக பிரதிநிதிகளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர் எந்தத் தேர்தலிலுமே மக்களின் அங்கீகாரத்தைப் பெறாத புலிகள் ஈழ விடுதலைக்கான தேர்தல் அங்கீகாரம் பெற்றவர்களையும். தங்களைப் போலவே உணர்வினால் உந்தப்பட்டு ஆயுதம் தூக்கியவர்களையும் மண்டையில் போட்ட பின்னாலும். தங்களின் ஏகபிரதிநிதித்துவத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தவர்களைக் கொல்வதற்கான முயற்சியில் தங்கள் இறுதித்துளி இரத்தம் இருக்கும்வரையில் பின்நின்றதில்லை அது டக்ளஸ க இருந்தால் என்னட பெருமாளாக இருந்தால் என்னடூ எதிரியால் சூழப்பட்டு நின்றபோதும். கொலை வெறி புலிகளை விட்டுப் போனதில்லை
   ஏகபிரதிநிதிகளின் ஏகபோகத்திற்கு ஆபத்து என்ற பயத்தினால் அருண்டவர்களின் கண்களுக்கு இருண்டதெல்லாம் பிசாசாகத் தான் தெரிந்தது வீடு கொழுத்தும் மன்னனுக்கு கொள்ளி எடுத்துக் கொடுத்த புலன்  பெயர்ந்த கூட்டமும் இந்தப் படிக்காத மேதகுவை தேசியத் தலைவராக மட்டுமல்ல. அநீதியை அழிக்க வந்து பிறந்த ஒரு வரலாற்று அவதாரமாக. கடவுளாக. காதில் பூவைத்துச் சுற்றிப் பணம் சம்பாதித்த புலி வால்கள் விற்ற படங்களை சாமியறைகளுக்குள் வைத்து விளக்கேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தது
   ஏகபிரதிநிதிகள் என்பதால். தங்களை உட்படுத்தாத எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ள மறுத்து சிதைக்கப் புறப்பட்டதால் தான். தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனத்தால் குறைந்த பட்ச வடக்கு கிழக்கு இணைப்புக் கூட தமிழினத்திற்கு கைக்கெட்டாமல் போனது பட்டுத்துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணமும் இன்று பறிபோய் விட்டது  
   இப்படியாக இந்த கோமாளிக்கூத்துடன் தமிழ்த் தேசியத்தின் முள்ளந்தண்டு முள்ளிவாய்க்காலில் வைத்து முறிக்கப்பட்டது ஜெய்ப்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதற்கு முள்ளந்தண்டு என்ன சாதாரண அவயவமா
   இப்படியாகத் தானே தனக்கு எதிராகப் பிரிந்த ஏகபிரதிநிதித்துவம் எங்கள் கண் முன்னாலேயே நிலைத்து நிற்க முடியாமல் சிதைந்து போனது
   சமீபத்தில் சிகையலங்காரம் செய்யப் போன இடத்தில். நிபுணர் கழுத்தில் கத்தியை வைத்திருந்த போது. கியூறியஸ் என்ன எலக்சனுக்கு வோட் போடப் போகேலையோ என்று கதையை விட்டான் அவரும் பெருமிதமாக தனது குடும்பத்தினர் ஏற்கனவே பதிவு செய்தது பற்றிக் கூறி தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் இன உணர்வு பற்றிக் கூறிய போது. அப்ப உந்த காங்கிரஸ்காரர் உவையோட இல்லைப் போல என்று கியூறியஸ் அவிழ்த்தான் அண்ணை. உதுதானே தமிழன் ஒற்றுமை இல்லை என்று நிபுணர் தன் மனக்குறையை வெளிப்படுத்த. நாங்கள் எந்தக் காலத்தில ஒற்றுமையைப் பற்றி கதைச்சனாங்கள்டூ எங்கட ஆக்களை நாங்களே கொலை செய்யேக்கை நாங்கள் பேசாமல் இருந்து போட்டு. இப்ப ஒற்றுமை எண்டு கதைச்சால் எவன் வருவான் என்று கியூறியஸ் உண்மை விளம்பினான்
   நெற்றியில் கண் வைத்தால் என்னட கழுத்தில் கத்தி வைத்தாலும் கியூறியஸ் உண்மை தான் பேசுவான் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்
   கியூறியஸ் மற்ற பக்கம் என்ற உண்மை உணர்ந்து கொண்ட நிபுணரும். அதுதானே அண்ணை. உவங்கள் பார்த்த வேலை என்று கட்சி மாறி தன் சுய்ருபத்தை வெளிப்படுத்தினார்
   இதுதான் இதுவரை காலமும் எங்கள் தேசிய உணர்வு  எங்கள் போலிப் பக்தி உணர்வை மற்றவர்களுக்கு காட்டி எங்கள் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்த தமிழீழப் போராட்டத் திருவிழாவுக்குப் போகும் ட்ரக்டரில் தேசியத் தலைவருக்கு அரோகராப் போட்டுக் கொண்டு ஓசிப் பயணம் செய்தவர்கள் தான் எல்லாரும் எதிர்க்கருத்தைக் கூறினால் துரோகி என்ற பட்டம் கிடைக்கும் என்ற பயத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கும்பலில் கோவிந்தா போட்டு தேரிழுக்க. திருவிழாவில் ஊடகக்காரர்கள். ஆய்வாளர்கள் என முடிச்சு மாறிகளும் யாவாரிகளும் உண்டியல்காரர்களும் வெற்றுத் திருமேனியராய் சந்தனம். பட்டை நாமங்களுடன் மெய்யடியார் வேடம் போட்டதில் என்ன ஆச்சரியம் பக்தர்கள் கடவுளாக நம்பிக் கொண்டிருந்த நித்தியானந்தர்கள்  வேட்டியை உருவி வெள்ளைக் கொடியாக்கி. கோவணத்துடன் சரணடைந்து நந்திக்கடலின் தீர்த்தத்தில் சோதியோடு சங்கமித்தனர்
   பாவம். பொய்யடியார்கள்? அதிர்ச்சியில் விறைத்துப் போய் என்ன செய்வதென்று அறியாத நிலையில். பேய்கள். பசாசுகளை வழிபட வேண்டிய நிலை இன்று சரத் பொன்சேகாவில் தொடங்கி சம்பந்தன். சுரேஸ் வரைக்கும் என. இதுவரை காலமும் தலை மேல் கைகூப்பித் தொழாத தெய்வங்கள் எல்லாம் இன்று புலன் பெயர்ந்த கூட்டத்தின் இதயங்களில் கடா வெட்டாத குறையாக கோயில் கொண்டெழுந்தருளியுள்ளனர்
   இதுநாள் வரையில். தேர்தல் என்பதும் ஜனநாயகம் என்பதும் வேண்டத்தகாதனவாகி. ஏகபிரதிநிதிகள் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லையாகிய நிலை எல்லாம் போய். இன்றைக்கு பட்டுத் துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணத்தையும் இழந்த நிலையில் தேர்தல் மூலமாக தமிழர் உரிமையைப் பெற புதிய ஒரு கூட்டமாய் ஏகப்பட்ட பிரதிநிதிகள் கிளம்பியுள்ளனர்
   துரையப்பாவில் ஆரம்பித்த வரலாற்றுச் சுழற்சி திருமதி யோகேஸ்வரன் வரைக்கும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தது என்றால். சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை துரோகி என்று சுட்டதில் ஆரம்பித்து இன்று அதே சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் அதே யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நிற்கும் சுழற்சியில் வந்து நிற்கிறது வரலாறு இப்படி அடிக்கடி சுழன்று வந்து நிற்கும் என்று எந்த ஏகப் பிரதிநிதி கனவு கண்டிருப்பார்
   அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் ஆயுதம் தூக்கியதாக புலிகளும் ஆய்வாளர்களும் வெளிநாட்டவர்களுக்கு காது குத்த முயலும் புலன் பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகளும் இன்று ஆயுதப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் அகிம்சைதான் வழி என்று இன்னொரு சுற்றில் வந்து நிற்கிறார்கள்
   ஆனால் ஒன்று மட்டும் மறைக்க முடியாத உண்மை இந்தத் தடவை மட்டும் அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாவிட்டால். ஆயுதப் போராட்டம் இன்னொரு தடவை தோன்றாது காரணம். தமிழ்த் தேசியத்திற்கு முள்ளி வாய்க்காலில் வைத்து முள்ளந்தண்டு முறிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது மட்டுமல்ல. தமிழர் அரசியலுக்கு நலமும் எடுக்கப்பட்டு விட்டது வீறு கொண்டெழுவதற்கு இங்கே வீரியத்தில் மிச்சம் எதுவும் இல்லை புலன் பெயர்ந்தவர்கள் மட்டும் கனவில் சுய இன்பம் கண்டு கொண்டிருக்கிறார்கள்
   ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி போல. இராணுவம் வடக்கில் நடமாடினாலும். இராணுவம் போகக் கூடாது. போனால் உள்ளுர்க் கூட்டம் ஆயுதத்தோடு இறங்கி அட்டகாசம் பண்ஹம் என்ற நினைப்பில் அங்குள்ள மக்கள் உள்ளார்கள் ஆனால்;. ஆமிக்காரனுக்கு யாராவது பனங்கொட்டையாலாவது எறிய மாட்டானா. இராணுவம் திருப்பிச் சுட மாட்டாதா என்று புலன் பெயர்ந்தவர்கள் தான் நாக்கை நனைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இன அழிப்பு என்றும் தமிழர் விடுதலை உணர்வை மழுங்கடிக்க முடியாது என்றும் இங்கே கூச்சல் போடுவதற்காக?
   புலிகளின் ஹீரோ விளையாட்டுக்களை நம்பி. இலங்கை அரசியலில் புலிகளோடு பேசாமல் தீர்வு இல்லை என்று சர்வதேச ச்முகம்  ஒரு வருடத்திற்கு முன்வரை சொல்லிக் கொண்டிருந்த நிலையில். இன்று இலங்கை அரசியலில் புலிகள் ஒரு தீர்மானிக்கும் சக்தி இல்லை என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது தேசியத் தலைவரின் வழி நடப்போம் என்று நெஞ்சில் கை வைத்துச் சத்தியப் பிரமாணம் செய்து. வேட்புமனுவை தேசியத் தலைவரின் படத்தின் முன்னால் வைத்து விட்டு தாக்கல் செய்வதற்கு இன்று யாருமில்லை புலிகளோடு தங்களை நேரடியாக அடையாளம் காட்ட யாரும் இல்லை தங்கள் கடைசிக் காலத்தில் புலிகள் மூளையைக் கழுவி விட்டுப் போன சுலோகமான தாயகம். தேசியம். தன்னாட்சி என்பதை மட்டும் வைத்து. புலிகளுக்கு தாயக மக்கள் மத்தியில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் ஆதரவை வசப்படுத்த சிவாஜி முதல் பத்மினி வரை அதாவது சிவாஜிலிங்கம் முதல் பத்மினி சிதம்பரநாதன் வரைக்கும் முயற்சி நடக்கிறது
   எங்களுடைய அரசியல் இன்று எந்த நிலையில் வந்து நிற்கிறது வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது. இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை. புலிப் பிரச்சனை தான் இருக்கிறது என்று இனவாத அரசியல் கக்கும் ஜேவி.பிக்கு வடக்கில் அலுவலகம் திறக்கப்படுகிறது புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் போனவர்கள் மகிந்தவை ஒரு மேதகு தேசியத் தலைவராக்கி தேர்தலில் நிற்கிறார்கள்
புலிகளால் திணிக்கப்பட்ட ஏகபிரதிநிதித்துவ அரசியல் போய் தமிழர் அரசியல் பன்முகப்படுகிறது என்று பெருமைப்படவாடூ அல்லது. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற வகையில். இந்த மக்களின் அழிவில் லாபம் பெறும் அயோக்கியத்தனம் என்று கோபப்படவா?
தமிழ் அரசியலின் வழமையான முகங்கள் மட்டுமல்ல. இன்னோரன்ன அனாமதேயங்களும் இன்று கொடியைத் தூக்கிக் கொண்டு தேர்தல் திருவிழாவில் காவடி தூக்கியுள்ளன பூனையில்லாத வீட்டில் எலி சன்னதம் கொண்டு ஆடும் என்றால். புலியில்லாத காட்டில் குரங்குகள் கும்மாளம் போடுவதில் என்ன ஆச்சரியம்
தமிழர் பிரதேசத்தில் வாக்காளர் அட்டையின் அளவு உலக சாதனை படைக்கும் அளவுக்கு வாக்காளரை விட. வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது கூர்ப்பில் முதல் தோன்றிய குரங்கு பிரபஞ்சத்தின் மையமான யாழ்ப்பாணத்தில் தான் தோன்றியது என்று. மோட்டுச் சிங்களவன். வடக்கத்தையான் என்று ஊரில் தொடங்கி. சப்பட்டை. கறுவல். அடையான் என்று புலன் பெயர்ந்தது வரைக்கும். தன்னை மட்டும் புத்திசாலி என்று நினைத்த இந்த படித்த யாழ்ப்பாணிகளுக்கு ஒரு கொடியின் கீழ் நிற்க முடியவில்லை இதற்குள் இங்கே புலன் பெயர்ந்த கூட்டம் புலிக்கொடியை ஆட்டிக் கொண்டு தமிழர் தேசியக் கொடி என்று பேய்க்காட்ட முயற்சிக்கிறது 
இதைக் கண்ட பின்னால். அட. கோவணமும் போன பின்னால். இனி என்ன கேவலம் நடக்கப் போகிறதோ  என்ற பயத்தில் இன ஒற்றுமைக் கோசம் என்று கிளம்பியிருக்கிறது புலி ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளும்போது விசிலடித்த கூட்டம். முள்ளிவாய்க்காலில் கோவணம் உருவப்பட்ட பின்னாலும். தன் நிர்வாணத்தை உணர்ந்து கொள்வதாக இல்லை
எந்தக் காலத்தில் ஐயா ஒற்றுமை பற்றிப் பேசினீர்கள் வாத்யார் நாலு பேரை வைச்சு ஒற்றுமை முயற்சி செய்த போது கை குலுக்கி போட்டோ எடுத்து விற்றுப் பணம் சம்பாதித்த பின்னால். கூட நின்றவர்களுக்கு குழி பறித்த போது. எங்கே போனது ஒற்றுமை வந்தவர்களை உபசரித்த. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து அமிர்தலிங்கத்தைப் போட்ட போது. எங்கே போனது ஒற்றுமை கருணாவின் பிரிவின் பின்னால். ஒட்டிக் கொண்டு உணவில் நஞ்சு வைத்துக் கொன்ற போது. எங்கே போனதாம் ஒற்றுமைடூ எரியும் டயரில் தூக்கி எறிந்தபோது எங்கே போனது இனஉணர்வுடூ மைக்கேலில் தொடங்கி மகேஸ்வரி வரைக்கும் துரோகி ஒழிப்புச் செய்தபோது ஒற்றுமை எங்கே போனது
இன்று எல்லாமே போய். சர்வதேசமும் கை விட்டு சொறிநாய்கள் போல ஒதுக்கப் பட்ட பின்னால் வருகிற ஞானம் யாருக்கையா உதவும்
ஒற்றுமை யாருக்கு வேண்டுகிறீர்கள் ஒற்றுமை வட்டுக்கோட்டைக்கும் நாடு கடந்த ஈழத்திற்கும் ஒற்றுமை எங்கே ஆளாளுக்கு கல்லுக் குத்திக் குழி பறித்து. அந்த தேர்தலுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்று மாறி மாறி அறிக்கை விடுகிறீர்களே இதுவரை காலமும் நியாயத்தைச் சொன்னவர்களை துரோகி என்று திட்டித் தீர்த்து விட்டு. உங்களுக்குள்ளே இன்று நடக்கும் காட்டிக் கொடுப்புகளையும் கழுத்தறுப்புகளையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கந்தனுக்கும் அரோகரா? முருகனுக்கும் அரோகரா? என்று போய் மாறி மாறி வாக்களிக்கிறீர்களே?
முரண்டு பிடித்த குதிரையைக் கழற்றி விட்டதால். சம்பந்தனும் பொன்னரின் பேரனும் எருமைக் கடா போல் முட்டி மோதிக் கொள்வதைப் பார்த்த பின்னால். வாக்குகள் பிரிந்து போய் தமிழ்த்தேசியத்தின் நிர்வாணத்தை உலகம் அறிந்து விடும் என்று பயத்தில் பேசப்படுவது தான் இந்த ஒற்றுமை
புலன் பெயர்ந்த இந்தக் கூட்டம் ஒற்றுமை வேண்டுவது தமிழின விடுதலைக்காக இல்லை ஊருக்கு வா. கவனிக்கிறம் என்று மிரட்டி. தாண்டிக்குளத்துப் பாஸ் வாங்க வைத்த கழுதைப்புலிகள் எல்லாம் தேய்ந்து. இன்று நாடு கடந்த அரசுக்கு அதிஸ்டலாபச்சீட்டு நிலைக்கு குட்டிச் சுவராகி விட்டன இந்த ஒற்றுமைக் கோஷம் எல்லாம் வருமானத்திற்கான வழியே அன்றி. இனப்பிரச்சனை தீர்ப்பதற்காக அல்ல
சரி. இன்று தேர்தல் களத்;தில் குதித்திருப்பவர்கள் எத்தனை பேர் ஈழம் தான் முடிவு என்ற காலம் போய். மகிந்த முதல் ஜே.வி.பி வரையிலும். ஒஸ்லோ முதல் இந்தியா வரைக்கும் தீர்வு என்ற பல்வேறுபட்ட கோஷங்களுடன் இன்று பல தான்தோன்றீஸ்வரர்கள் ஆங்காங்கே எழுந்தருளியுள்ளனர் இதில் ஈழத்தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை புலிகள் காலில் போட்டு மிதித்து கழுத்தை நெரித்த போதெல்லாம் மூச்சே விடாதவர்களும் புலிகளை நியாயப்படுத்தியவர்களும் என நிறையப் பேர் புலன் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கூட. தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர்கள் கூட இன்றைக்கு ஈழத்தில் போய் ஜனநாயகத் தேர்தல் களத்தில் குதிக்க மகிந்த சிந்தனையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வழிவகுத்திருக்கிறது போதாக்குறைக்கு சமஷ்டி தீர்வு கூட இல்லை என்று அறிக்கை விட்ட ரணிலுக்கு கொடி தூக்க. திருமதி மண்ணெண்ணெய் தலைமையில் ஒரு கூட்டம் பிடுங்குகிறவரைக்கும் லாபம் என்றால் எரிகிற வீட்டுக்கு மண்ணெண்ணெய் ஊற்றுவது புத்திசாலித்தனம் தானே
ஏகபிரதிநிதிகளின் கடைசிக்காலத்தில் ஐ.தே.கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் பிரதிநிதித்துவம் பெற்று மண்ணெண்ணெய். (அவர் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக?) புலிகளாலும் புலன் பெயர்ந்தவர்களாலும் தூக்கிப்பிடிக்கப்பட்டது ஏகபிரதிநிதித்துவத்தின் அழிவிற்கான ஒரு சகுனம் தானே
 ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட. தங்கள் பாதைகளைப் பற்றி சரியான தெளிவில்லாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் ஜனநாயகத்தில் நுழைந்தாலும். வன்முறைகள் ஆங்காங்கே தலைகாட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன
சங்கரியரும் தீவுப்பகுதியில் எதிர்ப்புகளுக்கு மத்தியிலான பிரசார வேகத்தின் நடுவிலும் திறந்த கடிதம் எழுதுவதை விடுவதாயில்லை
புலிகளின் புண்ணியத்தில் விருப்பு வாக்குப் பெரும்பான்மை பெற்ற குதிரையின் மகத்துவம் இந்தத் தேர்தலோடு தெரிய வரும். குதிரையின் மேல் காசு கட்டிய பொன்னரின் பேரனும் சம்பந்தனுக்கு குழி பறிப்பதில் கவனமாய் இருக்கிறார்.
புலி மேல் சவாரி செய்த சுரேஸ்  இன்று கூட்டணியின் வாக்குகளில் சவாரி செய்து பாராளுமன்றம் போகும் திட்டத்தில் சுரேஸ் கூட்டணியுடன் ஒட்டிக் கொண்டிருப்பதன் மர்மமே இது தானே அன்றி இன ஒற்றுமை இல்லை தனிக்கொடி தூக்கினால் யாழ்ப்பாணத்தில் சுரேசை  நாயும் தேடாது. சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்ததற்கு தமிழ் மக்களுக்கு நன்றி கூறி சுரேஸ் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தவர்களை இராணுவம் கைது செய்தது என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி
சம்பந்தர் தான் பாவம் இந்தியாவைச் சமாளிக்க ஒஸ்லோ பிரகடனம். இலங்கை அரசைச் சமாளிக்க ஐக்கிய இலங்கை. புலன் பெயர்ந்தவர்களைப் பேய்க் காட்ட தாயகம். தேசியம். தன்னாட்சி என்று அடிக்கடி மாறுவேசம் போட வேண்டியிருக்கிறது இதற்குள் தன்னைக் கவிழ்க்க சூளுரைத்த பொன்னரின் பேரன் கூட்டத்தை வேறு சமாளிக்க வேண்டும்
மறுபுறத்தில் கிழக்கில் புதிதாக கொம்பு முளைத்தவர்களும் கொம்பு சீவப்பட்டவர்களும் முரட்டுக்காளைகளாகி முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள் பிந்தி முளைத்த கொம்பு முந்தி வளர்ந்த காதை மறைப்பது குறித்து சம்பந்தன் பொருமிக் கொள்ளக் கூடும்
தமிழ்ப்படத்தின் காமெடி லைன் மாதிரி. மகிந்தவின் பணத்திலும் சொந்தப் பணத்திலுமாய் சுய இச்சைக் கோமாளிக் கூட்டம் ஒன்று
இப்படிக்கொத்த கூட்டம் இன்று மோதிக் கொள்வது எதற்காக பாராளுமன்றம் போய் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக?
இந்தப் பாராளுமன்றக் கதிரைகளுக்கும் மிட்சுபி ஜீப்புக்குமாக தான் கூட்டணி தமிழினத்திற்கு துரோகம் பண்ணியது என்று மண்டையில் போட வெளிக்கிட்ட தமிழ்த் தேசியம் இன்று பழைய குருடி கதவைத் திறவடி என்று பாராளுமன்றக் கதவைத் தட்டத் தொடங்கியிருக்கிறது
கருத்துக்கணிப்புகளின்படி. மகிந்தவுக்கு மண்சரிவு வெற்றி கிடைக்கும் அந்த மண்சரிவில் தமிழ்த் தேசியமும் சம்பிரதாயபூர்வமாக புதைக்கப்பட்டு விடும்
தமிழர் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தமிழ் மக்கள் தங்கள் ஏகபிரதிநிதிகளாக யாரையும் அனுப்பி வைக்கப் போவதில்லை முக்கிய கட்சிகள் ஆசனங்களைப் பங்குபோடுவதில் தான் இந்தத் தேர்தல் முடியும் இதில் ஐதேகவும் வடக்கில் ஓரிரு ஆசனங்கள் பெறக்கூடும். இன உணர்வில் அதாவது மண்ணெண்ணெயின் ஊர் இன உணர்வில்?
புலி மேல் சவாரி செய்த குதிரையும் பிறவும் மண் கவ்வுவதோடு. புலிகளுக்கு வடக்கில் மக்கள் ஆதரவு இருந்தது என்ற மாயை மீதும் மண் விழும் சுயேச்சைகள் கட்டுப்பணத்தை இழந்து தங்கள் பதினைந்து நிமிடப் புகழுடன் காணாமல் போவார்கள் கிழக்கில் தமிழின ஒற்றுமையின் புண்ணியத்தில் சிங்கள பிரநிதித்துவம் அதிகரிக்கும்
இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் நடத்தும் அரசியல் எப்படி இருக்கும் அசல் பக்கா தமிழ் நாட்டு அரசியல் போலத் தான் இருக்கும் கட்சித் தாவல்கள் சகஜமாகும் காளிமுத்து. வைகோ போல. நான் மகிந்தவின் போர்வாள் என்ற சீற்றங்கள் அதிகமாகும்
சிங்களக் கட்சிகளை உடைக்க மகிந்த பட்ட சிரமம் தமிழ்க்கட்சிகளை உடைக்கத் தேவைப்படாது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்றால். இனம் இப்படி சிதறுண்டு போனால் ஆட்சியிலிருப்பவர்களுக்கும் கொண்டாட்டம் தானே கூட்டமைப்புத் தவிர்ந்த சகல கட்சிகளையும் விலை கொடுத்து வாங்குவதில் எந்தச் சிரமமும் இருக்காதுஆனால் அதற்கு எந்தத் தேவையும் இல்லாதபடிக்கு மகிந்தவுக்கு பெரும்பான்மை கிடைக்கும்
இருந்தாலும் அரசில் ஒட்டிக் கொள்வதில் பலருக்கு வெட்கம் இருக்காது இலாகா இல்லாத மந்திரிகளாய் இருந்தால் கூட என்ன கவலை உதிரிகள் போட்டி போட்டுக் கொண்டு அரசில் சேர்வார்கள்
கூட்டமைப்பு எந்த மூஞ்சியுடன் அரசில் சேர்வது மகிந்தவுடன் சேர்ந்தால் புலன் பெயர்ந்த கூட்டம் மன்னிக்குமா  எதிர்க்கட்சியில் இருந்து ரணிலையும் மனோ கணேசனையும் கட்டிப்பிடித்து. ஐயோ. இந்த அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா என்று ஒப்பாரி வைக்க வேண்டியது தான் எதிர்க்கட்சியில் இருந்தபடியே தாயகம். தேசியம். தன்னாட்சி என்று புலம்பிக் கொண்டே பகல் கனவு கண்டு கொண்டிருக்க வேண்டியது தான்
பாவம் புலன் பெயர்ந்தவர்கள் அவர்களுடைய அதிஸ்டம் அப்படி அவர்கள் காசைக் கட்டுகிற எதுவும் உருப்படுவதாய் இல்லை புலிக்கு காசைக் கொட்டி இப்படியாய் போச்சு சரத்தை நம்பி கவிழ்ந்து போச்சு இப்போது குதிரையை நம்புவதா மண்டையனை நம்புவதா என்று ஒரே குழப்பம் இன்னமும் யாரை ஆதரிப்பது என்று படைப்பாளிகள் அறிக்கை விடாததால் யாரை ஆதரிப்பது என்று வடக்கு கிழக்கு மக்கள் பெரும் குழப்பத்தில் இருப்பதாகக் கேள்வி ஐயன்மீர் எங்காவது அஞ்ஞாதவாசம் சென்றிருப்பின். இந்த எளியோருக்கு வழிகாட்ட ஒரு ஒரு சிற்றிக்கை விடுப்பின். இச்சிறியேன் மிகவும் நன்றியுடையோனாய் இருப்பேன்
இனிமேல் தமிழருக்கான வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் அரசியல் தீர்வு என்பது வெறும் பகல் கனவுஇ அதை விடவும் மிகவும் மோசமாக. வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக உறைவிடம் என்ற கருத்தை இல்லாதொழிக்க. இன்று தமிழிடங்களில் புத்தர் ஆங்காங்கே தான்தோன்றிக் கொண்டிருக்கிறா இதைத் தடுத்து நிறுத்தக் கூட இந்த தமிழர் அரசியல் தலைமையால் முடியாது
இதற்குள் திலீபனின் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டதற்கு புலன் பெயர்ந்தோர் பொங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை ஏற்கனவே மாவீரர் துயிலும் இல்லங்கள் தென்னம் தோட்டங்களாகிக் கொண்டிருக்கின்றன வரலாற்றை திருத்தி எழுதுவதன் மூலம் வரலாற்றை மாற்றலாம் என்று கனவு கண்ட புலி மூடர்கள் செய்ததையே இன்று சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது
இந்தக் கோட்டை தமிழரின் அடிமைச் சின்னம் என்று  கொக்கரித்தவர் திலீபன் அதை நிறைவேற்ற பல நுற்றாண்டுப் பெருமை பெற்ற கோட்டையை கல்லின் மேல் கல் இராதபடிக்கு  நிர்முலமாக்கி வரலாற்றை மாற்றி எழுத முடியும் என்று கனவு கண்டவர் தேசியத் தலைவர் திலீபனின் நினைவுத் தூபி அழிக்கப்பட்டது தேசியத் தலைவர் அழிக்கப்பட்ட இடத்தில் நினைவுத்தூபி எழுப்பப்பட்டிருக்கிறது
வரலாறு எவ்வளவு கு்ருரமானது என்பதை புலன் பெயர்ந்தவர்களோ சிங்கள இனவாதிகளோ அறிந்து கொள்வதாயில்லை
இன்று தமிழ்த் தேசியக் கனவில் திளைத்து நிற்கும்  புலன் பெயர்ந்த இனமானச் சிங்கங்களுக்கு (புலிகளுக்கு?). தமிழினத்தின் இன்றைய அவலநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை அன்றைக்குப் புலிக்கான நிதியுதவியை நிறுத்தி. ஷசமாதானத் தீர்வுக்கு முயற்சித்தால் மட்டும் உதவி என்று திட்டவட்டமாய் தெரிவித்திருந்தால். புலி திருந்தி வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியோடு புலி இன்றைக்கும் வாழ்ந்திருக்கும் இன்றைக்கும் கூட்டமைப்பு மற்ற அமைப்புகளுடன் சேர்ந்த ஒரு அமைப்பாக இருந்தால் மட்டும் தான் ஆதரவு என்று கூறியிருந்தால் கூட. ஒரு  கொடிக்குள் இணைவதற்கான ஆர்வம் இருந்திருக்கும்
இன்றைக்கும் டக்ளஸும் வரதரும் சித்தார்த்தனும் சங்கரியும் துரோகிகள் என்று புலிகள் சொல்லிக் கொடுத்ததையே பைத்தியக்காரர்கள் மாதிரி திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டிருப்பவர்களால். சம்பந்தனையோ. சிவாஜிலிங்கத்தையோ. பொன்னரின் பேரனையோ துரோகிகள் என்று சொல்ல முடியவில்லையே? மகிந்தவின் ஆசீர்வாதத்துடன் வாக்கைப் பிரித்து தமிழ்த்தேசியத்தின் நிர்வாணத்தை உலகுக்கு எடுத்துக் காட்ட களம் இறங்கியிருப்பவர்களை விட. கருத்துக்கள் முரண்பட்டாலும். அந்த மக்களுக்கு முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களா துரோகிகள்
இன்று களமிறங்கியிருப்பவர்களில் உதிரிகள் ஓரம் கட்டப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இருக்காது சிலர் நெடுமாறன் போல. அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருக்கக் கூடும் ஏற்கனவே பரிச்சயமான அமைப்புகளாக இருப்பவர்களுக்கு இந்தத் தேர்தல் பெரும் அக்னிப்பரீட்சை
இவர்களில் பலரின் அரசியல் நிர்வாணம் தற்போது அம்பலமாகப் போகிறது இதுவரை காலமும் புலிகளையும். தேர்தல் மோசடிகளையும் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு. இன்று சுதந்திரமான தேர்தல் அவர்களின் பலத்தைப் பரீட்சித்துக் கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பம் 
தமிழினத்திற்காக இல்லாவிட்டாலும். தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது இவர்கள் ஒற்றுமையாக இருந்திருக்க வேண்டும்
தனக்கு எதிராகப் பிரியும் எந்த ராஜ;யமும் நிலைத்து நிற்காது என்று குருவானவரான கியூறியஸின் அண்ணன் அன்று சொல்லித் தந்தான் அதைப் போல இன்னொரு குருவானவர் தனது பிரசங்கத்தில் சொன்ன கதையை இங்கே ஞாபக்முட்டுவது பொருத்தமானது
மொகலாய மன்னன் ஒருவன் இந்தியா மீது படையெடுத்து வந்து மலை ஒன்றில் முகாம் இட்டு தங்கியிருக்கிறான் எதிரிகளை வேவு பார்த்து வரும்படி சேவகனை அனுப்புகிறான் போய் வந்த சேவகன் சொல்கிறான் மன்னா? அவர்களை வெற்றி கொள்ள முடியாது அவர்கள் பல்வேறு குழுக்களாக தீப்பந்த ஒளியில் அமர்ந்து உணவருந்துகிறார்கள் அவர்கள் எண்ணிக்கையில் அதிகம்
மன்னன் சொல்கிறான் அவர்கள் ஒரே கூடாரத்தில் ஒரே வெளிச்சத்தில் அமர்ந்து உணவு அருந்தாமல். வௌ;வேறு குழுக்களாக அமர்ந்திருந்தால். அவர்களிடம் ஒற்றுமையில்லை என்று அர்த்தம் எனவே அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்தாலும் அவர்களை நாங்கள் வெற்றி கொள்ள முடியும்
சின்ன வயதுக் கியூறியஸ் கோயிலில் கேட்ட இந்த பிரசங்கத்தை வழங்கியவர் பின்நாளில் புலிகளுக்கு முண்டு கொடுத்த மாம்பழம் சுவாமி என அறியப்பட்ட தேவராஜன் அடிகளார்
மொகலாய மன்னன் இந்தப் பெரிய இந்தியாவை வெற்றி கொண்டது இந்தப் பிரிவினால் தான் மொகலாயர்களின் இடமான ஆப்கானிஸ்தானிலும் சோவியத் ஆக்கிரமிப்பின் பின்னால் விடுதலைக் குழுக்களின் அக்கிரமமும் குத்துவெட்டுக்களும் தான் பின்னால் தலிபான்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது அப்போது ஆப்கானியர்களின் மனநிலை இந்தக் குத்துவெட்டுக்களை விட. தலிபானின் அடக்குமுறை பரவாயில்லை என்ற அளவில் தான் இருந்தது
எங்களுடைய இந்தக் கோஷ்டி மோதலும் கடைசியில் உவங்களை விட புலி பரவாயில்லை என்ற எண்ணத்தை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப் போகிறது இதன் அர்த்தம் புலிகள் மீண்டும் உயிர்  பெறுவார்கள் என்பதல்ல பிளவுபட்ட இந்தக் கூட்டம் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும் என்பது தான்
அப்போது தமிழ் மக்கள் இவர்கள் மீது கொண்ட விரக்தியினால் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு. சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கவும் கூடும்
எதிர்ப்பு அரசியல் நடத்தி எதைக் கண்டோம் என்ற ஷபட்ட பின்னால் வரும் ஞானம் அவர்களுக்கு வந்தால். அதனால் பாதிக்கப்படப் போவது இவர்கள் தான்
இதனை இந்த ஏகப்பட்ட பிரதிநிதிகள் உணர்ந்து கொள்ளவில்லை கிடைக்கின்ற ஓரிண்டு ஆசனங்களை பெரிய வெற்றியாகக் காட்டி யாரும் கொக்கரிக்க முடியாது
முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழ்த் தேசியத்தின் கோவணம் உருவப்பட்டது போல. தேர்தல் களத்தில் இவர்களின் கோவணங்களும் உருவப்படப் போகின்றன
நன்றி: தாயகம்

கருத்துகள் இல்லை: