வியாழன், 28 மே, 2026

திமுக அதிமுக இணைப்பு சாத்தியமா

 ராதா மனோகர் : கலைஞர் எம்ஜியார் என்ற இரு தலைவர்களுக்கு இடையேயான பிரச்சனைதான் அதிமுக திமுக பிரச்சனை!
இவர்களின் பிரச்னை கொள்கை சார்ந்தது அல்ல.
விரும்பத்தகாத பல விடயங்கள் நடந்து முடிந்து போய்விட்டன.
இப்போது இருவரும் உயிரோடு இல்லை 
ஆனால் இருவரின் கட்சிகளுக்கும் இருவரின் திரைப்படங்களும் இன்றும் உயிர்துடிப்போடு உள்ளன 
எனவே இருவரும் தமிழக வாழ்வியலில் தொடர்ந்து இருப்பார்கள் 
சுமார் 40 வருடங்கள் ஒன்றாக ஒரே கொள்கையில் பயணித்த இரு தலைவர்களின் இயக்கங்கள்,
இன்று வடவர் பேராபத்தை எதிர்கொண்டு நிற்கிறது 
முன்னெப்போதையும் விட இப்போது வரலாற்று பகைவர்கள் பெரும் பலத்தோடு உள்ளார்கள் .
வாசல் படி வரை வந்துவிட்டார்கள் 


இடையில் வந்த பகைமை இப்போது போகட்டும் 
ஆதியில் தொடங்கிய திராவிட பயணம் தொடரட்டும் 
எம்ஜியார் ஆதரவாளர்களையும் சேர்த்து கொண்டு பயணிப்போம் 
எங்கள் பகைவர்கள் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு 
என்ற பாரதிதாசன் வரிகளை முன்னெடுத்து செல்வோம் 
வாழ்க திராவிடம் 

கருத்துகள் இல்லை: