tamil.news18.com -Malaiarasu M : வினையாக வந்த இந்தியா - சீனா போர்... ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா?
இந்திய தொழில்துறையின் முகமாக அறியப்பட்டவர் தொழிலதிபர் ரத்தன் டாடா. இவர் தலைமையில் டாடா குழுமம் கைவைக்காத துறைகளே இல்லை எனலாம். ஓய்வுக்கு பின்னும்கூட ஸ்டார்ட்அப் துறைகளில் முதலீடு செய்து மற்ற இளம் தொழிலதிபர்கள் மத்தியில் கெத்து காட்டியவர் ரத்தன் டாடா.
பிசினஸ் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இன்ஸபிரேஷனான டாடா, ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
இந்தக் கேள்விக்கு அவரே வெளிப்படையாக பல முறை பதில் கொடுத்துள்ளார். திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து ரத்தன் டாடா ஒருமுறை அளித்த பேட்டியில், “நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்யும் அளவுக்குச் சென்றவன். ஆனால் என் பாட்டியுடன் இருக்க வேண்டிய நிர்பந்தத்தால், அவசரமாக இந்தியா திரும்பியதால் அது முடியாமல் போய்விட்டது. காதலி இந்தியா வந்தபிறகு திருமணம் செய்யலாம் என நம்பிக் கொண்டிருந்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிரிந்ததால், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த டாடா, அமெரிக்காவில் படித்தவர். அங்கு படிக்கும்போதுதான் ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் டாடா காதல் வயப்பட்டார். ஆனால், தன்னை வளர்த்த பாட்டியின் முதுமை காரணமாக அவசரமாக டாடா இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.
அவர் இந்தியா திரும்பிய சமயத்தில் இந்தியா - சீனா போர் நடந்துகொண்டிருந்ததால், டாடாவின் காதலியை அவரது பெற்றோர்கள் இந்தியா அனுப்ப மறுத்துவிட்டனர். இறுதியில் டாடாவின் முதல் காதல் தோல்வியில் முடிந்தது.
பிரபல பாலிவுட் நடிகை சிமி கரேவாலை ரத்தன் டாடா காதலித்துள்ளார் என்பது கூடுதல் சுவாரஸ்யம். நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் நடிகை சிமி கரேவால். இவரும் ரத்தன் டாடாவும் காதலித்தாக தகவல். ஆனால் இவர்களின் காதல் திருமணத்தில் முடியவில்லை.
சிமி கரேவால் வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டார். ரத்தன் டாடாவுக்கு முன்னதாக, நடிகை சிமி ஜாம்நகரின் மகாராஜா சத்ருசல்யாசின்ஜி, பிரபல கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோரை காதலித்துள்ளார்.
Also Read | Ratan Tata | ரத்தன் டாடா…. இந்திய ஆட்டோ மொபைல் துறையில் மாற்றத்துக்கு வித்திட்ட தொழிலதிபர்!
4 காதல் தோல்விகள்…: மொத்தத்தில் ரத்தன் டாடாவுக்கு நான்கு காதல் தோல்விகளாம். ஒருமுறை திருமணம் குறித்த கேள்விக்கு, “நான்கு முறை திருமணம் செய்யும் நிலைக்கு சென்று, அது கடைசியில் நின்று போனது. எனக்கு மொத்தம் நான்கு காதல் தோல்விகள்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
மேலும், “எனக்கு நிறைய உறவுகள் வந்தன. ஆனால், மனைவி என்று அழைக்கக்கூடிய நபரை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவில்லை. காதல் தோல்விக்குப் பின் வேலை மற்றும் வேலை நிமித்தமான அடிக்கடி பயணம் காரணமாக என்னைப் பற்றிச் சிந்திக்க எனக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. வயதான பின்புதான் அதனைத் திரும்பிப் பார்க்கிறேன்.
திருமணம் முடிக்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால், சிறு வயதிலேயே என் பெற்றோர் விவாகரத்து செய்ததால் மிகவும் பாதிக்கப்பட்டவன் நான். எனது தாயார் இரண்டாம் திருமணம் முடித்தால், நான் படித்த பள்ளியில் கிண்டலுக்கு. அப்போது அதிலிருந்து மீண்டு வர எனக்கு உதவி செய்தது என் பாட்டிதான்” என்று ரத்தன் டாடா திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக