tamil.samayam.com - எழிலரசன்.டி : பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கஞ்சா வைத்திருந்தது,ம்கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்து அவதூறு பரப்பியது என அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. இதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
ராமநாதபுரம் தேர்தல் முடிவுகள் : செல்லாது.. செல்லாது - கோர்ட்டுக்கு போன ஓ.பன்னீர்செல்வம்..இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவரால் தேச பாதுகாப்புக்கு என்ன அச்சுறுத்தல்? சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமீனில் விடுவிக்ககூடாது? என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.
இவ்வழக்கு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அமானுல்லா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது. சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு தண்டனை விதித்த அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தவறு என உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று சுட்டிக்காட்டினர்.
வாதங்களைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறினர். ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
விருதுநகரில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் : உயர் நீதிமன்றத்தை நாடிய விஜய பிரபாகரன்மேலும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக அறிவித்த நீதிபதிகள், “இந்த ஜாமீன் உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான். மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது. இடைக்கால ஜாமீன் என்பது குண்டர் தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே” என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக