வியாழன், 18 ஜூலை, 2024

வடசென்னை பாஜக மகளிர் அணி செயலாளர் அஞ்சலை ஆர்ம்ஸ்ட்ரோங் கொலைக்கு 50 இலட்சம் கொடுத்துள்ளார்?

article_image5

tamil.asianetnews.com  - vinoth kumar :  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி  செயலாளர் அஞ்சலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 19ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது மட்டுமல்லாமல் முதல் வெட்டு வெட்டிய  திருவேங்கடம் என்பது தெரியவந்தது.
 இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஆயுதங்களை ரெட்டேரி அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அவரை  அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் மீதமுள்ள 10 பேரும் போலீஸ் காவல் முடிந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும் மற்றும் வழக்கறிஞருமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மைத்துனரான வழக்கறிஞர் அருள் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில் அவர் மலர்கொடியுடன் தொடர்ச்சியாக பேசியதும் இவரது வங்கி கணக்கில் இருந்து தான் கொலை கும்பலுக்கு 50 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை நடத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகனும் கைது செய்யப்பட்டார். இதுவரை என்டகவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கிடம் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வட சென்னை பாஜக மகளிரணி செயலாளரான அஞ்சலை தலைமறைவாகவுள்ள நிலையில், அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அஞ்சலை வடசென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்தவர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டவர். இவர் திடீரென பாஜக ஐக்கியமாகி வடசென்னை மகளிரணி செயலாளரானார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலரும் அஞ்சலை தான் கை காட்டி வருகின்றனர். தலைமறைவாக உள்ள இவர் கைது செய்யப்படும்  பட்சத்தில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கினாரா? அல்லது  இவருக்கு பின்னால் வேறெரு யாராவது உள்ளார்களா? என்பது தெரியவரும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சங்கிலி தொடர் போல் கைது நடவடிக்கை நீண்டு கொண்டே போகிறது. இதுவரை பாஜக, அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை: