புதன், 17 மே, 2023

பலரும் குடும்பங்களோடு கும்மி அடித்தால் மக்கள் என்ன முட்டாள்களா.!

Kandasamy Mariyappan :  திமுக என்ற கட்சி சனாதனத்தை எதிர்த்து போர் புரியும் வேளையில்...
கட்சியை விமர்சிப்பது எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்ற புரிதல் கூட இல்லாத அரை வேக்காடுகளின் பொதுவெளி பதிவுகள் வேதனையை தருகிறது என்று பல நண்பர்கள் கூறுகின்றனர்.!
சனாதனம் என்றால்...
எல்லா வளங்களும் ஒரு சிலருக்கு மட்டும் என்பதுதானே.!
ஆண்டான் அடிமை சிந்தனை என்பதுதானே.!
தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, ஒதுங்கி போ என்பதுதானே.!
கோவிலுக்குள் வராதே, குளத்தில் இறங்காதே என்பதுதானே.!
இப்போது திமுகவில் என்ன வாழுது.!
அய்யா, சாமி, கும்பிடுறேன் சாமி என்று இல்லையே ஒழிய...
சனாதனத்தை அதிகம் கடைப்பிடிக்கும் கலாச்சார அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், கவுன்சிலர்களாகத்தானே இருக்கின்றனர்.!
கலைஞர், பேராசிரியர் மற்றும் அவர்களது சகாக்களின் செயல்பாடுகள் வேறு.!
இன்று தலைவர் திரு. முக. ஸ்டாலின் தவிர்த்து அவரது சகாக்களின் செயல்பாடுகள் வேறு.!


எல்லோருக்கும் எல்லாம் என்று மாறி...
எங்களுக்கு மட்டுமே எல்லாம் என்ற சனாதன எண்ணம்தான் பலரிடம் உள்ளது.!
எவருக்கும் துறை சார்ந்த சிந்தனை இல்லை.! மக்களோடு பழகவில்லை.! யாரோ இரண்டு சுயநலவாதிகள் கூறுவதும், சில சனாதன எண்ணமுள்ள அதிகாரிகள் கூறுவதையும் வைத்தே துறை செயல்பாடுகள் இருக்கின்றன.!
கட்சியை காப்பாற்ற கட்சித் தலைவர் மகனை கட்சிக்கு கொண்டு வருகிறார் என்றால்...
பாலு குடும்பம்...
துரைமுருகன் குடும்பம்...
பொன்முடி குடும்பம்...
நேரு குடும்பம்...
பெரியசாமி குடும்பம்...
வேலு குடும்பம்...
ஜெகத்ரட்சகன் குடும்பம்...
என்று பலரும் குடும்பங்களோடு கும்மி அடித்தால் மக்கள் என்ன முட்டாள்களா.!
தொண்டர்களுக்கு சுணக்கம் வராதா.!
பிள்ளைகளுக்கு துண்டு போட்டு வைத்து அதனை உறுதிப்படுத்தும் விதமாக உதயநிதிக்கு சலாம் போடுவதை பார்த்து மக்கள் பின் வழியாக சிரிக்கின்றனரே.!
இது சனாதன முடி இல்லையா.!
கட்சிக்கு கலங்கம் வராதா.!
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற மக்களின் அன்றாட வாழ்வில் அங்கமாக உள்ளதை ஒருவரிடமே கொடுத்தால்...
பார்ப்பவர்கள் என்ன கேனையர்களா.!
செயல்பாடுகள் திருப்தி அளிக்கும்படியாக இருந்தாலாவது சரி எவனோ எதையோ பண்ணட்டும் என்று சகித்துக் கொள்வார்கள்.!
செயல்பாடுகள் பள்ளிலிக்கும் போது.!
மீண்டும் உறுதியாக கூறுகிறேன்...
சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்றால், நமது கட்சியில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.!
பிள்ளைகளுக்கு இடம்பிடிக்க உதயாவிற்கு சலாம் போடுவதை நிறுத்த வேண்டும்.!
கட்சியை காப்பாற்றவே திரு. உதயநிதிக்கு பதவி.,
அதனை பயன்படுத்திக் கொண்டு நமது பிள்ளைகளுக்கும் என்று தட்டை தூக்கி கொண்டு செல்லக் கூடாது என்ற சிந்தனை வேண்டும்.!
கட்சியால்தான் இவ்வளவு சமூக மரியாதை, இவ்வளவு பொருளாதார வளர்ச்சி என்ற எண்ணம் வேண்டும்.!
அதனை விடுத்து இன்னும் பணம் சேர்க்க வேண்டும், பல ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகளை கட்டி பொருள் வழங்குபவர்களிடம் திருட வேண்டும் என்று சென்றால்...
மக்கள் வேறு முடிவினை எடுப்பார்கள்.!

கருத்துகள் இல்லை: