ராதா மனோகர் : 1952 இல் தந்தை செல்வாவும் அவரின் சம்பந்தி நாகநாதனும் முறையே காங்கேசன்துறை யாழ்ப்பாணம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் இந்த இருவரும் வெறுப்பு அரசியலை விதைத்து இருக்க மாட்டார்கள்
அந்த தோல்வி இருவரையும் ஒரு தவறான அரசியலை முன்னெடுக்க வைத்து விட்டது. அந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட பரப்புரைகளை இரவல் வாங்கினார்கள்
அதை அப்படியே சிங்கள எதிர்ப்பாக கூர் தீட்டினார்கள்
திராவிட கோட்பாட்டாளரான திரு எஸ் டி சிவநாயகத்தையும் அவரது நண்பர் செல்லையா ராசதுரையையும் கொழும்பில் திராவிட கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழு செயலாளராக இருந்த அமிர்தலிங்கத்தையும் முன்னிறுத்தி தமிழ் தேசிய அரசியல் கடையை விரித்தார்கள்
தமிழினத்தின் மொத்த அரசியலையும் நாசமாக்கிய துரோகி என்ற சொல்லை செல்வநாயகம் நாகநாதன் முதல் முதலில் பயன்படுத்தியது திரு ஜி ஜி பொன்னம்பலத்திற்கு எதிராகத்தான்
இதில் இருந்துதான் தமிழினத்தின் சாபக்கேடான துரோக அரசியல் ஆரம்பித்தது!
ஆரம்பித்து வைத்தவர்கள் செல்வா நாகா குழுவினர்!
இவை எல்லாம் பல இடங்களில் ஏற்கனவே எழுதப்பட்டதுதான்
தமிழரசு கட்சி தங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தையே
முழுக்க முழுக்க நம்பியிருந்தார்கள் என்பதை சுதந்திரன் பத்திரிகையின் பல செய்திகளை முன்பு தந்திருக்கிறேன்
சுதந்திரன் பத்திரிகையில் கடவுள் மறுப்பு பிரசாரத்தை கூட தமிழரசு கட்சியினர் ஒரு மட்டுப்படுத்த பட்ட அளவில் பயன்படுத்தி இருந்தார்கள்.
அதற்கு முக்கிய காரணம் அக்கால கட்டங்களில் பகுத்தறிவு கழகங்கள் கொஞ்சம் வேகமாக இயங்கி கொண்டிருந்தன.
தமிழர் பகுதிகளில் இருந்த இடது சாரி அமைப்புக்களுக்கும் ஓரளவு கடவுள் மறுப்பு அல்லது மத மறுப்பு கொள்கையை கொண்டிருந்தன.
எனவே தமிழரசு கட்சியினர் பகுத்தறிவு பிரசாரம் செய்யவேண்டிய நிலையில் இருந்தார்கள்
யாழ்ப்பாணத்திலே சுயமரியாதை திருமணம் நடந்தேறிய செய்தியும் உண்டு.
காலப்போக்கில் முற்று முழுதாக வெறுப்பு அரசியலை முன்னெடுத்த தமிழரசு கட்சியினர்
மக்கள் நலன் சார்ந்த எந்த கொள்கையையும் வளர விடாது முற்று முழுதாகவே தமிழர்களை சிங்களவர்களுக்கு எதிராக கொம்பு சீவி கொதிநிலைக்குள் தள்ளுவதில் பெரு வெற்றி பெற்றார்கள்
தந்தை செல்வா விதைத்ததுதான் முள்ளிவாய்காலுக்குள் தமிழர்களை தள்ளியது .
இந்த வெறுப்பு அரசியலை விதைத்தது தந்தை செல்வா சம்பந்தி நாகநாதன் ஆகியோர்கள்.
இந்த இருவரின் வெறுப்பு அரசியலை விபரம் இல்லாமல் பின்தொடர்ந்த அமிர்தலிங்கம் தர்மலிங்கம் யோகேஸ்வரன் முதலாக,
அடுத்த தலைமுறையான ஸ்ரீ சபா உமா மகேஸ்வரன் பிரபாகரன் மற்றும் ஏராளமான போராளிகளும் வெறும் அம்புகள்தான்!
மாரன் மீசாலை - கேள்வி : கோயில் என்றால் என்ன?
ஆசிரியர் பதில் : கோயில் என்பது கோழையின் புகலிடம்
காமுகர்களின் கார்னிவல் , மத குருக்களின் தொழிற்சாலை , பயந்தவர்களின் பஜனை மடம்..
இப்படி எழுதி இருப்பது நானல்ல ..
தந்தை செல்வாவின் சொந்த பத்திரிகை .
அந்த காலத்து தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் திரு எஸ் டி சிவநாயகம் அவர்கள் எழுதியதுதான்
சுதந்திரன் 1958 - ஆசிரியர் எஸ் டி சிவநாயகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக