வெள்ளி, 6 ஜனவரி, 2023

11 நாட்கள் இடைவிடாது பறந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பறவை

veerakesari : அலாஸ்காவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் (bar-tailed Godwit) என்ற பறவை 13 ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று பயணத்தை தொடங்கிய இந்த பறவை சுமார் பதினொரு நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்றது 5ஜி செயற்கைக்கோள் மின்பட்டை (5G satellite tag) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.
அலாஸ்காவில் இருந்து பறக்கத் ஆரம்பித்த இந்த பறவை அவுஸ்திரேலியாவின் கிழக்கு தாஸ்மேனியாவில் உள்ள Ansons விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது.
இதற்கு முன்பு இதே இனத்தைச் சேர்ந்த பறவை 2020ஆம் ஆண்டு 217 மைல்கள் பறந்ததே சாதனையாக இருந்து வந்தது.

கருத்துகள் இல்லை: