வியாழன், 8 ஜூன், 2023

இலங்கையில் 3 தொன் ஹெரோயின் போதைப்பொருள்! எரிக்கவும் அனுமதி இல்லை கடலில் போடவும் அனுமதில்லை அரசுக்கு நெருக்கடி

 ஹிருனியூஸ் :  கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயினை அழிப்பது தொடர்பில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான இடம் இல்லாத காரணத்தால் ஹெரோயின் கையிருப்பு சேகரிக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஹெரோயின் கையிருப்புகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்பு இன்னமும் அப்படியே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: