ராஜேஸ் : ஜெய்பீம் என்ற பெயரில் நடந்துள்ள மோசடி!
எல்லாரும் பார்த்து, வியந்து, ரசித்து, நெகிழ்ந்த ராசாகண்ணுவின் லாக்கப் மரணம் தொடர்பான உண்மைக் கதையில் மூன்று மாற்றங்கள் உண்மைக்கு மாறாக செய்யப்பட்டிருக்கிறது,
1) கொலை செய்யப்பட்டவரின் சாதி
2) கொலை செய்தவரின் சாதி
3) கொலைக்கு எதிராக கடைசி வரை போராடியவரின் சாதி
நமக்கு காட்டப்பட்டது என்ன?
♦ கொலை செய்யப்பட்டவர் இருளர்
♦ கொலை செய்தவர் வன்னியர்
♦ கொலையை எதிர்த்துப் போராடியவர் வழக்கறிஞர் சந்துரு
உண்மையில் நடந்தது என்ன?
♦ கொலை செய்யப்பட்டவர் குறவர்
♦ கொலை செய்தவர் தலித் கிருஸ்தவர்
♦ கொலையை எதிர்த்து போராடியவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்த கோவிந்தன் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்
♦ வழக்கை நடத்தியவர் வழக்கறிஞர் சந்துரு மட்டுமல்ல
♦ ஒன்றுக்கு பல வழக்கறிஞர்கள் வழக்காடியுள்ளனர். அவர்களை எல்லாம் ஏற்பாடு செய்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கோவிந்தன்
இதில் நடந்துள்ள மோசடி என்ன?
கொலை செய்யப்படவர் குறவராக இருக்கும் நிலையில் இருளராக காண்பிக்கப்பட்டு இருப்பதை திரைக்காக செய்யப்பட்ட புனைவாக நாம் ஏற்கலாம்.
ஆனால் கொலை செய்தவர் ஒரு தலித் கிருஸ்தவராக இருக்கும் நிலையில் அவரை வலிந்து வன்னியராக காட்டி, குறியீடுகளால் அதை அழுத்தம் திருத்தமாக மக்கள் மனதில் பதித்தவர்கள். . .
கொலையை எதிர்த்து போராடி, வழக்கு முடியும் வரை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்று தன்னுடைய 39 வயது வரை உறுதியாக நின்ற வன்னியரான கோவிந்தன் என்பவரின் கதாப்பாத்திரத்தை படத்தில் முழுவதுமாக மறைத்து இருக்கிறார்கள்.
பாமகவினர் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் இறங்குகிறார்கள்
வடமாவட்டங்களில் வன்னியர் - தலித் மோதல்கள் இருக்கிறது
என்பதெல்லாம் எல்லாருக்குமே தெரிந்த நிலையில் படத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் நம் அனைவரையும் நம்ப வைத்துவிட்டது.
பெரும்பான்மை மக்கள் விரும்பி ஏற்று பரவசமாகி மகிழும்படியாக வெளியாகியுள்ள ஒரு படத்தின் நோக்கமே இப்பொழுது நம் முன் கேள்வியாக நிற்கிறது.
♦ இந்த ஒற்றை மாற்றம் வலிந்து திணிக்கப்பட்டதன் ரகசியம் என்ன?
♦ இந்த உண்மை நீதிபதி சந்துருவுக்கு தெரிந்த நிலையில் இந்த மாற்றம் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை அவர் கவனிக்காமல் போன காரணம் என்ன?
♦ வன்னியருமல்லாத, தலித்துமல்லாத சந்துரு, இருபெரும் சமூகத்துக்கிடையே மோதலை உருவாக்க கூடிய வகையில் கதையின் கதாப்பாத்திரங்களின் சாதி மாற்றங்களை எப்படி அனுமதித்தார்?
♦ படத்தின் வெற்றிக்குப் பிறகு பேட்டிகளாக கொடுத்து தள்ளிக்கொண்டிருக்கும் முன்னாள் நீதியரசர், ஏதாவது ஒரு பேட்டியிலாவது கோவிந்தன் என்கிற வன்னியர் குறித்தாே, கொலை செய்தவர் ஒரு தலித் கிருஸ்துவர் தான், வன்னியர் அல்ல என்ற உண்மையையாே சொல்லியிருக்காரா?
செய்ய வேண்டியது என்ன?
1) படத்தின் இயக்குனர் சம்மந்தப்பட்ட குறியீடுகளை உடனடியாக நீக்க வேண்டும்
2) தன்னை தவறாக வழி நடத்தியவர்கள் யார் என்ற உண்மையை பகிரங்கமாக சொல்ல வேண்டும்
3) வழக்கறிஞர் சந்துரு தனக்கு தெரிந்த உண்மையை மறைத்து தயாரிப்பாளரையும், இயக்குனரையும் தவறாக வழிநடத்தியதற்காகவும், மக்களிடையே தவறான ஒரு கருத்து பதிவாகிட காரணமாக இருந்ததற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா அவர்களின் கவனத்துக்கு
1) நீதிபதி சந்துரு அவர்களும், பிரபா கல்யாணி அவர்களும் ஏற்கனவே நீட் விவகாரத்தில் உங்களை தெருவுக்கு இழுத்து வந்தவர்கள்
2) இதோ இப்பொழுது குறவரை இருளராக்கி, தலித் கிருஸ்தவரை வன்னியராக்கி, தங்களில் ஒருவரை ஹீரோவாக்கி, இன்னொருவரின் NGO பணிக்கு விளம்பரமும் வருமானமும் தேடிக்கொண்டுள்ளனர்
வலித்து திணிக்கப்பட்டுள்ள இந்த சாதி மாற்றத்தினால் நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மீண்டும் தெருவுக்கு வரப்போவது நீங்கள் தான்
3) இந்த கூட்டத்திடம் இருந்து முழுமையாக விலகியிருப்பதே உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது
#கம்யூனிஸ்ட்_இயக்கத்_தோழர்களின்_கவனத்துக்கு...
1) நியாயமாக உங்கள் கட்சியின் களப்பணிக்கும் போராட்டத்துக்கும் கிடைக்க வேண்டிய மரியாதையை, புகழை, உங்களால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வலிந்து கொள்ளையடிப்பதை பார்த்தும் பார்க்காமலிருப்பது உங்கள் பெருந்தன்மையை காட்டுவதாக நினைக்கிறீர்கள் போலும். அது தவறு.
2) உண்மை கதாநாயகர்களான கோவிந்தன், கோவிந்தனுக்கு உறுதுணையாக இருந்த தோழர் பாலகிருஷ்ணன், கட்சியின் சார்பாக வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரையும் கட்சி சார்பாகவே மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு புகழையும் மகிழ்ச்சியையும் தேடித் தாருங்கள்
3) மக்களுக்கு முழுமையான உண்மை தெரிய வழிக்காட்டுங்கள்
நிலவினியன் மாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக