வியாழன், 11 நவம்பர், 2021

கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

 மாலைமலர் : சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர்  4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சென்னையில் இருநது 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை மையம் அறிவித்திருந்தது.


சற்று நேரம் சென்ற பின்னர், கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: