எஸ்தர் : இரவு திறந்தே இருக்கிறது : ஜெய்பீம் திரைப்படத்தை இப்போதுதான் பார்த்து முடித்தேன் ஆனாலும்
கண்ணீர் முடியவில்லை
தமிழ் சினிமாவில் எப்போதும் நான் நம்பிக்கையிழந்தவள் வேற்று தேசத்து படங்களை தேடி ஓடி உணர்ச்சிவசப்பட்டு அழுவேன்
இப்படி சிலவருடம் முன் பரியேறும் பெருமாளை பார்த்து என்னால் மோட்டர் சைக்கிள் ஓடமுடியவில்லை எத்தனை தூரம் ஓடுவேன் பரியேறும் பெருமாளில் எங்கும் புகழ் துவங்க பாடல் கூடவே வரும் கண்ணீர் மழையோடு ஓடுவதை நிறுத்துவேன் இன்று அதே நிலை உணர்வு
நிராகரிக்கப்படும் போது ஒருவனின் வலி இருக்கிறதே அது காயத்தில் காட்டும் உப்பைப் போன்றது
இவ் இருளரைப்போல்தான் மலையக மக்களும் அப்பாவிகள் உலகம் அறியாதவர்கள் காலில் செருப்பில்லாமலே வாழ்ந்து மரித்தவர்கள் ஜெய் பீம் என்பது இருளிலிருந்து ஒளியை தேடிச் செல்வது ஆம் செங்கேணி இருளைவிட்டு வெளியேறுகிறாள் உலகமெங்கும் பழங்குடி மக்கள் ஒடுக்கப்பட்டும் அழிக்கப்பட்ட வரலாறுமே உண்டு
அதை இப்படியான சினிமா தளத்தில் கொண்டு வந்ததே மிகப்பெரும் தருணம் என்பேன்
அண்ணாத்த என்னாத்த சொல்கிறார் எனக்கு ரசனிகாந்தை வாய்பிழந்து பார்த்துக்கொண்டிருக்கும் குருட்டுச் சினிமாவில் சூர்யா என்ற மிக அருமையான நடிகன் செயற்பாட்டாளன் இருளருக்காக மட்டுமல்ல ஒடுங்கிய அத்தனை இனத்துக்காகவும் முன் நிற்க மனிதனாக பிறந்தவன்
இருளர் மிக அப்பாவிகள் Senstive நபர்கள் காதலாலும் அன்பினாலும்உருகும் பனிமலைகள் அவர்தம் இதயம். இவ்எளியவர்களின் நீதி நிலைநாட்டப்பட வேண்டூம்
சாதி சாதி என சாகும்மக்களை செயலாலே சாகடிக்க வேண்டும்
அதற்கு ஒர் வழி கல்வி அம்மக்களுக்கான இட ஒதுக்கீடு பட்டா வாக்குரிமை
அண்மையில் நரிக்குறவர் பெண்ணுக்குஏற்பட்ட புறக்கணிப்பு உடனே அங்கே சீர் செய்யப்பபட்டது அப்பெண் கல்வியை விரும்புகிறாள் வாய் திறந்தே கேட்கிறாள்
நாங்க படிக்கணும்.
இதை அரசே செய்ய வேண்டும்
இந்த புறக்கணிப்பு இலங்கை மலையக மக்களுக்கும் உண்டு
பாடசாலை கல்வியை கைவிட்டு கொழும்பு நகரில்ஹோட்டல்களிலும் பங்களாக்கலும் பல அல்லிகள் அல்லற்பட்ட வரலாறுஉண்டு
இந்த ஜெய் பீம் இருளர்களின் வாழ்வில் விளக்கை ஏற்றி வைத்துள்ளதுஒரு கோடி ரூபா நடிகர் சூர்யாவால் இம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
தற்போது வந்துள்ள அரசாங்கமும் தமிழ்நாட்டில் சாதி அகோரங்களை இல்லாதொழிக்க சட்டமியற்ற வேண்டும் சாதிஅரசியலை கைவிடுதலே மெத்தனத்தகும்.
அதை செய்யும் காரணம் ஈழஅகதிகளின் மறுவாழ்வை இவ் அரசு கையில் எடுத்துள்ளமை மிகஆறுதல்
ஜெய் பீம்
ஒடுக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்தகுரல்
நிஜத்தில் பாதிக்கப்படும் ஒதுக்கப்படும் இம் ஏழை மக்களை சட்டத்தால் காப்பாற்றப்பட வேண்டும்
அதுவே ஜனநாயகம்
பொலிஸ் நிலையங்களில் நடக்கும்இம்மாதிரியான கொடூர அராஜகம் இப்போது இருக்கிறதா தெரியவில்லை நடக்கக்கூடாது
இப்படத்தில் எல்லோரும்அவர்தம்பாத்திரம் அறிந்து நடித்தமைகூடுதல் வெற்றி.
பூலான் தேவி உருவாக ஒரு பொலிஸ் நிலையம்தான் காரணம்
ராசாக்கண்ணு சொன்னது போல நான் செத்தாலும் உனக்கு கல்லு வீட்டீல் வச்சுட்டே செத்துப்போவேன் என்ற கதையின் ஆரம்பத்தை இறுதியில் முடித்துக்காட்டிய திருஞானவேலை வாழ்த்துகிறேன்
நடிகர் சூர்யாவின் தேடல் அபாரம் ஒரு வக்கீலாகவே மாறி மனதை அள்ளிப்போனார்
மொசக்குட்டியின் வாக்கு மூலமும் ராசாக்கண்ணுவின் மரணமும்மரணச் சடங்கும்
இதயத்தை பிழிந்துக்கொண்டிருக்கிறது
எல்லோரும் மனிதர்களே
எல்லோரும் தாய் வயிற்றில் வந்தவர்கள்
வாழ்வு சூழல் அவரவரை வாழ வைக்கிறது நீ பள்ளன் ,பரையன்,சக்கிலியன், இருளர், நரிக்குறவர், ஆர்காட்டான், குடியானவன், கள்ளர் இப்படி மக்கள்கூட்டம் பிரிந்து நிற்பது சாபக்கேடு
காடு நிலம் நீ. மலை நீருற்றை இறைவன் பொதுவாகவே படைத்தான் எல்லா உயிர்களுக்கும் இப்பூமி சொந்தம்என்ற தத்துவம்நிற்கும் போதுஇருளர் மட்டும்எப்படி நிலமற்று போவது இன்றுவரை மலையக மக்களுக்கான காணி எங்கே நிலம் இங்கே வட கிழக்கில் நிலங்கள் ஒருகோடி இப்போது பேரம் போகுது அதே பூமி
அதே நிலம்தானே மலையகத்தில் உண்டு அந்த நிலத்தை யார் சொந்தமாக்கவில்லை வேறு யார் அரசுதான் கவனிப்பாரற்று நாடற்று வீடற்று கூலியற்று மலையக மக்கள் இரு நூறு ஆண்டுகள் இம்மண்ணின் குடிகள்
விசம் வைத்து தீண்டும் சர்ப்பத்தையே
கொன்று விடாத ராசாக்கண்ணுவை விசம் மிகுந்த மனிதன் கொன்று விட்டான்
என்பதை தயாரிப்பாளன் சொல்லிவிட்டான்
எம் உரிமை எமக்கு வேண்டும் எம்மிடம் பணமில்லை நிலமில்லை தொழிலில்லை கல்வியில்லை இவைகளை யார் உருவாக்குகிறார்கள் விரும்பி வந்தா சாதி கெட்டு பிறக்கிறார்கள் ??
இலங்கையில் வடகிழக்கில் உள்ள பாடசாலைகளில் பாடசாலையில் இந்து தலைமையாசிரியர்தான் அதிபராக முடியும் ஒரு கிறிஷ்தவனோ முஸ்லிமோ முடியாது
அதே போல் ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் இந்து மதத்தின் ஒருவர் தலைமையாசிரியராக இருப்பார் ஆனால் தப்பி தவறியும் இந்து பாடசாலைக்கு வேறு மதத்தவன் நுழையக்கூடாது இதை ஒரு யாப்பாகவே வைத்திருக்கிறார்கள்
நீங்க தரம் 1 தலைமையாசிரியர் சகல தகுதியும் உண்டு ஆனாலும் நீங்க பிரபலமான பாடசாலைக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை காரணம் நீ வேதக்காரன் அஞ்சாம் வேதக்காரன் வைன் குடிப்பவன் மாடு தின்பவன் நாங்க புலால் என தட்டிக்கழித்த அதிபர்களின் குமுறல் ஆயிரம்
ஜெய்பும் ஓரு விடயத்தை தெளிவாகச்சொல்லியது அமைதி காப்பதும் மறுக்கப்பட்ட நீதிதான்
மலையகத்தின் பதுளை மீரியபெத்தையில் 300 குடும்பம் மண் சரிவில் மாண்டது அவர்கள் அனைவரும் மலையக மக்களே இத்தேசத்துக்காக மாடாய் உழைத்து மண் வெட்டியாய் தேய்ந்தவர்கள் மண்ணோடேப்போனார்கள் அம்மக்களுக்கு பாதுகாப்பான வீடு கூட இல்லை
ஜெய்பீம் திரைப்படம் தமிழ் நாட்டு சினிமாவின் அதிரடி திருப்பு முனை என்பதில் மாற்றமில்லை
சாதிக் கொடுமைகளை கூறு போட்டு காட்டும் காலம் இது அம்மக்களின் வாழ்வை மேலோங்கச் செய்யும் காலமும் இதுவே
மனசாட்சி இருப்பவன் இருளர் போன்ற அத்தனைப் பழங்குடிகளின் மக்களின் வாழ்வியலை சற்று சிந்திப்பான்
எம் உரிமை எமக்கு வேண்டும் எம்மிடம் பணமில்லை நிலமில்லை தொழிலில்லை கல்வியில்லை இவைகளை யார் உருவாக்குகிறார்கள் விரும்பி வந்தா சாதி கெட்டு பிறக்கிறார்கள் ??
இலங்கையில் வடகிழக்கில் உள்ள பாடசாலைகளில் பாடசாலையில் இந்து தலைமையாசிரியர்தான் அதிபராக முடியும் ஒரு கிறிஷ்தவனோ முஸ்லிமோ முடியாது அதே போல் ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் இந்து மதத்தின் ஒருவர் தலைமையாசிரியராக இருப்பார் ஆனால் தப்பி தவறியும் இந்து பாடசாலைக்கு வேறு மதத்தவன் நுழையக்கூடாது இதை ஒரு யாப்பாகவே வைத்திருக்கிறார்கள்
நீங்க தரம் 1 தலைமையாசிரியர் சகல தகுதியும் உண்டு ஆனாலும் நீங்க பிரபலமான பாடசாலைக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை காரணம் நீ வேதக்காரன் அஞ்சாம் வேதக்காரன் வைன் குடிப்பவன் மாடு தின்பவன் நாங்க புலால் என தட்டிக்கழித்த அதிபர்களின் குமுறல் ஆயிரம்
ஜெய்பும் ஓரு விடயத்தை தெளிவாகச்சொல்லியது அமைதி காப்பதும் மறுக்கப்பட்ட நீதிதான்
மலையகத்தின் பதுளை மீரியபெத்தையில் 300 குடும்பம் மண் சரிவில் மாண்டது அவர்கள் அனைவரும் மலையக மக்களே இத்தேசத்துக்காக மாடாய் உழைத்து மண் வெட்டியாய் தேய்ந்தவர்கள் மண்ணோடேப்போனார்கள் அம்மக்களுக்கு பாதுகாப்பான வீடு கூட இல்லை
ஜெய்பீம் திரைப்படம் தமிழ் நாட்டு சினிமாவின் அதிரடி திருப்பு முனை என்பதில் மாற்றமில்லை
சாதிக் கொடுமைகளை கூறு போட்டு காட்டும் காலம் இது அம்மக்களின் வாழ்வை மேலோங்கச் செய்யும் காலமும் இதுவே
மனசாட்சி இருப்பவன் இருளர் போன்ற அத்தனைப் பழங்குடிகளின் மக்களையும் சக மனிதனாகவே பார்ப்பான்.
இங்கே மனிதனாவது சதாரணம் மனிதருள் மனிதனாவதே சாகாவரம்!!
கிழவனின் சிரிப்பு
புலவனின் கோபம்
செங்கேணியின்
கண்ணீர்
ராசாக்கண்ணுவின் காதல்
அத்தனையும் அர்த்தமுள்ளவைகளே
ஜெய்பீம்! !!
எஸ்தர்
மலையகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக