வெள்ளி, 12 நவம்பர், 2021

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் திடீர் ஆலோசனை வெள்ளநிவாரணம் வழங்குவது பற்றிய ஆய்வு?

 Josephraj V  -  Samayam Tamil : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், தண்ணீரால் ஏற்பட்ட மக்களின் கண்ணீரை துடைக்க சூப்பர் உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திடீரென காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால், தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
முதலில் இடைவிடாமல், லேசானது முதல் மிதமானது வரை பெய்த மழை நேற்று மாலை வேகம் பிடித்தது. இதன் பின்னர் விடிய விடிய மழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.


குறிப்பாக சென்னை திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை விடாமல் பெய்து வருகிறது.
வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னையின் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர் வடியாத சூழல் உள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகள் தீவுகள்போல காட்சி அளிக்கின்றன.

ராயபுரம், பாரிமுனை, காமராஜர் சாலை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், போரூர், நந்தம்பாக்கம், விமானநிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


தாயாக மாறிய காவல் பெண் ஆய்வாளர்; தோளில் சுமந்து தொழிலாளியை மீட்டார்!

அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முதல் தளத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தாம்மாள் சாலையில் இடுப்பளவு மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 2 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாததால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வெளியே வர முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

Breaking: கடலுக்குள் சென்ற 9 வீடுகள்!

இதேப் போன்று கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக நேற்று முன்தினம் 71.12 mm மழையும், இன்று காலை 8 வரை 28.51 mm மழை பதிவாகி உள்ளது. அதிகப்பட்சம் புவனகிரியில் 60 mm, சேத்தியாத்தோப்பு 58 mm மழை அளவு பதிவாகி உள்ளது.


இந்த மழை காரணமாக, மாவட்டம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளது.

சின்னா பின்னமான சென்னை; மீட்பு பணி குறித்த முழு விபரம்!

குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோட்டார் பம்புசெட் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கடற்கரையில் முகத்துவாரம் வெட்டி தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கே.சி.வீரமணிக்கு மழைக்கால பரிசு?; கலெக்டர் போட்ட... பரபரப்பு உத்தரவு!

அதே சமயம், தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையினால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் என பல்வேறு தரப்பினர் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மழை சேதங்களை ஆய்வு செய்யும் முடிவை திடீரென ரத்து செய்து விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்; திருமண மண்டபமாக மாறிய பள்ளி!

இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழக மக்களுக்கு மழை நிவாரணம் அளிக்கும் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: