சனி, 13 நவம்பர், 2021

வங்க கடலில் புதிய காற்றழுத்தம் - 4 நாட்களுக்கு கனமழை - குமரி, நீலகிரியில் மழை வெளுக்கும்

 Jeyalakshmi C   -  Oneindia Tamil :  சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இன்று காற்றழுத்தமாக மாறி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய ஒட்டு மொத்த மழையும், இந்த 11 நாட்களில் கூடுதலாகவே பெய்துவிட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன. பெரும்பாலான மாவட்டங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொடர் கனமழை... வடியாத வெள்ளம் 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தொடர் கனமழை... வடியாத வெள்ளம் 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தொடரும் கனமழை தொடரும் கனமழை வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் மாலை சென்னைக்கும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கும் இடையே கரையைக் கடந்து, தற்போது ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டு அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்து சென்றாலும், தமிழகத்தின் சில இடங்களில் இன்னும் மழை நீடித்து வருகிறது. இருளில் தவிப்பு இருளில் தவிப்பு சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் இருந்தே வெயில் நிலவினாலும், சில இடங்களில் மழை பெய்தது. வெள்ளநீர் வடியாமல் உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவை திறக்கப்படவில்லை.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியவில்லை. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரியில் மழை தீவிரம் கன்னியாகுமரியில் மழை தீவிரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஓரிரு இடங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்தது.

இன்றும் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது, இன்று காற்றழுத்தமாக மாறும். பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நாளை நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வரும்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் வெள்ளம் குமரி மாவட்டத்தில் வெள்ளம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கன மழை முதல் மிக கனழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சில தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இன்றைய தினம் மழையின் அளவு சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சுற்றுலா பயணிகளுக்குத் தடை சுற்றுலா பயணிகளுக்குத் தடை இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: