வெள்ளி, 10 செப்டம்பர், 2021

தாலிபான் பாகிஸ்தான் ரகசிய டீல் - பன்ச்சீர் வலி உங்களுக்கு காஷ்மீர் எங்களுக்கு? Panjshir for Kashmir: A secret Pak-Taliban deal

 செல்லபுரம் வள்ளியம்மை  : தாலிபானுக்கு பஞ்சீர் வலியை பறித்து கொடுத்த பாகிஸ்தானுக்கு காஷ்மீரை பறித்து கொடுக்குமா தாலிபான்? இதுதான் இவர்களுக்கு இடையே உள்ள டீல்...
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி மாநிலமான பன்சீர் வலி (பன்சீர் பள்ளத்தாக்கு)  சோவியத் ராணுவத்தோடு சுமார் ஐந்து ஆண்டுகள் மோதி தங்கள் பகுதியை தக்கவைத்த பெருமைக்கு உரிய நிலமாகும்
1980 இல் இருந்து 1985 வரை சோவியத் ராணுவத்தோடு நடந்த போரில் சோவியத் ராணுவத்தால் முறியடிக்க முடியாத பெரும் படையாக இவர்களின் முஜாகிதீன் படைகள் இரு விளங்கின
இதன் தளபதியாக இருந்து  அகமத் ஷா மசூத் பாகிஸ்தானின் உதவியோடு அல் கைடா பயங்கரவாதிகளின் தற்கொலை செல்போன் குண்டு சதியால் September 9, 2001 இல்  கொல்லப்பட்டார்  
அகமத் ஷா மசூத் கொல்லப்பட்ட இரண்டு நாட்களில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை அல் கைடா நிகழ்த்தியது . இந்த சுருக்கமான வரலாற்று பின்னணியில் இருந்து கொண்டுதான் இன்று பன்ச்சீர் வலியில் நடக்கும் சம்பவங்களை நோக்கவேண்டும்
பன்ச்சீர் வலியானது ஒருபோதும் தாலிபான்களின் பாணியிலான இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
இன்று பாகிஸ்தானின் ராணுவமும்  விமானங்களும் ட்ரான் கருவிகளும் இணைந்து தாலிபான்களால் நெருங்கவே முடியாமல் இருந்த பன்ச் சீர் வலியை கைப்பற்றி தாலிபான்களுக்கு கொடுத்துள்ளார்கள்

பாகிஸ்தானியர்கள் பஞ்சீர் பள்ளத்தாக்கு  மக்களின் முதுகில் குத்தி இருக்கிறார்கள்!
இது வரலாறில் ஒருபோதும் மன்னிக்கவே முடியாத ஒரு போர் குற்றமாகமாகும்
இதற்காக சர்வதேச போர் குற்றவிசாரணைகளுக்கு இம்ரான் கான் அரசு பதில் சொல்லியாகவேண்டும்
இந்த அக்கிரமத்தை பார்த்து கொண்டிருந்த உலகநாடுகள் இனி ஜனநாயகம் பற்றியோ மனித உரிமைகள் பற்றியோ எவருக்கும் வகுப்பு எடுக்க முடியாது .
குறிப்பாக இன்றுவரை பாகிஸ்தானுக்கு எல்லா உதவிகளையும் வழங்கி கொண்டிருக்கும் அமெரிக்க உட்பட மேற்கு நாடுகள் இப்போது செய்திருப்பது மிக மிக பெரிய தவறாகும்
உலகத்து பயங்கரவாதிகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களின் கையில் ஒரு பலம் பொருந்திய நாட்டையும் ஆயுதங்களையும் வழங்கி இருக்கிறார்கள்
பாகிஸ்தானின் இஸ்லாமிய வெறிக்கு தூபம் போட்டிருக்கிறார்கள்

இன்றைய தலிபான்களின் அடுத்த குறியாக காஷ்மீர் இருக்கவேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் கோரிக்கை என்பதாக ஓரளவு வெளிப்படையாகவே பாகிஸ்தான் வட்டாரங்கள் கூற தொடங்கிவிட்டன
அது உண்மையாகவும் இருக்ககூடும்

ஆனால் பாகிஸ்தானியர்கள் தாங்கள் ஒரு அதிபுத்திசாலிகள் என்று கருதுவார்களேயானால் தவறு செய்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
தாலிபான்களின் அடுத்த குறியாக இஸ்லாமாபாத் கராச்சி லாகூர் குவைட்டா போன்றவை இருக்க மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
பாகிஸ்தானின் சொகுசு மேற்தட்டும் இடைத்தட்டும் ஒன்றும் அறியாத அப்பாவி கீழ்த்தட்டும்.
இன்று தாலிபான்களின் அபினி  இனிக்கிறதே என்று ருசித்து மயங்கினால் ,
நாளை இவர்களின் கிராமங்களில் கூட  தாலிபான்களின் பாணி காட்டுமிராண்டிகள் உருவாகலாம்.
நடந்த வரலாற்றில் இருந்து பாடம் கற்க மறுக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் அதே பாடங்களைதான் கற்பார்கள்

கருத்துகள் இல்லை: