![]() |
Ezhilarasan Babu - tamil.asianetnews : அந்த வீடியோவில் உள்ளவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி ஹரிலால் சைனி என்பதும்,
நீச்சல் குளத்தில் பெண் காவலருடன் டிஎஸ்பி ஒருவர் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு குழந்தையின் கண்ணெதிரில் அநாகரிகமாக நடந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் அந்த டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட அந்த குழந்தையின் தாயும், பெண் காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி சக பெண் காவலருடன் நீச்சல் குளத்தில் உல்லாசம் அனுபவித்துள்ள அநாகரிகம் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது, அதில் ஒரு ஆண் நீச்சல்குளத்தில் ஒரு பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக 6 வயது குழந்தையின் கண்ணெதிரில்அவர்கள் மிக மோசமாக நடந்து கொள்வது போன்ற அந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அந்த வீடியோவில் உள்ளவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி ஹரிலால் சைனி என்பதும், அவருடன் இருப்பவர் காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையில் அந்த பெண் காவலரின் கணவர் தனது மனைவி மற்றும் தனது குழந்தையின் கண்ணெதிரில் காவல் அதிகாரி ஒருவருடன் ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகார் டிஎஸ்பிக்கு எதிரானது என்பதால் அவரின் புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து அவர் ராஜஸ்தான் மாநில டிஜிபியிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட டிஜிபி இதுகுறித்து விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து களத்தில் இறங்கிய SOG சிறப்பு குழு, ஜெய்ப்பூரில் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த டிஎஸ்பியை கைது செய்தனர். அந்த பெண் காவலரும் அப்போது அவருடன் தங்கியிருந்தார், அவருக்கு குழந்தை இருபதால் அவரை கைது செய்யவில்லை, ஆனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அம்ப மாடா காவல் நிலையத்திற்கு சென்று சிறப்பு குழு அந்தப் பெண் காவலர் கணவர் அளித்த புகாரை ஏற்க மறுத்ததற்காக காவல் ஆய்வாளரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு டிஎஸ்பி பெண் காவலருடன், அதுவும் 6 வயது குழந்தையின் கண்ணெதிரில் உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக