ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்! .. பவானிப்பூர் தொகுதியில் வரும் 30 ந்தேதி இடைத்தேர்தல்!

வரும் 30 ந்தேதி  மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல்!

தினத்தந்தி  : புதுடெல்லி  : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ள பபானிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மம்தா பானர்ஜி உள்ள நிலையில் பாஜக கடும் போட்டியை கொடுக்கும் எனத் தெரிகிறது.
மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. தீவிர பிரச்சாரம் செய்த போதிலும் பாஜக தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 77 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
மேற்கு வங்காள  சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல் மந்திரி  மம்தா பானர்ஜி  சுவேந்து அதிகாரிதோல்வி அடைந்தார்.  எனினும் மேற்குவங்காள முதல் மந்திரியாக  மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவர்  6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும்.


மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில்  மம்தா பானர்ஜி போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில்  மேற்கு வங்காளத்தின் பவானிப்பூர் , சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் மற்றும் ஒடிசாவின் பிப்லி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 13, மற்றும் வேட்பாளர்கள் செப்டம்பர் 16 வரை தங்கள் மனுக்களை வாபஸ் பெற முடியும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: