திங்கள், 6 செப்டம்பர், 2021

பஞ்சிர் வலியில் 600 தலிபான்கள் கொலை! தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விமானங்கள்!

  ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் கிளப் ஹவுஸ் உரையாடல்கள் மூலம் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்சிர் வலியில் நடக்கும் போர் பற்றிய செய்திகள் கொஞ்சம் அறியக்கூடியதாக இருக்கிறது  அங்கு தற்போது வெளியுலக தொடர்பு அவ்வ்வளவாக இல்லை
பஞ்சிர் பள்ளத்தாக்கில் தாலிபானின் முக்கிய தளபதி பஞ்சிர் வலி போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார்
அதன் பின்பு பாகிஸ்தானின் விமான தாக்குதல் பஞ்சிர் வலி போராளிகளின் இருப்பிடங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது
தாலிபான்கள் பாகிஸ்தானின் அவுட் சோர்ஸ் ஆர்மி என்பதை இந்த செய்தி நிரூபிக்கிறது.
மின்னம்பலம் : மேலும் காபூலில் ஐ எஸ் ஐ எஸ் பயக்கங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க தயாராகி வரும் நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான பஞ்ச்ஷீரில் சுமார் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தானின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடிக்கிறது.ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அதன் பின் 15 நாட்கள் ஆகியும் அந்நாட்டில் முறைப்படி ஆட்சி அமைக்க முடியவில்லை. காரணம் முழுமையான ஆப்கானிஸ்தானை கைப்பற்ற அவர்களுக்கு பஞ்ச்ஷீர் மாகாண தலிபான் எதிர்ப்புப் படைகள் தடையாக இருக்கின்றன.

"நேற்று காலை முதல் பஞ்ச்ஷீர் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 600 தலிபான்கள் எதிர்ப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,000 க்கும் மேற்பட்ட தலிபான்கள் பிடிபட்டனர் அல்லது தங்களை சரணடைந்தனர்" என்று பஞ்ச்ஷீர் பாதுகாப்புப் படை எனப்படும் எதிர்ப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஃபாஹிம் தஷ்டி ட்வீட் செய்துள்ளார்.

“மற்ற ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் இருந்து பொருட்களை பெறுவதில் தலிபான்களுக்கு சிக்கல் உள்ளது. கண்ணி வெடிகள் அதிக அளவில் அங்கே புதைக்கப்பட்டுள்ளதால் தலிபான்கள் வேகமாக முன்னேற முடியவில்லை. பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தலைநகர் பஜாராக் மற்றும் மாகாண ஆளுநர் வளாகத்திற்கு செல்லும் சாலையில் எல்லாம் கண்ணிவெடிகள் அதிகம் புதைக்கப்பட்டிருப்பதால் அங்கே தலிபான்கள் நெருங்கமுடியவில்லை” என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கெரில்லா தளபதி என்று அழைக்கப்படும் மறைந்த அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் மற்றும் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேஹ் ஆகியோர்தான் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்ட தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர்கள்.

இவர்களின் தலைமையிலான படைதான் தலிபான்களை இப்போது சிதறடித்து வருகிறது. பஞ்ச்ஷீர் மாகாணத்துக்குள் தலிபான்கள் பேரிழப்பைச் சந்தித்து வருவதை ஒப்புக் கொண்டாலும், “சண்டை தொடர்கிறது” என்று தலிபான் வட்டாரங்கள் கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: