புதன், 8 செப்டம்பர், 2021

Taliban பிரதமர் , துணை பிரதமர்கள், அமைச்சர்கள் என அனைவருமே ஐநாவால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்

அரசு அமைகிறது

Velmurugan P  -  tamil.oneindia.com  : காபூல்: உலகிலேயே தேடப்படும் அரசாங்கம் என்றால் அது ஆப்கானிஸ்தானில் அமையும் புதிய அரசு தான் ஏனெனில் ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர், இரண்டு துணை பிரதமர்கள், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் என அனைவருமே ஐநா சபையால் பயங்கரவாதிகள் என பட்டியலிப்பட்டவர்கள் ஆவர்.
ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்தனர். அதன்படியே அமெரிக்க படைகளும் வெளியேறிவிட்டன,புதிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் அமைப்பதற்கு தாலிபன்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு குழுவினரிடம் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசி வருகிறார்கள். ஆப்கன் புதிய பிரதமர் : ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபன்கள் தற்போது தயாராகிவிட்டனர். இதை அங்குள்ள ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. தாலிபன்கள் 'முல்லா முகமது ஹசன் அகுந்தை' ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அரசின் தலைவராக (பிரதமர்) பரிந்துரைத்துள்ளனர். மேலும் தாலிபன்களின் தலைவர் அப்துல் கனி அரசின் துணை தலைவராகவும் (துணை பிரதமர்) பொறுப்பேற்க உள்ளார். அமைச்சர்கள் யார் யார் - மேலும் முல்லா அப்துஸ் சலாம் இரண்டாவது துணை பிரதமர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, வெளியுறவு அமைச்சராக ஆமீர் கான் முத்தாகி. ஆப்கான் இடைக்கால அரசின் துணை வெளியுறவு அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் (இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்), ஆப்கான் இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 அரசு அமைகிறது  :  இதனிடையே தாலிபன்கள் செய்தி தொடர்பாளர் அஹமதுல்லா முட்டாக் கூறும் போது, இஸ்லாமிய அரசாங்கத்தின் பிரகடனத்திற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன, அரசாங்கம் விரைவில் அமைகிறது. 40 வருட ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆட்சி செய்யும் ஒரே அரசு இதுதான்" என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை   :   தாலிபன்கள் புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் நாட்டு அரசு தலைவர்களை அழைத்துள்ளனர். அண்மையில் தாலிபன்கள் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் உள்பட எந்த நாடும் ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

தேடப்படும் அரசு   :  இதனிடையே உலகிலேயே தேடப்படும் அரசாங்கம் என்றால் அது ஆப்கானிஸ்தானில் அமையும் புதிய அரசு தான் ஏனெனில் ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர்முல்லா முகமது ஹசன் , இரண்டு துணை பிரதமர்கள், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் என அனைவருமே ஐநா சபையால் பயங்கரவாதிகள் என பட்டியலிப்பட்டவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை: