சனி, 11 செப்டம்பர், 2021

தலிபான்களின் புதிய அரசு பதவியேற்கும் விழா இன்று ரத்து... இரட்டை கோபுர தாக்குதல் தினம்

 vishnupriya R -  Oneindia Tamil:  காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று புதிய அரசு அமையும் என தலிபான்கள் அறிவித்த நிலையில் அந்த பதவியேற்பு விழாவை ரத்து செய்துள்ளனர்.
தலிபான்களின் நட்பு நாடுகளும் கூட்டமைப்புகளும் தொடர் அழுத்தத்தால் இவர்கள் விழாவை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
அப்போது அவர்களுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததால் அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் போரிட்டது.
இதனால் அவர்களின் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது. பின்னர் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தி 2004 ஆம் ஆண்டு புதிய அரசு அமைந்தது. அப்போது முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதிபராக ஹமீது கார்சாய் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அஷ்ரப் கானி அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடித்தார்.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா இப்போது தலையிடவோ தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியுமா?ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா இப்போது தலையிடவோ தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியுமா?

இந்த இடைப்பட்ட 20 ஆண்டுகளில் தலிபான்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டனர். தலிபான்களுக்கும் அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கும் ஆப்கான் படைகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். எனினும் இந்த போரில் முழு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 31 ஆம் தேதி ஆப்கானிலிருந்து அமெரிக், நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறின.

இதையடுத்து தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கான் முழுமையாக வந்தது. அஷ்ரப் கானியும் காபூலில் இருந்து தப்பி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில் ஆப்கானில் புதிய அரசு அமையும் என தலிபான்கள் கூறிவந்தனர். இதன்படி புதிய பிரதமராக முல்லாஹ் ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதமரும், மௌலவி அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர் தலைமையின் கீழ் அமைச்சரவை பட்டியலும் வெளியானது. இந்த பட்டியலில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. இந்த நிலையில் இந்த புதிய அரசு இன்றைய தினம் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலிபான்கள் இன்று அதே நாளில் புதிய அரசை அமைப்போம் என அறிவித்திருந்தனர்.

இந்த புதிய அரசின் பதவியேற்கும் விழாவுக்கு ரஷ்யா, ஈரான், சீனா, கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்டோரையும் அழைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சி அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதலின் போது அமையவிருப்பதால் அதில் கலந்து கொள்ள மாட்டோம் என பல நாடுகள் தெரிவித்துவிட்டன.

இதனிடையே தலிபான்கள் மனிதாபிமானமற்ற அடிப்படையில் இவர்கள் ஆட்சியை பிடித்தது தவறு என்பதாலும் லட்சக்கணக்கானோர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்த நாளில் பதவியேற்பது சரியில்லை என்பதாலும் அவர்கள் பதவியேற்பு விழாவை நிறுத்தி வைக்க அறிவுறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கத்தார் அரசுக்கு நெருக்கடி தந்து வந்தன.


இந்த நிலையில் இன்று தலிபான் அரசின் பதவியேற்கும் விழா ரத்தாகியுள்ளது. இதுகுறித்து ஆப்கான் அரசின் கலாச்சார ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பே தலிபான்களில் புதிய அரசு அமைக்கும் விழா ரத்தாகிவிட்டது. மக்கள் குழப்பமடைய கூடாது என்பதால் அமைச்சரவையின் ஒரு பகுதி மட்டும் பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது என அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் அந்த விழா ரத்தாகிவிட்டது.

கருத்துகள் இல்லை: