வெள்ளி, 25 ஜூன், 2021

டெசோ மாநாடும் டெலோ அழிவும்! எம்ஜியாரின் போர்க்குற்றங்கள்

தமிழ் பெட்டகம் : இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 3 .. (செல்வா ஈட்டிய  செல்வம்)
Opinion: 'Aayirathil Oruvan, MGR was truly a Man of the Millennium' -  DTNext.in

செல்லபுரம் வள்ளியம்மை : கலைஞர் கூட்டிய டெசோ மாநாடுதான் எல்லா அழிவுக்கும் காரணமாக அமைந்துவிட்டது .
டெசோ மாநாட்டை பார்த்து இலங்கை அரசாங்கம் பயணத்தை விட எம்ஜியார் அதிகமாக பயந்தார் .
தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் கலைஞரின் செல்வாக்கு கொடிகட்டி பறந்தது.
முழு உலகமும் ஈழவிடுதலை என்பது சில மாதங்களுக்கு அருகேதான் உள்ளது என்ற முடிவுக்கு வந்திருந்தன.
முழு உலகமும் ஈழவிடுதலை பற்றி எதிர்பார்த்திருந்த காலக்கட்டத்தில் எம்ஜியார் மட்டும் தனது அரசியல் வாழ்வு ஒரு முடிவை நோக்கி செல்வதாக கருதினார்.
அந்த டெசோ மாநாட்டு உத்வேகத்தை  அந்த சூரிய வெளிச்சத்தை பார்த்து எம்ஜியாரின் இருண்ட உள்ளம் குறுகி போனது..
இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று மூர்க்கத்தனமாக பிரபாகரனை தட்டி விட்டார் .
ஏற்கனவே டெலோவை கொஞ்சம் தட்டி வைக்குமாறு உமாவிடம் கேட்டு உமா மறுத்த நிலையில் பிரபா சம்மதித்திருந்தார்.
இந்த காலக்கட்டத்தில் சும்மா தட்டி எல்லாம் வைக்கவேண்டாம் ஒரேயடியாக முடித்து விடும் உத்தரவை பிரபாவுக்கு கொடுத்தார் . கூடவே பிளாட்டின் ஆயுத காண்டெயினரையும் பறித்து கொடுத்திருந்தார்.
ஊரை கொழுத்தும் சாத்தானுக்கு கொள்ளி எடுத்து கொடுத்தார் எம்ஜியார்.
டெசோ மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்து முடிவதற்கு உள்ளேயே ஸ்ரீ சபாரத்தினமும் ஏனைய சகோதர போராளிகளும் படுகொலையானார்கள்
அப்போது விடுதலை போராடடம் வெற்றிகளை  மட்டுமே குவித்து கொண்டிருந்த காலக்கட்டம்.


அன்றைய இலங்கை பாதுகாப்பு அமைச்சர் திரு லலித் அத்துலத் முதலி இதுபற்றி கூறியது என்ன தெரியுமா?
பிரிவினை போராட்டத்தை ஒடுக்குவதற்கு நாம் யாருக்கும் சப் கன்டராக்ட் கொடுக்கவில்லை. ஆனாலும் புலிகள் தாமாகவே அந்த சப் கான்டராக்ட்ஐ எடுத்து நடத்துகிறார்கள் என்றார் .
இறுதியில் அதுதான் நடந்தது!1     
பின்பு நடந்தேறிய அக்கிரமங்களை எல்லாம் உலகம் கண்டுகொண்டது  
இன்றுவரை கண்டுகொண்டே இருக்கிறது    

Prabhakar Annamalai  :  r இதிலிருந்து எனக்கு என்ன புரிதல் கிடைக்கிதுன்னா - கலைஞர் எப்போதும் போல தன்னுடைய அளப்பறிய அறிவாற்றலைக் கொண்டு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கி அனைவரையும் ஒரு பக்கமாக திரட்டி வந்த நிலையில், அட்டக்கத்தி எம்சிஆர், தன்னோட சுய ஈகோவை காப்பாற்றிக் கொள்ள இத்தனை மக்களை பலி கொடுக்கும் நிலைக்கு வழி போட்டு கொடுத்துள்ளார்...
பின்னாளில் பழி சுமந்தது, கலைஞர்!
Radha Manohar  :  கலைஞர் எப்போதும் நன்மை செய்து துன்பம்தான் வாங்கினார் .. அவர் அன்று கூடிய டெசோ மாநாடும் அகில இந்திய அளவில் கலைஞர் திரட்டிய ஈழ ஆதரவு கூட்டணியும் ஒரு பெரிய சாதனை அதை கண்டு பயந்தார் எம்ஜியார் ஒரு கட்டத்தில் ஈழ விடுதலையை பெற்று தந்தால் பத்து வருடங்களுக்கு தேர்தலில் நிற்பதை கூட திமுக தவிர்க்க தயார் என்று கூட கூறியதாக ஞாபகம் இருக்கிறது
பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமே அப்போது பெருமளவில் இருந்தன அவை இருபகுதிக்கும் உண்மை நிலைமை தெரியாமல் பார்த்து கொண்டன
அதன் பெறுபேறுதான் இன்று ஈழம் பேசுவோர் பெரிதும் ஒரு மனவளர்ச்சி குன்றியவர்கள் போல பேசுகிறார்கள்
சுப.மோகன் ராஜ்  :  உண்மைதான் சார் உமாவை டெலோவுக்கு எதிராக எம்ஜிஆர் உசுப்பேத்தியதாகவும் உமா மறுத்துவிட்டதாகவும் ப்ளோட் அமைப்பு சேர்ந்தவரே பதிவு செய்திருக்கிறார்... ஆயுத கண்டெய்னரும் உமாவோடதுன்னு நினைக்கிறேன்... இதுல பெரிய கொடுமை சபாவை விட்டுவிடுங்கள் என்று தலைவர் வேண்டுகோள் விடுத்த பிறகும் கொன்றுவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை: