வியாழன், 24 ஜூன், 2021

மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை வழக்குகள் அனைத்தும் வாபஸ் - மு.க.ஸ்டாலின்

 News18 Tamil : ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
மீத்தேன், நியூட்ரினோ மற்றும் எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடியவர்கள் மீது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியதும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களையும் வணங்கி முதலமைச்சர் உரையை தொடங்கினார். தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த தமிழக மக்களுக்கும் கொளத்தூர் தொகுதி மக்கள், வெற்றிக்கு பணியாற்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கூட்டணி கட்சியினுடைய நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான். அதாவது ஆளுநர் உரை டிரெய்லர் தான். பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் துளி அளவும் சந்தேகம் வேண்டாம். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். ஊடகங்களில் திமுகவுக்கு வாக்களிக்க வில்லை என பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றன என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் மாளிகையில் பதவியேற்றவுடன் கொரோனா நிவாரண நிதி ரூ.4000, வழங்குவதற்கான கையெழுத்திட்டேன், இரண்டு தவணைகளாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Must Read : நீட் தேர்விலிருந்து உறுதியாக விலக்கு பெறுவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம். தற்போது இல்லை இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான். கடந்த இரண்டு தினங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள் அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று கூறினார் முதலமைச்சர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, மீத்தேன், நியூட்ரினோ மற்றும் எட்டுவழிச் சாலை எதிர்த்து அறவழியில் போராடிய போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Published by:Suresh V

கருத்துகள் இல்லை: