சனி, 26 ஜூன், 2021

எம்ஜியாரின் ஆயிரத்தில் ஒருவனில்.. ஆர் கே ஷண்முகம் வெற்றிகளை குவித்த கதை வசனகர்த்தா

May be an image of 1 person

நெற்றிக்கண் மனோஹரன் : ஆயிரத்தில் ஒருவன்" கதாசிரியர் , எம்ஜிஆரின் ஆஸ்தான கதை வசனகர்த்தா ஆர்.கே.ஷண்முகம்    .
நாகப்பட்டினத்தைச்  சேர்ந்தவர் ஆர்கே சண்முகம். 10 வயதில் சென்னைக்கு வந்த அவர், திரைப்படங்களில் அடிமட்ட தொழிலாளியாக இருந்து படிப்படியாக இயக்குநர் பிஆர் பந்துலுவின் உதவி இயக்குநராக மாறினார்.
கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல சிவாஜி கணேசன் படங்களில் பணியாற்றினார்.
பின்னர் எம்ஜிஆர் படங்களுக்கு ஆஸ்தான வசனகர்த்தாவாகா மாறினார்.
ஆயிரத்தில் ஒருவன், முகராசி, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.          
இந்நிலையில் 1965ஆம் ஆண்டில் பந்துலு எம்ஜிஆரை வைத்து முதன் முதலாக உருவாக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வசனமெழுதும் வாய்ப்பினை பந்துலு இவருக்கு அளித்தபோது எம்ஜிஆர் இவரை புதுயவரென்ற கண்ணோட்டத்தில், இவர் மீது அவ்வளவாக நம்பிக்கை கொள்ளவில்லை.

'பி.ஆர்.பந்துலு பல்வேறு படங்களை இயக்கியவர். அவர், எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க விரும்பினார். கதாசிரியர், ஆர்.கே.சண்முகத்தை உடன் அழைத்து, எம்.ஜி.ஆரிடம் சென்றுள்ளார். ஆர்.கே.சண்முகம் ஒரு மணி நேரம், படத்தின் கதையை சொன்னார். 'அது பிடித்து போக, அவரிடம், 'இந்த படத்துக்கு என்ன பெயர் வைக்க போகிறீர்கள்?' என கேட்டுள்ளார், எம்.ஜி.ஆர் , அவர், 'ஆயிரத்தில் ஒருவன் என பெயர் வைக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார். சண்முகத்தை கட்டிப்பிடித்து, 1,001 ரூபாயை பரிசாக, எம்.ஜி.ஆர்., கொடுத்துள்ளார்.
இருப்பினும் இந்தப் படத்தில் சண்முகம் எழுதிய கருத்தாழமும் கவரும் விதத்திலான வசனங்களும் எம்ஜிஆரை ஒருகணம் மலைக்க வைத்தது. இப்படத்தில் எடுத்த எடுப்பிலேயே எம்ஜிஆர் வெற்றி வெற்றி என்ற முழக்கமிடுவதும் நம்பியாருடன் இவர் பேசும் எதிரும் புதிருமான வசனங்களும் படத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்றது.
நம்பியார் பேசும் ‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா’ என்பதற்கு எம்ஜிஆர் ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்று பதிலளிப்பதும், மீண்டும் நம்பியார் ‘தோல்வியை அறியாதவன் நான்’ என்று கூறுகையில் அதற்கு எம்ஜிஆர் ‘தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்’ என்று மடக்குவதும் திரையில் ரசிகர்கள் பலத்த கரவொலியுடன் ரசித்த காட்சிகளாக அமைந்தன.
மேலும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் நம்பியாருடன் சண்டையிட நேரும்போது அதற்கு தயக்கம் காட்டும் ஜெயலலிதாவிடம் ‘பொறு

பூங்கொடி கொஞ்சம் விளையாடி விட்டு வருகிறேன்’ என்று எம்ஜிஆர்
கேலியாக பேசுவதும் நினைவில் நிற்கும் வசனமாகும்.ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு சண்முகம் எழுதியிருந்த அற்புத வசனங்களால் அப்படம் நல்ல வெற்றி பெற்றதால் எம்ஜிஆரின் அபிமான வசனகர்த்தாவாக சண்முகம் உயர்ந்தார்.
தொடர்ந்து இதே ஆண்டில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர்-
ஜெயலலிதா இருவரது நடிப்பில் முதன் முதலில் உருவான,
’கன்னித்தாய்’ படத்திற்கு சண்முகம் வசனமெழுதினார்.இப்படத்திலும் எம்ஜிஆர் வெற்றி வெற்றி என்று முழக்கமிடும் வசனம் இடம் பெற்றிருந்ததது.தொடர்ந்து ஜெயலலிதாவுடன் எம்ஜிஆர் இணை சேர்ந்த இரண்டாவது படைப்பான தேவரின் ’முகராசி’(1966)
படத்திற்கும் சண்முகமே வசனகர்த்தாவானார்.

பி.ஆர்.பந்துலு பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கிய அனைத்துப் படங்களுக்கும் சண்முகமே வசனகர்த்தாவாக பணியாற்றினார்.1966ஆம் ஆண்டில் பந்துலுவின் ‘நாடோடி’ படத்திற்கும் சண்முகம் தரமான வசனங்களை அமைத்திருந்தார்.தொடர்ந்து 1969ஆம் ஆண்டில் ‘ரகசிய போலீஸ் 115’ படத்திலும் எம்ஜிஆரின் ரசனைக்கேற்ப சண்முகம் திறம்பட வசனங்களை எழுதினார்.1970ஆம் ஆண்டில் பந்துலுவின் ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்திலும் சண்முகத்தின் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.
எம்ஜிஆர் நடித்த ‘தலைவன்’, ‘நீரும் நெருப்பும்’, ரிக்‌ஷாக்காரன்.’ நல்ல நேரம்’ ஆகியப் படங்களுக்கும் எம்ஜிஆரின் பரிந்துரையின் பேரில் சண்முகம் வசனம் எழுதினார்.இப்படங்களில் எம்ஜிஆருக்காக சண்முகம் தனித்துவமாக எழுதிய வசனங்கள் எம்ஜிஆரை மட்டுமின்றி எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

1970ஆம் ஆண்டில் சத்யா மூவிஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடிப்பதாக இருந்து, பின்னர் ஜெய்சங்கர் நடித்த ‘கன்னிப்பெண்’ படத்திற்கும் சண்முகமே வசனமெழுதினார்.
தொடர்ந்து ‘சிரித்து வாழவேண்டும்’, ‘நினைத்ததை முடிப்பவன்’,
‘ஊருக்கு உழைப்பவன்’ ஆகியப் படங்களிலும் சண்முகத்தின் முத்தான வசனங்கள் இடம் பெற்றன.வசனமெழுதுவதில் சண்முகத்திடம் குடி கொண்டிருந்த அபாரத் திறமை அவருக்கு கலைமாமணி என்ற விருதை ஈட்டிக் கொடுத்தது, ஆர்கே சண்முகத்துக்கு, எம்ஜிஆர்தான் ஒரு வீட்டை பரிசாக வழங்கினார்.

இன்றைக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், ஏன் இப்போது வரும் புதுமுக நடிகர்கள் கூட பஞ்ச் டயலக் என்றழைக்கப்படும், நறுக்கான வசனங்களை தங்கள் படங்களில் பேசுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால் இந்தப் பாணியை 50 ஆண்டுகளுக்கு முன்னரே எம்ஜிஆர் படங்களின் வாயிலாக வெளிப்படுத்தி தனது ஆற்றலை வெளிப்படுத்தியப் பெருமை சண்முகத்திற்கு உண்டு.இவர் வசனமெழுதியிருக்கும் எம்ஜிஆர் படங்கள் இவரை நம் கண் முன்னே கொண்டு வருவது திண்ணம். 12.9.2017 தனது 87-ஆவது வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை: