செவ்வாய், 22 ஜூன், 2021

சுஜாதாவின் சிவசங்கர் பாபா பாசமும் சிவாஜி மீதான வெறுப்பும்

கலைஞரின் வசனங்கள் புறநானூற்று சேரன் செங்குட்டுவனாக நடிகர் திலகம் சிவாஜி  கணேசன் - YouTube
சிவசங்கர் பாபாவை ஆஹோ ஓஹோவென புகழ்ந்திருக்கும் எழுத்தாளர் சுஜாதா! | Webdunia  Tamil

M S Rajagopal : சுஜாதாவைப் பற்றிய பதிவு தங்களை புண்படுத்தி இருப்பதாக அவருடைய வாசகர்கள் வருத்தப்படுகிறார்கள்.  விமர்சனங்களில் இது தவிர்க்க முடியாதது.
      சுஜாதா கலை இலக்கியத் துறையில் பிறர் மீது வைத்த விமர்சனங்களை பார்ப்போம்.
அது எழுபதுகளின் இறுதி என்று எண்ணுகிறேன்.  சுஜாதாவிடம் ஒரு வார இதழ் நிருபர் பேட்டி காண்கிறார்.
தமிழ் திரையுலகு என்று  பெருமை கொள்ள எதுவுமில்லை.  இங்கே பாலச்சந்தர் போன்றவர்கள் சிறந்த இயக்குநர்களாகவும் சிவாஜி கணேசன் நடிப்பு சிறந்த நடிப்பாகவும் கருதப்படும் வரை உலக அரங்கில் தமிழ் திரையுலகு அதளபாதாளத்தில்தான் கிடக்கும்." என்று பேட்டி அளிக்கிறார்.
 இவ்வளவு தெளிவாக உலக சினிமா அளவுக்கு தமிழ்த் திரையுலகை கொண்டு செல்லவேண்டுமென்ற துடிப்பு கொண்டவர் கதைவசனம் எழுதிய திரைப்படம் கமல்ஹாசன் நடித்த விக்ரம் எனப்படும் ஒரு திரைப்படம்.  
இது தமிழ்சினிமாவை ஒரு அங்குலம் ஜாக்கியை வைத்து உயர்த்தியது.
அதன்பிறகு சில சங்கர் திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதினார்.  பாய்ஸ் படம் தரமான வசனங்களுக்கு பெயர் போன படம்.  மாணவர்கள் ஐந்து பேர் ஷாப்பிங் மாலுக்கு சென்று அங்கு வருகிற பெண்களை கொய்யாக்காய் மாங்காய் தேங்காய் என்று வர்ணிப்பதாக வசனங்களை எழுதியிருப்பார்.



         இந்தியன் படம் அவருடைய மாஸ்டர் பீஸாகும்.  அவரைப் பொறுத்தவரை அரசு காண்டிராக்டர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களை மிகவும் குறைவான தரத்தில் நிறைவேற்றுவது ஊழல் அல்ல.  
விஏஓ பணம் வாங்குவது, ஈபி ஊழியர் பணம் வாங்குவதுதான் ஊழல்.  அந்நியன் கூட அவருடைய கதைவசனம்தான்.  கண்டக்டர் ஐந்து பைசா மிச்சம் கொடுக்காததுதான் மாபெரும் ஊழல்.  

        சிவாஜி எந்திரன் போன்ற படங்கள் ஒலக்க தரத்தில் இருந்ததை உலகு அறியும்.  
ஒரே பழமொழிதான்!
"எல்லாம் சொல்லுமாம் பல்லி
கழனிப்பானையில் விழுமாம் துள்ளி".

 

 Abilash Chandran :சிவசங்கர் பாபா பற்றி எழுத்தாளர் சுஜாதா…
‘வீடுமின் முற்றவும்’ என்று சொன்ன நம்மாழ்வாரைக் காட்டிலும் சுருக்கமாக, ’விடு, வீடு’ என்று உபதேசித்து, சுவிஸ் சாக்லேட் தந்து என்னை ஆசீர்வதித்த சிவசங்கர் பாபாவை ஒரு ஹைடெக் யோகி என்பேன். ஐ.எஸ்.டி.என். கனெக்ஷன் மூலம் உலகோடு பேசுகிறார்; உறுத்தாமல் உபதேசிக்கிறார்.
கேளம்பாக்கத்தை அடுத்த அவரது ‘சம்ரட்சணா’ வசதிகள் 35 ஏக்கரில் பரவியுள்ளன. ஆஸ்பத்திரி அஞ்சு நட்சத்திர ஓட்டல் போல் இருக்கிறது. கட்டணம் ஒரு நட்சத்திரம் கூட இல்லை; இலவசமாம். வயசானவர்களுக்கு நிம்மதி தர, ஆரோக்கியமான சூழ்நிலையில் வீடுகள் கட்டிக் கொடுத்து, ‘கம்யூனிட்டி லிவிங்’ என்று அவரவருக்கு டியூட்டி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

‘சுஷீல்ஹரி’ சர்வதேசத் தரம் வாய்ந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் ப்ளஸ் டூ வரை படிக்கிறார்கள். ஆசிரியர்கள் எல்லோரும் தன்னார்வலர்கள். கிராம மேம்பாட்டுக்கான சேவைகள், இலவச கல்யாணம், கராத்தே, ஜிம், விளையாட்டு மைதானங்கள், வேலைவாய்ப்பு, திறந்த கோயில்கள், மசூதி, சர்ச், ஜெயின் கோயில், புத்த விஹாரம்… இத்தனையையும் ஒருவர் தீர்மானித்து ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றியது வியக்க வைக்கிறது.

எல்லாம் உடலுழைப்பு; மன வைராக்கியம். இதனை இதனால் இவன் முடிக்கும் என்று அவரவருக்கு அவரவர் பணிகளைப் பிரித்துக் கொடுத்து, பசுமையும் மரங்களும் மலர்களும் சூழ்ந்த ஆரோக்கியமான தனி நகரம் அமைத்திருக்கிறார். அக்கடா என்று போய் இருந்துவிடலாமா என்று தோன்றியது.
ஆனால், அவ்வளவு சுகஜீவனமிருந்தால் எனக்கு எழுத வராது. என்னை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் மயிலாப்பூர் கொசுக்களும், நிசாசரர்களான தண்ணி லாரிகளின் நியூட்ரல் உறுமல்களும், அக்கம்பக்கத்தில் குழந்தைகளின் கீச்சுக்குரல் அலறல்களும், அண்டை வீட்டில் இதற்கு மேல் சத்தமாக வைக்க முடியாத டி.வி-யும், எங்கள் ‘கிவி’யின் அவ்வப்போதைய ‘வள்’ளலும் எழுதத் துணையாக வேண்டும்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களைக் கருவியாக வைத்து அமைப்புகள் தோன்றுகின்றன; விஸ்தாரம் அடைகின்றன; பரவுகின்றன. மேல்மருவத்தூர், கீழ்மின்னல், அமிர்தானந்தமயி, புட்டபர்த்தி என ஒருவரைக் குவி மையமாக வைத்து, அவர் பேர் சொல்லி அற்புதச் செயல்களும், தர்ம காரியங்களும் நிகழ்கின்றன. இறைவன் ஏதோ ஒரு காரியத்துக்காக பிரத்யட்சமாகத் தோன்ற விரும்பாத இந்த யுகத்தில், இவர்கள்தான் பிரதிநிதிகள்.

சிவசங்கர் பாபா என்னிடம் ஒரு யாக நெருப்பின் போட்டோவைக் காட்டி, ‘ருத்ர தாண்டவம் போலத் தோன்றுகிறது, பாருங்கள்’ என்றார். என் வைணவக் கண்களுக்குப் புல்லாங்குழல் கிருஷ்ணன் போல இருந்தது. அசப்பில் இயேசுவும் தெரிந்தார். ‘அவரவரிறையவர் குறைவிலர்’. (Abilash Chandran என்பவரின் முகநூல் பதிவு)

கருத்துகள் இல்லை: