புதன், 23 ஜூன், 2021

நீர் வளக் கமிட்டி! பொருளாதார குழு போன்று விரைவில்..

 மின்னம்பலம்  : தமிழகத்தின் நீர் வள ஆதாரத்துக்காகத் தனி கமிட்டி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதலில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது.
அதைத்தொடர்ந்து 16ஆவது சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தொடரில், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும்.
அந்த குழுவில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், , ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்தார்.



அதுபோன்று தமிழக அரசு, மாநிலத்தின் நீர் வளத்தைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதல்வருக்கான பொருளாதார குழு போன்று தனிக் குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

“தமிழகத்தில் விவசாயத்தை செழுமைப்படுத்தும் நோக்கில், நீர் ஆதாரங்களை வளப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதன்மூலம் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட தண்ணீர் பிரச்சினைகள் ஏற்படாதவாறு தடுக்கப்படும்” என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

கருத்துகள் இல்லை: