சனி, 26 ஜூன், 2021

ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழ்நாடுதான் கர்நாடகாவுக்கே தண்ணீர் கொடுக்கிறது!:

May be an image of waterfall and nature
May be an image of outdoors

Kannan Rajan  :   ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.! தமிழ்நாடுதான் கர்நாடகாவுக்கே தண்ணீர் கொடுக்கிறது!:
அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா!
தமிழ்நாடு  மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான்.
இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.



பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.
ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது தமிழ்நாடு  விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.
தற்போது இந்த கோரிக்கையானது தமிழ்நாடு  முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அது மேகதாது அணைக்கு எதிராக திரும்பி விட்டால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார்கள்.
*#அதிகம் பகிருங்கள் விவசாயத்தை காப்பதர்க்கு*
*#உங்கள் காலில் விழுகிறேன் தயவு செய்து தங்கள் நண்பர்கள் மற்றும் குரூப் அனைத்திர்க்கும் பகிருங்கள் விழித்தெழும் நேரம் இது
Kirubakaran

கருத்துகள் இல்லை: